Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

சிரேஸ்ட ஊடகவியலாளர் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்! -

அரசுக்கு எதிராக கோசம்!!

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று (02.08.11) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிரேஸ்ட ஊடகவியலாளர் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து கோசங்களை எழுப்பியுள்ளனர்.

ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறையை மேற்கொள்ளாதே -தகவல் சுதந்திரத்தை தடுக்காதே - ஊடகப் படுகொலையை நிறுத்து - எழுது எழுது அநியாயங்கள், சமூக விரோதங்களை எழுது - பத்திரிகை ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை உடன் நிறுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை நிறுத்து - உண்மை மீதான தாக்குதல் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், 'அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் தேர்தல் முடிவுகளின் காரணமாகவே உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வெளி வருகின்ற உதயன் பத்திரிகை தமிழ்த் தேசியத்தை கட்டியெழுப்புகின்ற பத்திரிகை என்பதுடன், தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பத்திரிகையுமாகும். இந்நிலையில், தமிழ்த் தேசிய சிந்தனைக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபை தேர்தல் பரப்புரை காலகட்டத்தில் நான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளையில் உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதனை சந்திருந்தேன். இதன்போது குகநாதன் தனக்கு ஆபத்து இருப்பதாக என்னிடம் கூறினார்.

உதயன் பத்திரிகை மீது தொடர்ச்சியான முறையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்க அநீதியான செயல்' என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் உபதலைவர் நிக்ஸன், 'உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது ஊடக ஒடுக்குமுறைக்கான தாக்குதலாகும்.

2000ஆம் ஆண்டு முதல் ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடருகின்றன. யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தான் தெரிவிக்கும் கருத்துக்களை மாத்திரமே எழுத வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ளது.

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் நீதியான விசாரணை நடத்த வேண்டும் என்பதுடன், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் ஊடகத்துறை அமைச்சு ஊடக ஜனநாயகம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றின் மீது ஊடகவியலாளர்களுக்கு உள்ள நம்பிக்கை இல்லாமல போய்விடும்' எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் பாரதி கருத்துத் தெரிவிக்கையில்,'உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை நாம் தனிப்பட்டதொரு தாக்குதலாக பார்க்கவில்லை. ஊடகங்களின் குரலை அடக்குவதற்கான ஒரு நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகவே நாம் காண்கின்றோம். இந்த நிலையில், இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், புதிய இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={064A16D0-A8E6-4E60-97B6-926746195669}

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கள ஊடகவியலாளர்களும். முன்னணி அரசியல்வாதிகளும் கலந்து கொண்டாலும்...

ஐ.தெ.க. சார்பில் கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தால்.....

தமிழ் மக்கள் மீது அவர்களது அக்கறையை புரிந்து கொண்டிருக்க முடியும்.

எனினும்... ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.

  • தொடங்கியவர்

எமது உறவுகளான இஸ்லாமிய சகோதரர்களும், அரசியல்வாதிகள் / ஊடகத்துறையினர், கலந்துகொள்ளவில்லை போலவும் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுகளான இஸ்லாமிய சகோதரர்களும், அரசியல்வாதிகள் / ஊடகத்துறையினர், கலந்துகொள்ளவில்லை போலவும் தெரிகின்றது.

அவர்களுக்கு இது ரமழான் நோன்பு மாதம். இப்படியான போராட்டங்களில் கலந்து கொள்வது அவர்களின் கொல்கைக்கு இலுக்கானது.

அவர்களுக்கு இது ரமழான் நோன்பு மாதம். இப்படியான போராட்டங்களில் கலந்து கொள்வது அவர்களின் கொல்கைக்கு இலுக்கானது.

Protest%20%20for%20Journalist%20attack.jpg

Tamil%20Media%20alliance002.jpg

Tamil%20Media%20alliance012.jpg

And see all pictures on Flickr click here

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.