Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் சிங்கள தேசிய புலனாய்வுத் தலைமையகம் கோத்தாவின் திட்டம் அம்பலம்

Featured Replies

ங்கட்கிழமை, ஆகஸ்ட் 15, 2011

Gotabaya%20Rajapaksha.jpg

Lieutenant Colonel Nandasena Gotabhaya Rajapaksa RWP, RSP, GR

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் செயற்படு இயந்திரமாக விளங்கும் சிறிலங்கா தேசிய புலனாய்வு சேவையின் இரண்டாம் தலைமையகத்தினை யாழ்ப்பானத்தில் நிறுவ கோத்தா
(
Lieutenant Colonel Nandasena Gotabhaya Rajapaksa RWP, RSP, GR
) திட்டமிட்டுள்ளார்.

சிறிலங்கா தேசிய புலனாய்வு சேவை
(State Inteligence Service - SIS)
இந்தப் பெயரைக்கேட்டாலே அது சிறிலங்காவின் இரத்தம் தோய்ந்த சிங்கத்தின் நகங்களையும் தாடைகளையும் தான் நினைவு படுத்தும். அந்தளவு தமிழர் மீது மிருகத்தனமாக கட்டவிழ்த்துவிடபப்டும் அனைத்து படுகொலைகள், ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் ஆகியவற்றை நீண்டகால அடிப்படையில் செய்துவருவது இந்த எஸ்.ஐ.எஸ் எனப்படும் புலனாய்வு சேவைதான்.

இதுவரை காலமும் தமிழர்களை ஒடுக்க செயற்பட்டுவந்த இந்த கட்டமைப்பு இப்போ தமிழர்கலை அடக்குவதுடன் கூடவே மேலும் இரண்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளது. அதற்காகவே யாழ்ப்பானத்தில் அதன் இரண்டாவது தலைமையகத்தினை செயற்படுத்த உள்ளது.

.
கோத்தாவின் முழு கட்டுப்பாட்டின் கீழ் மீழ் கட்டமைப்பு

சிங்கள அரச புலனாய்வு சேவையினை மீழ் புனரமைக்கும் பொருட்டு அது கோத்தபாயவின் நேரடிக்கட்டுப்பாட்டில் அமுலுக்கு வரும் வகையில் மஹிந்த கட்டளையிட்டுள்ளார்.இதுவரை காலமும் பகுதியான கட்டுப்பாடே கோத்தாவின் அதிகாரத்தில் இருந்தது சிலபிரிவுகள் பொலிஸ் தலைமையகத்தின் கீழ் இருந்தது. புதிய மீழமைப்பின் பிரகாரம் எஸ.ஐ.எஸ். இன் தலைமைப்பொறுப்பினை கோத்தா தனது நண்பரும் மிக நெருங்கிய சகாவும் பல்வேறு படுகொலைகளை கோத்தாவின் கட்டளையின் கீழ் செய்து வருபவருமான சந்திரா நிமால் வகிஸ்ர என்ற பொலிஸ் அதிகாரியை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகஹ்டியில் இருந்து
Gajanayake.jpg

Gajanayake

நியமித்துள்ளார்.தற்போது பதவியில் இருக்கும் கஜனாயக்கா பதவியில் இரூந்து தூக்கப்படுகின்றார். இவர் கோத்தாவுடன் அதிகமாக ஒத்துழைக்க மறுக்கின்றார் என்பதே குற்றச்சாட்டு.

அமெரிக்காவின் சீஐஏ, இந்தியாவின் ரோ, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஏ போன்ற புலனாய்வு அமைப்புக்களிற்கு சமமான அதிகாரங்கள் ,மற்றும் பணிகளை செய்வதே மீழ கட்டமைப்பின் நோக்கம்.

.
யாழ்ப்பாண தலைமையகத்தின் பிரத்தியேக பணிகள்

அ. உள்ளகப்பணி

.1. தமிழ் அமைப்புக்கள் மற்றும் கல்லாச்சார கட்டமைப்பிற்குள் நீண்டகால ஊடுருவல்களை மேற்கொண்டு பிரிவினை வாதத்தினை முறியடித்தல்.

2. நாடு பூராகவும் உள்ள அரசுக்கு எதிரான அல்லது மஹிந்த குடும்பத்திற்கு எதிரான சக்திகளை இனங்கண்டு அவற்றினை ஒழித்தல்.

3. நாடு பூராகவும் உள்ள அமைப்புக்கள், அரச திணைக்களங்கள்,அரச சார்பற்ற அமைப்புக்கள், கிராம அமைப்புக்கள் வரை ஊடுருவல்கலை செய்தல்.

4. அனைத்து தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்கும் சிறப்பு பிரிவு ஒன்றினை நவீன வசதிகளுடன் உருவாக்கல்

5.விசேட சித்திரவதை முகாம் ஒன்றினை யாழ்ப்பானத்தில் நிறுவுதல் ( இது மஹிந்த குடும்பத்திற்கு எதிராக செயற்படும் சிங்களவர்களை விசாரிப்பதற்கு)

.
ஆ. வெளியகப்பணி

1. தமிழ் நாட்டு மீனவர்கள் மீதான இரகசிய நடவடிக்கை.

2. தமிழக ஊடுருவல்களை தடுப்பது மற்றும் தமிழ் நாட்டுக்குள் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலும்.

3. கடல் நடவடிக்கைகளை கண்காணித்தல், இரகசிய கடல் நடவடிக்கைகளை வழி நடாத்துதல்.

வெளியகப்பணியின் ஆலோசகராக ரொஹான் குணரட்ன

வெளியகப்பணியின் ஆலோசகராக ரொஹான் குணரட்னவும் நியமனம் பெற்றுள்ளார். இவர் புதிதாக உருவாக்கப்படும் தொலைத்தொடர்பு ஒட்டுக்கேட்டல் மற்றும் தகவல் சேமிப்பு பிரிவில் ஆலோசகராக இருப்பார். வெளி நாடு தொடர்பான, இராஜ தந்திரிகள் தொடர்பான ஒட்டுக்கேட்டல்கள் இவருக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றை பகுப்பாய்வு செய்வதில் ரொஹான் குணரட்ன முக்கிய பங்காற்றுவார்.
Rohan%20Gunaratna.jpg

Rohan Gunaratne

ரொஹான் குணரட்னவும் புதிதாக நியமிகபப்ட்ட கோத்தாவின் இரகசிய கொலைப்படையின் தலைவரும் தற்போதைய எஸ்.ஐ.எஸ் இன் பணிப்பாளருமான நிமால் வஸ்கிர என்பவரும் நீண்டகால நண்பர்கள் ஆவர். அந்த வகையிலேயே ரொஹான் குணரட்னவிற்கு இந்தப்பதவி. மட்டுமன்றி அவருக்கு அரச சம்பளமும் மேலதிக படிகளும் வழங்கபப்டும். ( குறிப்பு: அரச புலனாய்வுப்பிரிவில் சம்பளம் பெற்று கடமையாற்றும் ரொஹான் குணரட்னவை போர்க்குற்றச்சாட்டின் கீழ் அம்பலப்படுத்தவேண்டும்).

புதிய எஸ்.ஐ.எஸ். இன் பணிப்பாளர் சந்திரா நிமால் வகிஸ்ர

ஏனென்றால் நிமால் வஸ்கிர அல்லது வக்கியா என்ற புனை பெயரை உடையவர் தான் தமிழ் இளையோரை கூடுதலாக கொன்று குவித்தவர். இவன் 1997 இல் இருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு ( TID) தலைவனாக இருந்து வந்தவன்.இந்த கொடூரனின் சிக்கிய தமிழ் பெண்கள், ஆண்கள் எப்போதுமே தப்பியது கிடையாது.அப்படி தப்பிய சிலர் ஐந்து தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரையான
Chandra%20Nimal%20Wakista.jpg

Chandra Nimal Wakista (NEW SIS Director)

தொகைகளை கொடுத்தே தப்பியுள்ளனர். இதில் கோத்தபாயவிற்கும் பெரும் பங்குண்டு. அகில இலங்கை புத்த சாசன சங்கத்தின் உப தலைவராகவும் நிமால் வகிஸ்ர (Mr. Chandra Nimal Wakista 39 A, Samaru Niwasa, Kepettipola Mawatha, Colombo.) இருக்கின்றார். தூய்மையான புத்தத்தின் பாதுகாவலர்களாக இலங்கையில் கொலைவெறியர்களே இருக்கின்றமை புதுய விடயமல்ல.

மேலும் நிமால் வகிஸ்ர என்கின்ற புதிய தேசிய புலனாய்வு சபை இயக்குனர்தான் பூசாவில் நடக்கின்ற அனைத்து தமிழ்க்கைதிகளின் துன்பங்களுக்கும் காரணம். பூசா முகாமில் இருக்கும் கன்ரீன் இவனது நேரடிக்கட்டுப்பட்டில்தான் உள்ளது. அங்குவைத்தே பல டீல்களை கைதிகள் தொடர்பில் மேற்கொள்வார்கள்.

யாழ்ப்பானத்தில் நிறுவபப்டவிருக்கும் புதிய தேசிய புலனாய்வு தலைமையகமானது தமிழர்களின் இருப்பிற்கான சாவு மணிகளில் மேலும் ஒன்றாக இருக்கும். மட்டுமன்றி அது சிங்கள அதிருப்தியாளர்கள், மனித உரிமையாளர்கள்,பத்திரிகையாளர்கள், இராஜதந்திரவாடிகளை பந்தாடும் ஒரு கொலைக்களமாகவும் இருக்கும்.

மூலங்கள் சிங்கள நாளேடுகள். தமிழில்
தொகுப்பு: ஈழநாதத்திற்காக தாமரை

Edited by உமை

ஏற்கனவே யாழில் இந்த கோத்தபாய புலனாய்வு குழுக்களும் இராணுவமுமே அதிகாரம் செய்கிறன.

யாழில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தின் மீதும், அமெரிக்க கலாச்சார நிறுவனத்தின் மீதும், அவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் மீதும் கூட இந்த புலனாய்வு கூட்டம் கண் வைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.