Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனுடன் வை.கோ சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vaiko-new2-300x225.jpg

பிரசுரித்தவர்: admin August 17, 2011

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ, ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர், இன்று (16.8.2011) காலை, வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைச் சந்தித்தனர்.

சிறைவாயிலில் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருபெரும்புதூர் சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத, எக்குற்றமும் செய்யாத நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் சந்தித்தேன்.

இம்மூவரின் கருணை மனுக்களையும் நிராகரித்து, குடியரசுத் தலைவர் மரண தண்டனையை உறுதி செய்து உள்ளபோதிலும், தூக்குத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு மூவரும் இருக்கின்றனர்.

இவ்வாறு, குடியரசுத் தலைவர் தூக்குத் தண்டனையை உறுதி செய்த பின்னரும், அது பின்னர் ரத்துச் செய்யப்பட்டதற்கு, பல முன்னுதாரணங்கள் உள்ளன.

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுள் ஒருவரான குருசாமி என்பவருக்கு, தூக்குத்தண்டனை குடியரசுத் தலைவரால் உறுதி செய்யப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான நாளும் குறிக்கப்பட்ட பின்னர், அப்போதைய உள்துறை இணை அமைச்சர் வெங்கடசுப்பையா அவர்களிடம் நான் முறையிட்டதன்பேரில், அவரது தூக்குத் தண்டனையை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் அத் தண்டனையும் ரத்தாகியது.

பின்னர் 2000இல், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கும், இதேபோல தூக்குத் தண்டனை குடியரசுத் தலைவரால் உறுதி செய்யப்பட்ட பின்னர், அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களிடம் நான் கோரிக்கை தந்து, நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ரத்தானது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சி.ஏ. பாலன் என்பவருக்கு, குடியரசுத் தலைவர் மரண தண்டனையை உறுதி செய்தபின்னர், நம்பூதிரிபாடு அவர்களின் கம்யூனிஸ்டு அமைச்சரவையில், சட்ட அமைச்சராக இருந்த வி.ஆர்.

கிருஷ்ணய்யர், “மத்திய அரசு பாலனின் மரண தண்டனையை ரத்துச் செய்யாவிட்டால், மாநில அரசு, அரசியல் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் ரத்துச் செய்ய நேரிடும்” என்று தெரிவித்ததன்பேரில், பாலனின் தூக்குத்தண்டனையை மத்திய அரசு ரத்துச் செய்தது.

அதுபோல, இன்றைய நிலையிலும், இம்மூவரின் தூக்குத்தண்டனையையும் ரத்துச் செய்ய இயலும். குற்றம் செய்யாமலேயே, இருபது ஆண்டுகள் சிறைக்கொட்டடியில், இவர்களின் இளமை வாழ்வு அழிக்கப்பட்டு விட்டது. 13 ஆண்டுகளாக, மரணக் கொட்டடியில் ஒவ்வொரு நாளும், அவர்கள் அனுபவித்து இருக்கின்ற துன்பம், தூக்குத் தண்டனையை விடக் கொடுமையானது.

இந்த வழக்கு, ஜனநாயக விரோதமான தடா சட்டத்தின்கீழ் புனையப்பட்டது. காவல்துறை சித்திரவதை செய்து பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தண்டனை என்பதால், நீதியின் கதவுகள் மூடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 41 பேர்களுள், 26 பேர்களுக்கு தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. அவர்களுள் 19 பேர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. உச்சநீதிமன்றத்தால் தூதூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்ட நளினியின் தூக்குத் தண்டனையும் பின்னர் குறைக்கப்பட்டது. அதே அளவுகோல்தானே இவர்களுக்கும் இருக்க வேண்டும்?

எனவே, கருணை உள்ளத்தோடு இரக்கம் காட்டி, இந்த மூன்று உயிர்களையும் காக்க, தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், ஆவன செய்ய வேண்டும் என, இம்மூவரும் வேண்டுகின்றனர். நானும் வேண்டுகிறேன்.

கோடிக்கணக்கான தமிழர்களும் வேண்டுகின்றனர். உலகம் முழுமையும் உள்ள தமிழர்களும் வேண்டுகின்றனர்.

எனவே, தமிழக முதல்வர் அவர்கள், இம்மூவரின் உயிரைக் காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

http://mykathiravan.com/ta-news/?p=13488

Edited by தமிழ் அரசு

இதில் கவனத்தை சிதறவிட்டு முக்கிய பிரச்சனைகளை மறந்துவிடாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.