Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் அரசுக்கான கால அவகாசம் நாளையுடன் முடிகிறது: கோரிக்கைக்கு இணங்காவிடில் பேசிப்பயனில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Suresh-Premachandran_150.jpg

[Wednesday, 2011-08-17 11:02:52]

அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது. அரசிடமிருந்து இதுவரையில் எந்தவிதமான பதிலுமில்லை. தீர்வுத்திட்டம் தொடர்பிலான மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு இணங்காவிடின் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வாய் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ அரசிடமிருந்து பதிலை கூட்டமைப்பு எதிர்பார்க்கின்ற போதிலும் அவர்கள் வெறுமனே சம்பந்தம் இல்லாமல் ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இந்த நிலை நியாயமான அரசியல் தீர்விற்கோ பேச்சுவார்த்தையின் எதிர்காலத்திற்கோ சாதகமாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 4ஆம் திகதி அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பான 10 ஆவது சுற்றுப் பேச்சை முன்னெடுத்தபோது ஆட்சி அதிகார முறைமை மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான விடயதானம் மற்றும் செயற்பாடுகள் வரி, நிதி தொடர்பிலான அதிகாரங்கள் என்ற மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு அரசிடம் வாய் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ நிலைப்பாட்டை நாம் கோரினோம்.

இதற்காக இரண்டு வார கால அவகாசத்தையும் வழங்கினோம். நாளை வியாழக்கிழமையுடன் மேற்படி கால அவகாசம் நிறைவடைகின்றது. ஆனால் இதுவரையில் எந்தவிதமான உத்தியோகப்பூர்வ பதிலும் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்திற்காகவும் விரைவான அரசியல் தீர்விற்காகவும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான வாய் மூலமாக கூட கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்காத போது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை எட்டுவது என்பது எந்தளவிற்கு சாத்தியப்படும்.

பல அமைச்சர்கள் எமது நிபந்தனைகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால் அரசாங்கமோ நேரடியாக எம்மிடம் பதில் கூற மறுக்கின்றது. எனவே பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் அரசாங்கம் வழங்க உள்ள மூன்று அம்சக் கோரிக்கையின் பதிலிலேயே தங்கியுள்ளது என்றார்.

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ௬ட்டமைப்பு உறுதியாக உள்ளதா......? உங்களால் ஒரு தீர்மானம் எடுக்க முடியுமா.....? என்னைபொறுத்தவரை இவர்களுக்குள் பல பிரச்சனை சிலர் இந்தியா ஆதரவு கொள்கையுடையவர்கள் அதன் காரணத்தால் இந்தியாவின் கருத்தையும் உள்வாங்க வேண்டியிருக்கும்!

Edited by தமிழ் அரசு

இந்தக் காலக்கெடு மட்டுமென்ன இவர்களது சொந்தப் புத்தியா?

அந்த ஜனநாயக காட்டுமிராண்டிகளின் ஆலோசனையாம்! இது தான் உண்மை!

இல்லையென்றால் விவேகமற்ற உந்தக் கூட்டம் இன்னுமொரு 10 பேச்சுவார்த்தைகளுக்கும் போய் "பிளேன் டீ" குடிச்ச திருப்பதியோட இருந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரையும் ஏதாவது குறிப்பிட ௬டிய நடவடிக்கை ௬ட்டமைப்பு எடுத்ததாக யாராவது அறிந்தீர்களா .......?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.