Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ விவகாரம் குறித்து காங்கிரஸ். எம்.பி. திடீர் கூட்டம்!

Featured Replies

ஈழ விவகாரம் குறித்து காங்கிரஸ். எம்.பி. சுதர்சன் நாச்சியப்பனின் 'துயரும் தீர்வும்' திடீர் கூட்டம்!

இந்திய, இலங்கை மீனவர்கள் உறவு மற்றும் பிரச்சினை குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளார்.

இன்று இடம்பெறும் இந்தக் கூட்டத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் அழைத்துள்ளார். ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்த விவாதம் ராஜ்யசபாவில் அடுத்த வாரம் வரும் நிலையில் சுதர்சன நாச்சியப்பன் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கலந்துரையாடல் சந்தேகங்களை எழுப்பி உள்ளதாக இந்திய ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் - மனித உரிமைகள் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக விளங்கும் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இலங்கைக்கு அழைத்துச் சென்ற போது அதில் சுதர்சன நாச்சியப்பனும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, சிபிஐயைச் சேர்ந்த எம்.பி அப்பாத்துரை உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கூட்டம் இலங்கையின் ரகசிய ஆதரவுடன் நடைபெறும் கூட்டம் என்ற சந்தேகம் இருப்பதால் டி.ராஜா கலந்து கொள்ள மாட்டார் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தக் கூட்டம் தொடர்பாக தன்னை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரையிடம் சுதர்சன நாச்சியப்பன் பேசும் பொது இலங்கையில் நடந்த தவறுக்கெல்லாம் விடுதலைப் புலிகளளே காரணம், இலங்கை அரசின் சமரச முயற்சிகளுக்கு புலிகள்தான் தொடர்ந்து ஊறு விளைவித்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும் பிரச்சினையை பெரிதுபடுத்தி விட்டனர். உண்மையில் பிரச்சினைகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம் எனவும் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக தான் கருதவில்லை எனவும்; நாச்சியப்பன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு – சுதர்ஸன் நாச்சியப்பனே அழைப்பு விடுத்துள்ளார்:-

வடககு கிழக்கைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பாக ஏழு தமிழ் அரசியல் கட்சிகளை அழைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஸன் நாச்சியப்பன் தலைமையில் இயங்கும் மனித உரிமைகள் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே தமிழ்க் கட்சிகளுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

துயரும் தீர்வும் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் இந்த கருத்தரங்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ரெலோ உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கருத்தரங்கில் தங்களது பிரதிநிநிதிகளை அனுப்பி வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும் சில தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: உலகத் தமிழ் செய்திகள்

தமிழினப் படுகொலையில் பிரதான பங்கு வகித்த பயங்கரவாதிகளின் தொடரும் கூடுச் சதியாகவே தமிழ்க் கட்சிகளின் இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் பயங்கரவாதிகள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

இதன் பிரதான நோக்கம் (வெளியில் சொல்லப்படாத) போர்க்குற்றங்களில் இருந்து, சம்பந்தப்பட்டவர்களை, சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களைக் காப்பாற்றுவதே ஆகும். அத்துடன் கூடுச் சதிகாரர்களில் ஒரு பகுதியினர் சிங்களப் பயங்கரவாதிகளின் மிரட்டலால் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை மாற்ற இது உதவும் என்ற நப்பாசையும் உள்ளதாம்.

வேறு வேலைவெட்டியில்லாத எம்மவர்களுக்கும் இது ஒரு பெரிய சாதனையாகத் தெரியலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.