Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் வட, கிழக்குக்குள் மட்டுப்படுத்தப்பட்டுவரும் இந்தியா

Featured Replies

இலங்கையின் வட, கிழக்குக்குள் மட்டுப்படுத்தப்பட்டுவரும் இந்தியா

இலங்கையின் வட,கிழக்குப் பகுதியை மட்டுமே இந்தியாவின் பார்வை மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இப்போதும் இந்தியா மயிரிழையில் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பது 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஒரு சரத்தே ஆகும்.

இலங்கையிலுள்ள திருகோணமலையோ அல்லது எந்தவொரு துறைமுகமோ எந்தவொரு நாட்டிற்கும் இராணுவ ரீதியான பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் நலன்கள் தொடர்பாக தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டதாக எந்தவொரு நாட்டுக்கும் இலங்கைத் துறைமுகங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்பதுவே அந்த உடன்படிக்கையின் சரத்து என்று இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தளபதி அசோக் மேத்தா குறிப்பிட்டுள்ளார்.

"ஒளிந்திருக்கும் ட்ராகன் அல்ல' என்ற தலைப்பில் அசோக் மேத்தாவின் கருத்தை இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் அசோக் மேத்தா கூறியிருப்பதாவது;

இலங்கைத் தமிழர்களின் துன்பநிலை தொடர்பாக பாராளுமன்றம் கவனம் செலுத்தவுள்ளது. இது தொடர்பான விவாதம் இடம்பெறவிருக்கிறது. ஆனால், மிகவும் முக்கியமான விடயமாக இருப்பது இலங்கையில் இந்தியாவின் தந்திரோபாய செல்வாக்கு குறைந்து விடும் இடத்தை சீனா பிடித்துக்கொள்வதுமாகக் காணப்படுகிறது.

அம்பாந்தோட்டை மணியோசை எழுப்புகிறது. உப்பளங்கள் மற்றும் உஷ்ணமான காலநிலையால் நன்கறியப்பட்ட இடமான அம்பாந்தோட்டை மாவட்டமானது இலங்கையின் முன்னணி துறைமுகமாக உருவாகி வருகின்றது. இதற்கான காரணம் என்ன? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் தொகுதியாக இருக்கும் இந்த மாவட்டம் 2025 இல் அவரின் தொலைநோக்கு ஆவணத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது. நிலத்தை ஊடறுத்து உலகில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது துறைமுகமாக விளங்கும் இத்துறைமுகம் சுறுசுறுப்பான கிழக்குமேற்கு கப்பல் போக்குவரத்துப் பாதையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கிறது. சிங்கப்பூர் துறைமுகத்தின் முக்கியத்துவத்திற்கும் சவால் விடுக்கக்கூடிய விதத்தில் இந்தத் துறைமுகம் உருவாகி வருகிறது.

இந்தத் துறைமுகம் சீனாவின் நட்புறவு விலை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒரேயொரு கப்பல் இந்தத் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அம்பாந்தோட்டை உட்பட நாட்டின் அதிகளவு பகுதிகளுக்கு சீனா தனது இறக்கைகளை விதிப்பதற்கு இந்தியா எவ்வாறு அனுமதித்தது. இந்தியாவில் தங்கியிருப்பதைக் குறைத்துக் கொள்ளும் ராஜபக்ஷவின் தந்திரோபாயமான தீர்மானத்தை அதிகளவுக்குக் கொண்டதாக இது உள்ளது.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. புலிகளைத் தோற்கடிப்பதற்கு புதுடில்லி முக்கியமான பங்களிப்பை வழங்கியதன் எதிர்மறையான பெறுபேறாக இது காணப்படுகிறது.

பழைய பட்டுப்பாதையின் முத்தாக இலங்கையை மீண்டும் வைத்திருக்க தான் விரும்புவதாக ராஜபக்ஷ கூறுகிறார். இந்து சமுத்திரத்தில் முத்துமாலை வடம் என்ற சீனாவின் தந்திரோபாயமானது இந்தியா, அமெரிக்காவின் வர்த்தக இராஜதந்திரத்துக்கு சவால் விடுப்பதாகும். 2009 ஆகஸ்டில் இலங்கையில் சீனாவின் பங்களிப்புக் குறித்து இந்தியா அச்சமடையத் தேவையில்லையென ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். சீனர்கள் வந்து போவார்கள். ஆனால், இந்தியர்கள் தங்கிவிடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டது.

ஆனால், அம்பாந்தோட்டைக் கதையானது இந்தியாவிற்கு சிக்கலாகக் காணப்படுகிறது. முதலில் இந்தத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை இந்தியாவிற்கு வழங்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டது. கொழும்பில் நிரூபமா ராவ் உயர்ஸ்தானிகராகவிருந்தபோது இந்தியாவிற்கு துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. செலவு, பயன்பாடு என்பனவற்றின் அடிப்படையில் இந்தியா அதனை நிராகரித்திருந்தது. இதேவேளை, சீனாவின் உதவியுடன் கொழும்புத் துறைமுகம் நவீனமயப்படுத்தப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கூறியிருந்தார்.

2009 இல் இந்து சமுத்திரப் பிராந்தியம் பற்றிக் குறிப்பிட்டபோது சீனாவின் முத்துமாலை வடத்தின் ஓர் அங்கமாக அம்பாந்தோட்டை உருவாகி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் சீனாவின் காலடிகள் அதிகரித்து வருவது பற்றி இந்திய வெளியுறவு அலுவலகம் கவலை தெரிவித்திருக்கவில்லை. ஆயினும் அம்பாந்தோட்டை சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பாக கவலையடைந்திருப்பதாக புதுடில்லியிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இலங்கை விவகாரத்தைக் கையாளும் இணைச் செயலாளர் மோகன்குமார் கூறியிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது.

2011 மே இல் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பெய்ஜிங்கில் வைத்துக் கூறுகையில்; அம்பாந்தோட்டை துறைமுகமானது ஒருபோதும் இராணுவத் துறைமுகமாக இருக்காது என்று கூறியிருந்தார். கௌடார், சிட்டாகொங் துறைமுகங்கள் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டன. இவை அம்பாந்தோட்டையிலும் பார்க்க வர்த்தக மற்றும் இராணுவ ரீதியாக அதிகளவுக்கு கவரத்தக்க இடங்களாக இல்லை.

2011 மே இல் சிங்கப்பூரில் இடம்பெற்ற சாங்கிரில்லா கலந்துரையாடலின்போது கௌடா துறைமுகத்தை கடற்படைத் தளமாகப் பயன்படுத்தும் திட்டம் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்று சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியான் கூறியிருந்தார். அத்துடன், இலங்கையிலும் எந்தவொரு தளம் அமைப்பது பற்றித் தான் கேள்விப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். ஆனால், நிகழ்வுகளில் ஏற்பட்டுவரும் திருப்பங்கள் குறித்து இலங்கையர்கள் பலர் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து விடயங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். ஆனால், நிபந்தனைகள் எதுவுமில்லாததால் சீனாவுடன் நாங்கள் மிகவும் நெருங்கி வருகின்றோம் என்று இராஜதந்திரியொருவர் கூறியுள்ளார். அம்பாந்தோட்டையில் சீனா களஞ்சிய வசதிகளைக் கொண்டிருக்கும் என்று மற்றொரு இராஜதந்திரி கூறியுள்ளார்.

இலங்கைக்கு பாரியளவு அனுகூலத்தைத் தரும் நாடாக சீனா உருவாகி வருகிறது. 2005 இல் ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் சீனாவின் நடவடிக்கைகள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. யுத்தத்தின் போது சீனா கணிசமானளவு அரசியல் மற்றும் இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கியிருந்தது. 3.2 பில்லியன் டொலர் உதவியை சீனா வழங்குகிறது. இலங்கைக்கு அதிகளவு உதவி வழங்கும் நாடாக ஜப்பான் இருந்து வந்த நிலையில் அந்த இடத்தை சீனா தாண்டிச் சென்றுள்ளது.

இந்தியாவிற்கு அடுத்ததாக இலங்கையின் பாரிய ஏற்றுமதியாளராக சீனா விளங்குகிறது. 2009 இல் பாரிய வெளிநாட்டு முதலீட்டாளராக சீனா காணப்பட்டது. சீன நாணயமான யுவான் சர்வதேச நாணயப் பரிவர்த்தனைகளில் அங்கீகாரம் பெற்றதாக இணைந்துகொண்டுள்ளது.

இலங்கையின் வட,கிழக்குப் பகுதியில் மட்டும் இந்தியாவின் பார்வை மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆயினும் இலங்கைஇந்திய ஒப்பந்தத்தின் சரத்தொன்றை இந்தியா இப்போதும் பிடியாகக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் நலன்களுக்கு எதிரான விதத்தில் எந்தவொரு நாடும் இலங்கையின் திருகோணமலை அல்லது எந்தவொரு துறைமுகங்களையும் பயன்படுத்தக்கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது கொழும்பின் சொல்லிலல்லாமல் செயலிலேயே இந்தியா இப்போது செல்ல வேண்டும்.

http://www.thinakkur...0-01-29-10.html

Edited by akootha

  • தொடங்கியவர்

Not so hidden dragon

Ashok Kumar Mehta, Hindustan Times

The forthcoming debate in Parliament will focus on the plight of Sri Lankan Tamils but the more important issue about the diminution of India's strategic leverage to China in Sri Lanka is likely to be lost. Hambantota rings the bell. Famous for salt flats and arid and hot weather, the sleepy environs of Hambantota district are destined to become the primary port of call in Sri Lanka. Reason? As the political constituency of President Mahinda Rajapaksa, it is central to his Vision Document 2025. It has the world's first inbuilt harbour carved out of land, strategically located astride the busiest East-West shipping lane and poised to challenge the primacy of Singapore's port.

The port, of course, was made in China at friendship prices. Last month, just one ship was berthed in the harbour.

So how did India let China spread its wings over much of the country including Hambantota? Much of it owes to Rajapaksa's strategic decision to reduce dependence on India, a process that has accelerated after the defeat of the LTTE, ironically an outcome in which New Delhi played a key role. Rajapaksa says he wants to reposition Sri Lanka as the ‘pearl of the old Silk Route', doubtless an unintended congruence of China's string of pearls concept that envisions a necklace of bases across the Indian Ocean to challenge Indian and American trade and diplomacy. In August 2009, Rajapaksa clarified: "India need not fear China's role in Sri Lanka. The Chinese will come and go. But Indians will stay.”

But the Hambantota episode has an Indian twist. The first offer was made to India when Nirupama Rao was the high commissioner there. Rejection was dictated by cost and utility of the port facility. At Port Blair recently, national security advisor Shiv Shankar Menon said that 70% of India's shipping is handled by Colombo port which is also being modernised with Chinese assistance.

Speaking about the Indian Ocean Region in 2009, Menon was equivocal about Hambantota becoming a part of China's ‘string of pearls'. Publicly, the Indian foreign office expresses no concern about China's enlarging footprint in Sri Lanka though according to WikiLeaks, in November 2007, Mohan Kumar, the joint secretary dealing with Sri Lanka, had told US embassy official Ted Osius in New Delhi that "we are concerned over China's access to Hambantota.”

In May 2011 in Beijing, Sri Lankan foreign minister GL Peiris said Hambantota will never be a military port. Yet, Gwadar and Chittagong ports, both constructed and modernised by China, are commercially and militarily ‘off the beat' and less attractive than Hambantota which requires just a five-mile deviation from the shipping lane.

At the Shangrila Dialogue in Singapore in May 2011, Chinese defence minister Gen Liang said he was unaware of any plan to use Gwadar as a naval base and he had not heard about any base in Sri Lanka.

Many Sri Lankans are happy at the turn of events. "We are now in a position to juggle India and China but we are closer to China which has no strings attached," noted a diplomat. Another diplomat said China will have storage and fuelling facilities at Hambantota. "So can India," he quipped.

China has become Sri Lanka's biggest benefactor, with its activities increasing dramatically since Rajapaksa took command in 2005. Beijing's substantive political and military assistance during and after the war in tandem with Islamabad has undermined India's supply of defensive weapons. China's assistance now stands at $3.2 billion, overtaking Japan as Sri Lanka's biggest donor. It is Sri Lanka's biggest exporter after India with China-Sri Lanka trade doubling in the last five years to $1.13 billion. China was the biggest foreign investor in 2009. The yuan, not the rupee, has joined the authorised currency list for international transactions.

India's visibility is confined to the northeastern part of Sri Lanka. Still, India holds the ace: the clause in the India-Sri Lanka Accord of 1987 that "Trincomalee or any other port in Sri Lanka would not be made available for military use to any country in a manner which is prejudicial to India's interest." India, though, should now go by Colombo's deeds, not words.

Ashok Mehta is former commander of the Indian Peace Keeping Force in Sri Lanka. The views expressed by the author are personal.

http://www.hindustantimes.com/Not-so-hidden-dragon/Article1-734816.aspx

காலம் கடந்தும் ஞனம் வராது. வந்தாலும் வாலை சுருட்டப்போவது இந்தியாதான்.

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.