Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்!ஜெயலலிதா

Featured Replies

நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழகம் முழுக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், நில அபகரிப்புப் புகார் சிறப்புக் காவல் பிரிவும் தொடங்க உத்தரவு இட்டு இருக்கிறார்.

''உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரும் உள்ளே இருக்கணும்'' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. அதை சட்டரீதியாகத் தடுக்க முடியுமா என்று தி.மு.க-வும் சிலுப்பிக் கொண்டு தயாராகி வருகிறது!

தமிழ்நாடு முழுக்க நில அபகரிப்பு தொடர்பாக இதுவரை வந்த புகார்கள் 2,800-ஐத் தாண்டிவிட்டன. பெரும்பாலும் தி.மு.க. தொடர்புடையவர்கள் மீதுதான் குற்றச்சாட்டு. கடந்த மூன்று மாதங்களில் கைதான தி.மு.க. வி.ஐ.பி-கள் பற்றிய ஓர் அலசல் இது. போலீஸ் போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டன!

ஜெயலலிதா கோபமும்... வீரபாண்டியார் கைதும்...

சேலத்தில் உள்ள பிரீமியர் ரோலர் ஃபிளவர் மில்லை மிரட்டி வாங்கியதாக அதன் உரிமையாளர் கொடுத்த புகாரில்தான், வீரபாண்டி ஆறுமுகம் மீது கொலை மிரட்டல், நிலத்தை அபகரித்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்தியக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் அவரைக் கஸ்டடியில் வைத்து விசாரித்தது போலீஸ். அந்த சமயத்தில் வெளியில் இருந்த தி.மு.க-வினர் சிலர் பச்சை சேலை உடுத்திய ஒருவரை அசிங்கப்படுத்துவதைப்போன்று சில சம்பவங்களை அரங்கேற்றவே, கடுப்பானார் ஜெயலலிதா. தாசநாயக்கன்பட்டி பால மோகன்ராஜ் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆறுமுகம். இன்னும் ஜாமீன் வாங்கவும் முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்.

ஆப்பு வைத்த அரவை மில் அதிபர்!

பெருந்துறையைச் சேர்ந்த கடலை அரவை மில் அதிபர் ராமசாமி, ஈரோட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்திடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 'அந்தக் கடனுக்காக, ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது மில்லை என்.கே.கே.பி.ராஜாவுக்குக் கொடுக்க வேண்டும் என ஈரோடு மேயரான குமார் முருகேஷ் மிரட்டினார். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, அந்த அரவை மில்லை அபகரித்துக்கொண்டார்கள்!’ என்பதுதான் ராமசாமியின் புகார். தி.மு.க. ஆட்சியில் பயந்துகொண்டு இருந்த ராமசாமி, ஆட்சி மாறியதும் போலீஸில் புகார் கொடுக்க... கொலை மிரட்டல், நில அபகரிப்பு உட்படப் பல பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜாவையும், மேயர் குமார் முருகேஷையும் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்தது ஈரோடு போலீஸ்.

கொலை மிரட்டல்.. ஆக்கிரமிப்பு.. மோசடி!

சென்னை, நொளம்பூரில் அண்ணாமலை அவென்யூ என்ற 20 ஏக்கர் நிலத்தில் 120 குடும்பங்கள் வசித்து வந்தன. கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான ரங்கநாதன், அவர்களை மிரட்டிக் காலி செய்யவைத்தார் என்பதுதான் புகார். பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடி ரங்கநாதன் மீது புகார் கொடுக்க, விடுமா போலீஸ்? கொலை மிரட்டல், ஆக்கிரமிப்பு, மோசடி செய்தல் என 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ரங்கநாதனைத் தூக்கிவிட்டது. ரங்கநாதன் மீது ஏற்கெனவே நிலுவையில் இருந்த அத்தனை புகார்களும் தூசு தட்டப்படுகின்றன. இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் ரங்கநாதன்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 'பொட்டு’ சுரேஷ்!

மதுரை மாவட்டத்தில் உள்ள வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பாப்பா என்ற பெண்தான் பொட்டு சுரேஷ§க்கு முதல் கொட்டு வைத்தவர். 'எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 5.14 ஏக்கர் நிலத்தை, வெறும் 40 லட்சத்துக்கு பொட்டு சுரேஷ§ம், மதுரை மாநகர தி.மு.க. செயலாளர் தளபதியும் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க!’ என்று புகார் கொடுத்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பட்டது. இருவரும் எஸ்.பி. ஆபீஸுக்கு வர... ஏற்கெனவே போட்டுவைத்த திட்டப்படி இருவரையும் கைது செய்தது போலீஸ். ஆடிட்டர் அமர்நாத் என்பவரின் இடத்தை அபகரித்துக்கொண்டதாக பொட்டு மீது இன்னொரு வழக்கும் பதிவானது. உடனடியாக மதுரை கலெக்டர் சகாயம், 'பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்பதால், பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில்வைக்க உத்தரவிடுகிறேன்!’ என்று ஆணை பிறப்பிக்க... வெளியில் வர முடியாதபடி சுரேஷ§க்குக் கிடுக்கிப்பிடி போடப்பட்டது.

மதுரை குலுங்க.. குலுங்க..!

தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர் 'அட்டாக்’ பாண்டி. மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு நேர் எதிராக இருக்கும், சுமார் 2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும்கூட, அதைக் காலி செய்யாமல் ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டு வதாகத்தான் 'அட்டாக்’ மீது புகார். இதேபோல கல்பனா என்ற பெண்ணும், வாடகைக்கு விட்ட தன்னுடைய வீட்டை 'அட்டாக்’ பாண்டி திருப்பித் தராமல் மிரட்டுவதாகப் புகார் கொடுக்கவே, நில ஆக்கிரமிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு அமுக்கிவிட்டது போலீஸ். வீடு, கடைகளை அபகரித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான மதுரை வி.கே.குருசாமி மீதும் புகார்கள் எழுந்தன. ஏற்கெனவே சில வழக்குகள் அவர் மீது இருக்கவே, குருசாமியையும் குண்டர் தடுப்புச் சட்டத்திலேயே கைது செய்துவிட்டது போலீஸ்.

திருமங்கலத்தை சேர்ந்த சிவனான்டி என்பவர், தன்னுடைய நிலத்தை எஸ்ஸார் கோபி அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை காரை ஏற்றிக் கொலை செய்ததாக அதிரவைக்கும் வழக்கு என அடுத்தடுத்த புகார்களால் கோபியின் தலையும் உருள ஆரம்பித்தது. நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினரான கோபியை உள்ளே தள்ளிவிட்டது போலீஸ்.

சேப்பாக்கம் டு திருப்பூர்

உடுமலை சீனிவாசனுக்குச் சொந்தமான ஜியான் பேப்பர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது புகார். இந்த வழக்கில் சன் டி.வி. சக்சேனா, அய்யப்பனும் சிக்க... எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அன்பழகனை எழுப்பிக் கைது செய்து, திருப்பூருக்குப் பறந்தது, போலீஸ். கண்டிஷன் பெயிலில் வெளியில் வந்த அன்பழகன், திருப்பூ ரில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.

நகராட்சித் தலைவர்களும் உள்ளே...

குளுகுளுப் பிரதேசமான கொடைக்கானல் நகராட்சித் தலைவராக இருப்பவர், தி.மு.க-வைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். இவர் மீதும் பண்ணை வீடு ஆக்கிரமிப்பு புகார். கொடைக்கானலில் ஜான் ரோஷன் என்பவர், 'எங்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பண்ணை வீட்டை இடிச்சிட்டு அபகரிச்சுட்டாங்க. திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபருடன் சேர்ந்து முகமது இப்ராஹிம்தான் இதைச் செய்தார்.’ எனப் புகார் கொடுக்க... அதிரடி ஆக்ஷன்தான்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சித் தலைவரான கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டின் பேரில் கட்டுமானப் பணிகளுக்காக 45 லட்சம் கடன் வாங்கினார். கடனைத் திருப்பி கேட்டு வங்கியில் இருந்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கிருஷ்ணமூர்த்தி கண்டுகொள்ளவே இல்லையாம். கடனைக் கேட்கப் போன வங்கி அதிகாரிகளையும் கிருஷ்ணமூர்த்தி மிரட்டவே, அவர்கள் போலீஸில் புகார் கொடுக்க... அப்புறம் என்ன? ஜெயில்தான்!

கரூரைச் சேர்ந்த மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான வாசுகியின் கணவர் முருகேசன், தம்பி ரவிக்குமார் இருவரும் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். தளவாய்பாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கிரயம் செய்துகொண்டு, பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக இவர்கள் இருவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.

திருப்பூர் அருகே முருகம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் பொங்கலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான மணி கைது செய்யப்பட்டதுதான் லேட்டஸ்ட்.

திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான குடமுருட்டி சேகர், காரில் கஞ்சா கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கம்பி எண்ணுகிறார். கடைகளைச் சேதப்படுத்தியது, பள்ளி மாணவன் விபத்தில் இறந்து போனதற்குக் காரணம் எனப் பல்வேறு வழக்குகள் கலைவாணன் மீது பாய்ந்து இருக்கிறது. முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், கொலை முயற்சி வழக்கில் சிக்கியிருக்கிறார். தி.மு.க. நகரச் செயலாளரை கொலை செய்யத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருக்கிறது போலீஸ்.

''இத்தோடு முடியவில்லை... இன்னும் நிறை யவே இருக்கு. பார்க்கத்தானே போறீங்க..'' என்று கண் சிமிட்டிச் சிரிக்கிறார் காவல்துறை உயரதி காரி ஒருவர். தி.மு.க.வினர் வயிற்றில் இவை புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது!

Thanks to Junior Vikatan.

To see the pictures of this news....

http://www.thedipaar.com/news/news.php?id=32738

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.