Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளுக்கு படையினரே பிரதான காரணம். மக்கள் அல்லர். விக்கிரமபாகு கருணாரட்ண.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Thursday, 2011-08-25 12:46:42]

Vikramabahu_Karunaratne_150JKL.jpg

கிறீஸ் பூதங்கள் விவகாரம் தொடர்பாகப் பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மக்கள் தமது கைகளில் சட்டத்தை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்துள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண.

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் படுதோல்வியடைந்த அரசு அங்குள்ள மக்களைப் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது. நாவாந்துறையில் இடம்பெற்ற சம்பவம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாவாந்துறையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கிறீஸ் பூதம் சர்ச்சை ஆகியவற்றால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் விவகாரத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளுக்கு மக்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுத்தமையே பிரதான காரணம் என பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்.கிறீஸ்பூதம் விவகாரம் தொடர்பாகப் பாதுகாப்புத் தரப்பினர் உரிய விசாரணைகளை நடத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தால் மக்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுத்திருக்க மாட்டார்கள்.ஆனால், இந்த விடயத்தில் அவர்கள் மௌனம் காத்தனர். இதன் காரணமாகவே மக்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளுக்குப் படையினரே பிரதான காரணம். மக்கள் அல்லர்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் அரசுக்கு யாழ்ப்பாணத்தில் படுதோல்வி ஏற்பட்டது. இதனை சகித்துக்கொள்ள முடியாத அரசு அங்குள்ள மக்களைப் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது. அரசு உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்வதில் ஆரம்பமான இந்த முயற்சி படையினரை ஏவிவிட்டு மக்களைத் தாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இப்படி அவர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=48868&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.