Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கும் சாத்தியம்!

Featured Replies

சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கும் சாத்தியம்! - சண்டே லீடர் தகவல்

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் கூட்டத் தொடரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் சாத்தியங்கள் தென்படுவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியான லுலியா கோஸ்டா இவ்வூடகத்திற்கு கூறியுள்ளார்.

இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான நம்பத்தகுந்த விசாரணைகள் மேற்கொள்வதன் ஊடகவே இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் இவ்வூடகத்திற்கு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பரிந்துரைவுகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என தெரிய வருகின்ற போதிலும், சில நாடுகள் இலங்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவகையில் சுயாதீனமான நம்பத்தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={D4ABEFFB-2C39-4012-92A3-5653B6CBD486}

  • தொடங்கியவர்

EU To Press Sri Lanka

The European Union (EU) is to press Sri Lanka at the UN Human Rights Council (UNHRC) this month to address the issue of accountability over alleged human rights abuses committed during the final stages of the conflict.

Iulia Costea, the press officer of EU High Representative Catherine Ashton, told The Sunday Leader that the EU also wants the Sri Lankan government to engage with UN Secretary General Ban Ki-moon on the contents of the report by a panel of experts, on the war in Sri Lanka.

“As EU High Representative Catherine Ashton has recalled, the EU believes that an independent process to address the extremely serious allegations contained in the report of the UN Secretary-General’s Panel of Experts should contribute to strengthening the process of reconciliation and ensuring lasting peace and security in Sri Lanka,” Costea told The Sunday Leader.

http://www.thesundayleader.lk/2011/09/04/eu-to-press-sri-lanka/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.