Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கிலீக்ஸ் : தமிழர்களுக்கு ஆப்பு வைத்த இந்.பாதுகாப்பு ஆலோசகர்

Featured Replies

தமிழர்களுக்கு ஆப்பு வைத்த இந்.பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தமைக்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய எம்.கே.நாராயணனே காரணம் என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கியமான ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் இலங்கை விவகாரம் தொடர்பில் சிங்கள மக்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்குமாறு மன்மோகன் சிங்குக்கு ஆலோசனை வழங்கியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் கொள்கை தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியே இந்தியா இவ் முடிபை எடுக்க காரணமாக நாராயணன் இருந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர் லால் நேருவை கிருஸ்ணமேனன் தவறாக வழிநடத்தியது போன்றே தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை நாராயணன் தவறாக வழிநடத்தியிருப்பதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இவ்விருவரும் இந்தியாவின் வெளிவிவகாரத் துறையை தவறாக வழிநடத்தியதாகவும் இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் திமோதி ஜே ரோமர் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்துக்கு அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பிலேயே நாராயணன் குறித்த இக் குறிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=22557

  • தொடங்கியவர்

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவு

புது தில்லி, செப். 5: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தை தெரிவித்தன, இலங்கைத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்று 2006-ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக கான்சல் ஜெனரலாகப் பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.

2007 நவம்பர் 20-ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரûஸயும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள், வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.

http://dinamani.com/...&Title=இலங்கைத்

கருத்துகள்

இவர் ராபர்ட் லூயிஸ் அல்ல ராபர்ட் லூசு !! வைகோ தன அரசியல் வாழ்வை தமிழர் அதரவு நிலைபட்டால் இழந்தார் என்பதே உண்மை !

By குமரேசன்

9/6/2011 5:07:00 PM

ஆச்சரியமாக உள்ளது .இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வன்கொடுமைகளும் நிகழ்ந்தேறிய பின்பும் வாழ்கிறோம் நாம் தமிழராய் தமிழ்நாட்டில் !!!!!!!!!!!!

By krishnan

9/6/2011 4:31:00 PM

Karunanithi ஒன்லி கேர் ஹி பாமிலி அண்ட் ப்லோப்பிங் Tamil people வேர்ல்ட்Tamil people நோ believe பலாப் கருணாநிதி.same டைம் Stalin ஹ யா வெரி pity .karunanithi not a Tamil people leader.he is a play leader

By Rkb

9/6/2011 4:02:00 PM

Karunanithi ஒன்லி கேர் ஹி பாமிலி அண்ட் ப்லோப்பிங் Tamil people வேர்ல்ட்Tamil people நோ believe பலாப் கருணாநிதி.same டைம் Stalin ஹ யா வெரி pity .karunanithi not a Tamil people leader.he is a play leader

By Rkb

9/6/2011 4:02:00 PM

இது முழு உண்மையல்ல.வைகோ,திருமா,ராமதாசு போன்றவர்கள் பணம் வாங்கி புலிகளுக்கு வேலை செய்கிறார்கள் என்பதே உண்மை . மு க பற்றிய செய்தி முற்றிலும் உண்மை.

By ராபர்ட் லூயிஸ்

9/6/2011 10:51:00 AM

அவர் தனது குடும்ப நலனில் தானே கண்ணாய் இருந்தார் கொங்கிரசை நிர்பந்தித்து தமிழ் நாட்டிற்கு தண்ணீர் கூட கேட்காத முதல்வராய் அல்லவா இருந்தார்

By pillai

9/6/2011 9:55:00 AM

its a true ,athanalathan evalavu uyierillapu nadathathu....

By siva

9/6/2011 8:22:00 AM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.