Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பும் கோத்தாவின் கீழ் வருகின்றது

Featured Replies

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011

Gotabaya%20Rajapaksha.jpg

சிறிலங்காவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் உள்ளக வெளியக பதுகாப்புக்கள் கோத்தாவின் கீழ் வருகின்றது. வழமையாக இந்த பாதுகாப்புக்களை பல்வேறு தனியர் பாதுகாப்பு கம்பனிகளே செய்துவருகின்றன. இவை வருடா வருடம் ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் வருகின்ற ஆண்டில் இருந்து கோத்தபாய இராஜபக்‌ஷவின் சொந்த பாதுகாப்பு சேவை நிறுவனமான ரட்ன லங்கா லிமிட்டட் என்ற தனியார் கம்பனியே மேற்கொள்ளும் என கோத்தா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பொறுப்புக்கள் பாதுகாப்புச் செயலாளரின் நிறுவனத்திடம் ஒப்படைப்பு

11 செப்டம்பர் 2011

பல்கலைக்கழங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்புக்கள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பதினைந்து பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் பாதுகாப்பு பொறுப்புக்கள் இவ்வாறு கோதபாயவின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும்வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரக்ன ஆரக்ஷக்க லங்கா லிமிடட் என்னும் நிறுவனத்திடம் பாதுகாப்புப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே சேவைகளை வழங்கி வந்த தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் உரிய முறையில் தமது பங்களிப்பினை வழங்காத காரணத்தினால், இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நடவடிக்கைக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் குறித்த பாதுகாப்பு நிறுவனத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் போன்றவற்றின் பாதுகாப்பு கடமைகளையும் ரக்ன ஆரக்ஷக்க லங்கா லிமிடட் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/66988/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.