Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச கைதிகள் தினமான இன்று; தடுப்பில் உள்ளோருக்கும் பொதுமன்னிப்புத் தாருங்கள்;

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கைதிகள் தினமான இன்று; தடுப்பில் உள்ளோருக்கும் பொதுமன்னிப்புத் தாருங்கள்; உறவுகள் ஜனாதிபதியிடம் உருக்கம்

  • Monday, September 12, 2011, 9:38

எந்த விசாரணையும் இன்றி மிக நீண்ட காலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளையும், உறவுகளையும் பொதுமன்னிப்புக் கொடுத்து விடுவிக்குமாறு சர்வதேச கைதிகள் தினமான இன்று ஜனாதிபதியிடம் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்கள் பெற்றோரும் உறவினர்களும்.

தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்புக் கோரி 10 மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனுக்களை இன்று காலை அனுப்புவர்.நாட்டிலுள்ள பத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதிக்கான மனுக்கள் அனுப்பப்படவுள்ளன.அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட 6,000இக்கும் அதிகமானோர் எதுவித விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 5 தொடக்கம் 18 வருடங்கள் வரை 820 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசியல் கைதிகளின் உறவுகளே ஜனாதிபதிக்கு மகஜரைக் கையளிக்கவுள்ளனர்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, பதுளை ஆகிய பத்து மாவட்டங்களிலிருந்து இந்த மனுக்கள் கையளிக்கப்படவுள்ளன.

“எமது உறவுகளுக்கு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு வழங்குங்கள்” என்று மனுவில் நாம் கேட்டுள்ளோம் என்றார் யாழ்ப்பாணத்தில் இன்று மனுவைக் கையளிக்க உள்ள சுபத்திரா தேவதாசன். இவரது கணவரும் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத் தமிழ்த்துறை முன்னாள் தலைவருமான தேவதாசன் கடந்த மூன்று வருடங்களாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள இந்த மனுக்களின் பிரதிகள் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்களுக்கும் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளன.”இதுவரை சுமார் முப்பதுக்கும் அதிகமான மகஜர்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். உண்ணா விரதப் போராட்டங்களை முன்னெடுத்திருத்தோம் எனினும் இது வரை எமது உறவுகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கைதிகள் தினமான இன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கைதிகளை விடுவிக்கிறார்கள் இல்லை என்றார் மற்றொரு உறவினர்.இதேவேளை, சர்வதேச கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மத்திய சிறைச் சாலையில் நேற்று மிக எளிமை முறையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

http://www.tamilthai.com/?p=26523

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.