Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் காலங்களில் இருக்கின்ற ஆர்வமும் துடிப்பும் இனப்பற்றும் தேர்தல்கள் முடிந்த பின்?

Featured Replies

தமிழ் பேசும் சமூகத்தை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள தவறுகின்றமையானதன்

தாக்கம் அப்பாவிகளான மக்களையே சென்றடைகின்றது.

இதில் பாதிப்படைவது மக்களே தவிர கட்சிகளல்ல என்பதே யதார்த்தமான உண்மையாகும். தமிழ்க் கட்சிகளிடத்தில் இருக்கின்ற ஈகோ நிலைமையானது பிரிவினைகளை அதிகத்துச் செல்கின்றதே தவிர விரிசல்களை இல்லாமல் செய்வதற்கான வழிகளை தோற்றுவிப்பதாக இல்லை.

ஆரம்ப காலங்களில் இருந்த தமிழர் ஒற்றுமை, இன ஐக்கியம் ஆகியவை தற்காலத்தில் காணாமல் போய்விட்டமை வேதனைக்குரிய விடயமாகும். இது மக்களை வெறுப்பேற்றியிருக்கின்ற போதிலும் தலை விதியை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இது இவ்வாறிருக்க ஒவ்வொரு கட்சிகளுக்குள்ளும் எழுந்த முரண்பாடுகள் மற்றும் விட்டுக்கொடுக்கா தன்மை போன்றவற்றுடன் தமிழ் மக்களுக்கான உரிமைகளை, அபிலாஷைகளை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் பின்வாங்கிய நிலைமைகள் ஆகியவை காரணமாக தனியாக இருந்த கட்சிகளும் பிளவுண்டு பல கட்சிகளாக தோற்றம் பெற்றமையும் இந்நாட்டு அரசியலுக்கு பழகிப்போன விடயம் தான் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி., இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா தந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள்கூட தமக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் பிளவுண்டமை அறிந்த விடயமே.

பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பிளவுபடுவதானது பாரியதொரு சிக்கலை தோற்றுவிக்ககாது என்கின்ற போதிலும் தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள் பிளவுபட்டு நிற்பதானது தமிழ் மக்களிடத்தில் பாரிய இழப்புக்களையும் பின்னடைவுகளையுமே பெற்றுக் கொடுப்பதற்கு வழி வகுக்கும். அது தற்போது நடைபெற்று வருவதும் கண்கூடுதான்.

1965 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கத்துக்கு ஒத்துழைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள், கொள்கை மீறல்கள் தொடர்பில் அன்று கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் வெளிப்பட்டு அது பூதாகரமான வரலாறுகளும் இருக்கின்றன. அக்கால கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சூட்சுமமான திட்டங்களை அறிந்திருந்தும் இலங்கை தமிழரசுக் கட்சி அன்றைய அரசாங்கத்துக்கு துணைபோகும் வகையில் செயற்பட்டமையே அக்கட்சிக்குள் மேற்கண்டவாறு கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

உரிமை என்ற வாசகத்தை தூக்கிப் பிடித்து தமிழரை ஏமாற்றும் படலம் அன்றே ஆரம்பித்து விட்டது என்று கூறலாம்.

எதிர்காலத் தமிழருக்கு தீங்குகள் இழைக்கின்றதான திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து கருத்து முரண்பாட்டில் ஈடுபட்ட இலங்கை தமிழரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி. நவரத்தினத்தை கட்சியிலிருந்து நீக்கி விடுவதற்கும் கட்சியின் அன்றைய பொதுச் சபை தீர்மானித்தது. இருப்பினும் இலங்கை தமிழக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினரும் அன்றைய வாலிப முன்னணியின் செயலாளருமான எஸ். பாலா மாத்திரமே நவரத்தினம் நீக்கப்படுவதற்கான காரணத்தை கோரி நின்றார்.

இதன் பலனாக பின்னர் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னரே தமிழரக் கட்சிக்கு எதிராக தமிழர் சுயாட்சிக் கழகம் தோற்றம் பெற்றது.

அன்று ஆரம்பிக்கப்பட்ட பிளவுகள் ஏற்றத் தாழ்வு மனப்பான்மைகள் போட்டி பொறாமைகள் இன்னும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இலங்கை தமிழரக் கட்சி மற்றும் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்டதுடன் அதற்கு தலைவராக ஆனந்த சங்கயும் நியமிக்கப்பட்டார்.

சீராக யெற்பட்டு வந்த இந்த கூட்டணி பிற்காலத்தில் பிளவுபட்டு துண்டாக்கப்பட்டது. இதனால் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் ஆகியன தனி வழியே சென்றதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி அவ்வாறே செயற்பட்டு வந்தது.

இதன் பின்னர் மிக அண்மைக் காலத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியை தலைமையாக கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அது சிறந்ததொரு பாதையில் சென்று கொண்டிருந்த போது தான் 2009, 2010 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் அராங்கம் விரித்த வலை கெட்டியாக அமைந்து விட்டது.

கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் இதில் சிக்குண்டமையால் கூட்டமைப்புக்குள் இடிவிழுந்தது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டது. இவ்வாறான தொடர்ச்சியான பிளவுகளும் பின்னடைவுகளும் தமிழ் மக்களை மனதளவில் வெகுவாக பாதிப்படைய செய்துவிட்டன என்று கூறினால் தவறில்லை.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகள் மனம் வைத்து ஐக்கியப்பட்டால் அங்கு அசைக்க முடியாததொரு அமைப்பை உருவாக்கி தாங்களும் தமது மக்களும் விரும்புகின்ற உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு இலகுவாக வழிவகுக்கும்.

என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர் பார்ப்பாகும்.

அண்மையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்றதொரு அமைப்பு உருவாக்கப்பட்ட போதிலும் பின்னர் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலை காரணம் காட்டி அந்த அமைப்பும் பிரிந்து சென்று விட்டது. எனினும் வேறு சில தமிழ்க் கட்சிகள் கூட்டமைப்புடனேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான நிலையில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் நடைபெறவிருப்பதாக அதன் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்திருக்கின்றார். அது மட்டுமல்லாது, இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியானது பிரிவினையை ஏற்படுத்தாது தொடர்ந்து ஒற்றுமையை பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளது. இதில் மாற்றங்கள் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து யெற்படுவதற்கு தீர்மானித்திருப்பதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டிருக்கின்றார்.

அத்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மாநாடாக இது அமைந்திருப்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்திருந்திராத தமிழ் கட்சிகளுக்கும் பொது மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ஆனந்த சங்கரி, கூட்டமைப்பில் இணைந்து கொள்கின்ற நாம் உரிமைக்கு குரல் கொடுப்பதற்கும் உறவுக்கு கை கொடுப்பதற்கும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாக இருப்போம் என்றும் உறுதி கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது இதனை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். உண்மையில் இது வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களிடத்தில் மட்டுமல்லாது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் மத்தியிலும் ஆச்சரியத்தையும் அதேநேரம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த கூடியதாக அமைந்தி ருக்கின்றது. உண்மையாகவே தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென நினைக்கும் எவரும் இதனை ஏற்றுக் கொள்வர்.

ஆனந்த சங்கரியின் இந்த புதுயுக யோசனையை இல்லாவிட்டால் ஆர்வத்தை ஈ.பி.டி.பி. முதல் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் பிரதியமைச்ர் விநாயகர்த்தி முரளிதரன் வரையிலான தரப்பினர் எவ்வாறு நோக்குகின்றனர் என்பது தான் கேள்விக் குறியாகும். யாராக இருந்தாலும் எத்தரப்பினராக இருந்தாலும் இரட்டைக் கொள்கையாளர்களாக செயற்படுவது இனியும் வடக்குக் கிழக்கிற்கு பொருந்தாது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

ஏனெனில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து தமிழ்க் கட்சிகளுமே ஒன்றுக் கொன்று முரண்பட்ட வகையில் செயற்பட்டு வருகின்றன. இது பாராளுமன்றத்துக்குள்ளும் நடைபெறுகின்றது. அதே போல் சர்வதேச ரீதியிலும் அவ்வாறுதான் செயற்பட்டு வருகின்றன. ஏனைய கட்சிகள் எவ்வாறு நோக்கப்பட்டாலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்மக்கள் பெரிதாக மதித்து வருகின்றனர்.இந்த நன் மதிப்பை பயன்படுத்திக் கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தந் சந்தர்ப்பத்திலுமே தமிழ் மக்கள் தம்மை ஆதரிக்க தவறமாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையுடனும் செயற்பட்டு வருகின்றது.எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடத்தில் கூறுகின்ற எதனையும் செயற்பாட்டில் காட்டுகின்றதா என்பது தான் விடை தெரியாத கேள்விகளாகும்.

மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் மக்கள் சந்திப்பின் போதும் வாய் நிறைய பேசுகின்றமையாலும் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதாலும் எதுவுமே நடந்து விடப் போவதில்லை. மாறாக இதய சுத்தியே இங்கு அவசியமாகும். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலும் அது முடிவடைவதற்கு முன்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் தாயகம் மற்றும் சுய நிர்ணய உரிமை போன்ற கோஷங்களை எழுப்பி வந்தது. தற்போது அந்தக் கோஷங்கள் ஓய்ந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதனை ஒப்புவிக்கும் முகமாகவே ஆகஸ்ட் மாதம் 23, 24 ஆம் திகதி களில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழ்க் கட்சிகளுக்கான மாநாட்டின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. எனினும் அங்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தனது மாறா நிலைப்பாட்டினை கொண்டிருந்ததையும் ஏனைய கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருந்ததையும் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.

தமிழ்த் தேசியம் மற்றும் சுய நிர்ணய உரிமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித கருத்துக்களையும் வெளியிடாது நடுநிலை காத்தமையானது தமிழ் மக்களின் உண்மையான விருப்பு வெறுப்பை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை தம்மிடத்தில் இல்லை என்பதை வெளிக்காட்டி நிற்கின்றது.

இது இவ்வாறிருக்க இந்திய முன்னாள் தலைவர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமையும் தண்டனை நிறைவேற்றுவதற்கான காலம் 8 வாரங்களுக்கு பிற்போடப்பட்டிருப்பதும் தெரிந்த விடயமாகும்.

இருந்த போதிலும் இந்த தண்டனை பிற்போடப்பட்ட நிகழ்வானது தமிழகத்தின் ஒட்டுமொத்த தமிழர்களின் ஐக்கியமான செயற்பாட்டினாலேயே அன்றி வேறு எந்த காரணத்தினாலும் அல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

மேலும் இந்த மூவனரிதும் உயிர்களை காப்பதற்காக 21 வயதே நிரம்பிய யுவதியொருவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபகரமான ஓர் நிலையையும் அறிந்திருக்கின்றோம்.

இவர்களது தூக்குத் தண்டனையானது உலகம் முழுதும் வாழ்கின்ற தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்த போதிலும் இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ்க் கட்சிகளுக்கும் தட்டுப்பாடாதிருந்தது தான் கவலைக்குரியதாக இருக்கின்றது.

இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயிர்களுக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு உயிருக்குமே இந்த போராட்டங்கள், வீதி மறியல் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், தீக்குளிப்புக்கள் என அனைத்தும் நடந்தேறின. அரசியல் இலாபம் கருதியேனும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் இதற்கு பெரிதும் குரல் கொடுத்து வந்தன. ஆனாலும் அங்கு தூக்குக் கயிறை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயிர்களுக்காக இங்குள்ள தமிழ்கட்சிகள் பெரிதாக அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். இது ஒருபுறமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது மூன்று செயலாளர்கள் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் கையொப்பமிடும் தகுதி ஒருவருக்கே இருக்க வேண்டும். இந்தத் தகுதியுடனான கூட்டமைப்பின் செயலாளர் பதவியை தட்டிக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகிய எம்.பிக்கள் கூட்டமைப்பின் செயலாளர் பதவியைப் பிடித்து விடுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகின்றது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உடைந்துவிடாத வண்ணம் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது. தமிழர் தொடர்பான பல விடயங்களில் உதாசீனப் போக்கினைக் கடைப்பிடித்து வருகின்ற கூட்டமைப்பு, இனிவரும் காலங்களில் நிதானங்களைக் கடைப் பிடிப்பதே எதிர்காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும். இதேவேளை, மலையகத்தில் உருவெடுத்து கிழக்கினூடாக வடக்கிற்கு சென்று அங்கு மையம் கொண்டுள்ள கிறீஸ் பூதங்கள் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பில் அரசாங்கத்துல் அங்கம் வகிக்கின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் ஆகியோர் வாய் திறக்காது இருக்கின்றமை மக்களிடத்துல் வெறுப்பினை ஏற்படுத்தியிருக் கின்றது.

மேலும் அரசாங்கம் கூறுகின்ற விடயங்களை ஆமோதிக்கும் பாணியே இவர்களிடத்தில் மேலோங்கி நிற்கின்றது.

தமிழருக்காகவே தமிழ்க் கட்சிகள் என்ற நிலைமை மலையேறி விட்டுள்ள இக்கால கட்டத்துல் தமிழ்க்கட்சிகளை நம்பிய அப்பாவித் தமிழர்கள் மோசம் போயுள்ளமைதான் பரிதாபத்துக்குரியதாகும்.

தேர்தல் காலங்களில் இருக்கின்ற ஆர்வம் துடிப்பும் இனப்பற்றும் தேர்தல்கள் முடிந்து பதவிக்கு வந்ததன் பின் எந்த வொரு அரசியல்வாதியிடத்திலும் இருப்பதில்லை. இது தமிழ் அரசியல்வாதிகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல என்பது நியாயம்தான்.

இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் அனைவருமே குறிப்பாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மனசாட்சியைத் தொட்டு பேதங்களை மறந்தவர்களாவர்.

ஓர் அணியில் திரண்டு நிற்க முன் வருவார்களேயானால் தமிழர் உரிமை, நிரந்தர மான அரசியல் தீர்வு என்பதெல்லாம் மிக மிக இலகுவான விடயமாகிவரும்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.