Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்த தவறுகளுக்கு இந்தியா பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

timthumb.php_9.png

நடந்து முடிந்த வன்னிப்போரின் போது பொது மக்கள் தஞ்சமடைவதற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசங்களில் அரச படைகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன் தாராளமாக ஷெல் வீச்சையும் மேற்கொண்டதாக இப்போது ஆதார பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா இவை தொடர்பாகச் செய்மதி மூலம் எடுத்த படங்களை இலங்கை ஜனாதிபதியின் பார்வைக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் ஓர் உண்மை வெளிச்சத்துக்கு வருகின்றது. சனல்4 காணொளிக் காட்சிகள் வெளியாகு முன்னரே வன்னியின் போர் அவலங்கள் வெளிநாடுகளைச் சென்றடைந் திருக்கின்றன என்பதுதான் அது.

ஒரு தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்ப்பதற்காக ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையே அழித்து விடுவதற்கு இந்தியா தயங்கவில்லை என்பதையும் அந்த அழிப்பு நடவடிக்கையை அது நிமிடத்துக்கு நிமிடம் பார்த்துக் கொண்டு இருந்தது என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. மனிதப் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டேதான் போரின்போது தங்குதடையின்றி இலங்கையரசுக்கு இந்தியா உதவிகளையும் வழங்கியுள்ளது. கௌரவருக்கு மகாபாரதத்தில் ஒரு சகுனி கிடைத்தமைபோன்று இந்தியாவின் இந்த பஞ்சமா பாதகங்களுக்கு ஒரு சகுனி ஆலோசனை வழங்கியுள்ளார்.

கௌரவருக்குச் சகுனி வழங்கிய ஆலோசனைகள் அவர்களை எத்தகைய மோசமான கதிக்குத் தள்ளியது என்பதனை நாமறிவோம். இது போன்று நவீன சகுனியான எம்.கே.நாராயணனின் தீர்க்க தரிசனமற்ற பிழையான ஆலோசனைகள் இந்தியாவைச் சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது.

1962ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சரான வி.கே.கிருஷ்ணமேனனின் தவறான ஆலோசனைகள் காரணமாக இந்தியா சீனாவிடம் மீண்டெழ முடியாத அளவுக்கு அடி வாங்கியது. ஏராளமான இந்திய நிலப்பரப்பும் சீனா வசமாகியது.இந்த ஏக்கத்திலேயே அப் போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணத்தைத் தழுவினார். சீனப் பிரதமராக இருந்த சௌ என்லாய் வெற்றிக்களிப்பில் கொக்கரித்தார்.

இப்போது ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா, எம்.கே.நாராயணனால் பழி சுமந்து நிற்கிறது.இலங்கைத் தமிழரின் இன்றைய இழி நிலைக்கு இந்தியா நிச்சயம் பதில் கூறித்தானாக வேண்டும். ஏனென்றால், இந்தப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி ஆயுத வன்முறையாக மாற்றிவிட்டது இந்தியாதான். பின்னர் அதனைப் பயங்கரவாதமாக்கியதும் இந்தியாதான்.

எனவே ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது இலங்கையில் தமிழ் மக்கள் கொடூரமான முறையில் ஆட்சியாளரின் உதவியுடன் கொலை செய்யபபட்டனர். உடனே தனது வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திராகாந்தி.

இவரின் காலத்திலேயே புலிகளுக்கு இந்தியாவில் புகலிடமும் பயிற்சிகளும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவரது மறைவுக்குப் பின்னர் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. தானென்ற ஆணவமும் தமிழரைக் கிள்ளுக்கீரையாக எண்ணிய மனோபாவமும் ராஜீவ் காந்தியின் கண்களை மறைத்தன. நண்பன் யார் எதிரி யார் என்று சீர்தூக்கிப் பார்க்கும் வல்லமையும் அவரிடம் இருந்ததில்லை.

இதன் காரணமாகவே 1987இல் அமைதிப் படையென்ற பெயரில் அழிவுப்படையொன்றை இலங்கைக்குள் பிரவேசித்தது. குள்ளநரியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நரித்தனங்களை எடைபோடும் அளவுக்கு ராஜீவ் காந்தி அரசியல் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. இதனையே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அன்று கிண்டலாகத் தெரிவித்தார். “எனது அரசியல் அனுபவத்துக்கும் ராஜீவ் காந்தியின் வயதுக்கும் வேறுபாடு காணப்படவில்லை” என்பதே ஜே. ஆரின் கூற்று. இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட கொழும்பு வந்தபோது தன்னைக் கொல்வதற்கு ஒரு சிங்களப்படையினன் என்ன காரணத்துக்காக முயன்றுள்ளான் என்பதைப்புரிந்து கொள்வதற்குக் கூட ராஜீவால் முடியவில்லை.

அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இந்திய இராணுவத்தினர் அட்டூ ழியங்கள் புரிந்ததும் இதன் விளைவாக ஏராளமான இந்திய வீரர்கள் மரணமடைந்ததும், பின்னர் “துண்டைக்காணோம் துணியைக் காணோமென” இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறியதும் பழைய கதைகள்.

இவற்றின் விளைவாகவே ராஜீவ் காந்தியின் அகால மரணமும் நிகழ்ந்தது. ஆனால் இந்த மரணத்தின் எதிர்விளைவுகள் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இத்தகைய கொடிய அவலங்களை விளைவிக்கும் என்பதை எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. தற்போது இலங்கையில் அரங்கேறிய மிகக் கொடிய போர்க்குற்றங்களில் இந்தியாவின் கரங்களும் தோய்ந்திருக்கின்றன என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது. நாராயணன் போன்றவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்ட கொள்கைகள் இலங்கையின் பெரும்பான்மை மக்களை மகிழ்வடையச் செய்திருக்கலாம். ஆனால் இலங்கை அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள்முதல் அவலங்களையே சந்தித்து வருகின்ற தமிழ் மக்களைப் படுகுழிக்குள் தள்ளி வீழ்த்தியுள்ளது என்பதுதான் உண்மை.

எப்போதுமே இந்தியாவின் மீது ஒருவித பிரிக்கமுடியாத பிணைப்பையும், பாசத்தையும் கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்கள் இதனால் தமது மனப்போக்கில் மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். எமது ஒட்டு மொத்த அழிவுக்கும், அவலத்துக்கும் இந்தியா தான் காரணமென அவர்கள் ஐயம் திரிபுற அறிந்து கொண்டமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்தியாவின் தமிழகத்திலுள்ள உறவுகள் இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்காக என்றுமில்லாதவாறு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றமை ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் சிறிதளவு ஆறுதலைக் கொடுத்தாலும் இந்தியாவின் நயவஞ்சகப் போக்கையும் துரோகங்களையும் அவர்களால் மன்னிக்க முடியாது. நாராயணனால் தவறாக இந்தியா வழி நடத்தப்பட்டதாக இப்போது தெரிவிக்கப்பட்டாலும் கூட புதுடில்லியின் போக்கில் இன்னும் மாற்றங்கள் ஏதுமில்லை. இந்த வாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனிதஉரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தெரியவரும். புதுடில்லியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஒருபோதும் நடக்காது என்ற உண்மை அங்கு வெளிப்படும்.

உண்மையில் இந்தியா இனிமேலும் தனது மோசமான ஆலோசகர்களை நம்பியிராது தீர்க்கமானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய தருணமிது. ஈழத்தமிழர்களே இந்தியாவின் உண்மையான நண்பர்கள் என்ற யதார்த்தத்தை அது புரிந்து கொள்ள வேண்டும்.தவறான வழிகாட்டல்களால் இலங்கையிலேயே வாழ்கின்ற தமிழ் மக்களை எதிரிகளாகப் பார்ப்பதை விடுத்து இந்தியா தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியாவால் எவ்வளவோ துன்பங்களை ஈழத்தமிழர்கள் அனுபவித்துவிட்டார்கள். இதற்கெல்லாம் பிராயச்சித்தங்கள் செய்யவேண்டிய பொறுப்பும் இந்தியாவுக்குண்டு.

http://www.tamilthai.com/?p=26611

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும், கரைந்து போகும் மேகங்கள்!!! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை ப ஜ க ஆட்சிக்கு வந்தால் பிராயச்சித்தம் கிடைக்கலாம்.

Edited by தமிழ் அரசு

இந்தியா எமக்காக ஒன்றுமே செய்யாது, காங்கிரஸ் உள்ளவரை. காங்கிரஸ் இருக்கும் பொழுது, தான் தப்ப சிங்களத்தை போட்டுக்கொடுத்து எமக்கும் பிராயச்சித்தம் தேடுவதுபோல காட்டக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.