Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நாடுகளின் இராஜதந்திரிகள் வரைமுறைகளை மீறிச் செயற்படுகின்றனர் – ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன இராஜதந்திரிகள் நாட்டின் உள் விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதில்லை

சில நாடுகளின் இராஜதந்திரிகள், இராஜதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்களையும், பணிப்பாளர்களையும் குறித்த இராஜதந்திரிகள் நேரடியாக சந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைசார் அமைச்சர்கள் அல்லது அமைச்சுக்களின் செயலாளர்களது அனுமதியின்றி இராஜதந்திரிகள் அரச நிறுவன அதிகாரிகளை சந்திப்பது இராஜதந்திர வரைமுறைகளுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு இராஜதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்படக் கூடாது என குறித்த இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் துறை அமைச்சர்களும், அமைச்சு செயலாளர்களும் அறிந்திராத வகையில் அரச நிறுவன உயரதிகாரிகளுடன் சில நாட்டு இராஜதந்திரிகள் நேரடியான தொடர்புகளைப் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு இராஜதந்திர வரைமுறை மீறிச் செயற்படும் அநேகமான இராஜதந்திரிகள் பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகள், இலங்கையில் நல்லாட்சி நிலவவில்லை என குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீனா போன்ற நாடுகள் எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன இராஜதந்திரிகள் நாட்டின் உள்விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதில்லை என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

சீன இராஜதந்திரிகள் நாட்டின் உள்விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதில்லை என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐயா மகிந்தாவே இருட்டில் கறுத்த பூனையை எவ்வளவு நாட்களுக்கு தேடுகிறேன் என ஏமாற்ற முடியும்?

உலக நாடுகள் எல்லாம் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் அவர்கள் உளவு பார்ப்பது உங்களுக்கு தெரியவாய்ப்பில்லை. உங்கள் நாட்டிலும் சீனாவிலும் மனித உரிமைகள் என்றால் கிலோ என்ன விலை என மட்டும் கேட்பது பார் அறிந்த விடயம்.

Chinese envoy decries ‘irresponsible’ coverage of Tory MP’s e-mail affair

http://www.theglobeandmail.com/news/politics/ottawa-notebook/chinese-envoy-decries-irresponsible-coverage-of-tory-mps-e-mail-affair/article2165561/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.