Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு லியம் பொக்ஸ் ஆதரவளிக்க வேண்டும் பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Liam_1.jpg

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானியப் பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி பிரி. வடக்கு சொம்செற் தொகுதியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நெயஸ்சீ நகர சதுக்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை அக்ற்நெளவ் என்ற அமைப்பு மற்றும் தமிழர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் வீதியில் சென்றவர்களிடம் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் அது தொடர்பான மனுவொன்றிலும் கையெழுத்துக்களைத் திரட்டியுள்ளனர்.

வடக்கு சொம்செற் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான லியம் பொக்ஸ் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைக் குறித்து அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பான மனுவையும் ஆதரவா கத்திரட்டிய கையொப்பங்களையும் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் லியம் பொக்ஸின் தொகுதி செயலகத்தில் கையளிக்கவுள்ளனர்.

போர்க்குற்ற விசாரணைக்கு லியம்பொக்ஸ் ஆதரவு தெரிவிக்கும் வரை தாம் தொடர்ந்து வடக்கு சொம்செற் தொகுதியில் தொடர்ச்சியாக இத்தகைய போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilthai.com/?p=26780

நிலையான அரசியல் தீர்வு அவசியம்

இனப்பிரச்சினைக்கு நிலையானதும் காத்திரமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை எட்ட வேண்டுமாயின் பிரச்சினைக்கான மூலக்காரணிகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரிட்டன் தூதரக உயர் அதிகாரி ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கருதப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் நிலவி வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.வரலாற்றுக் காலம் முதலே இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதும் காத்திரமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை எட்ட வேண்டுமாயின் பிரச்சினைக்கான மூலக்காரணிகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வட அயர்லாந்து கிளர்ச்சிகளின் போது பிரிட்டன் இதனை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பல்வேறு இனங்களுக்கு இடையில் நீண்ட கால அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan...509562216784388

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நரி ஒரு பொல்லாத நரி இதுக்கு ஸ்ரீலங்கா டைகர் பிறவுன்சும் கிரி பத்தும் சி . அழ ...களும் ரொம்பவும் பிடிக்கும் இது இதற்காக அடிக்கடி ஸ்ரீலங்கா போய்வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே .........

  • கருத்துக்கள உறவுகள்

தனது உடலையும், தனது குடலையும் மட்டுமே பற்றி சிந்திக்கின்ற இந்த நரிக்கு, சிங்களம் தீனி போடுகின்றது! இவரிடமிருந்து மனிதாபிமானத்தை எதிர் பார்ப்பது, நமது முட்டாள்தனமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.