Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிடம் மனிதஉரிமைகள் பேரவை தோல்வியைச் சந்தித்துள்ளது – மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

human%20rights%20watch.jpg

சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தோல்வியைச் சந்தித்துள்ளதாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கடந்த ஒரு ஆண்டு செயற்பாடுகள் தொடர்பாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இன்று 69 பக்க அறிக்கை ஒன்றை ஜெனிவாவில் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் 2010 ஜுலை தொடக்கம் 2011ஜுன் வரையிலான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

சில நாடுகள் விடயத்தில் ஐ.நா மனிதஉரிமை பேரவையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்த போதும், முக்கியமான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, பஹ்ரெய்ன் ஆகிய நாடுகள் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதில் தோல்வியைச் சந்தித்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ஐ.நா நிபுணர்குழு சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கு நம்பகமான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இதுபற்றி மீள்விசாரணை நடத்த வேண்டும் என்றும் பர்ந்துரை செய்த்தாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இன்னமும் சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் விவகாரத்தை மீள்விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மீள்விசாரணை செய்ய வேண்டும் என்றும் சிறிலங்கா அரசின் பொறுப்புக் செயற்பாடுகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற கவலையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை அமைத்தல் உள்ளிட்ட நிபுணர்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா பொதுச்செயலரை மனிதஉரிமைகள் பேரவை ஊக்குவிக்க வேண்டும் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது.

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு தோல்வி _

வீரகேசரி நாளேடு 9/23/2011 11:30:08 AM

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தோல்வியைச் சந்தித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த ஒரு ஆண்டு செயற்பாடுகள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று 69 பக்க அறிக்கை ஒன்றை ஜெனீவாவில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2010 ஜூலை தொடக்கம் 2011 ஜூன் வரையிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

சில நாடுகள் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்தபோதும் முக்கியமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான், இலங்கை, பஹ்ரெய்ன் ஆகிய நாடுகள் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதில் தோல்வியைச் சந்தித்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ஐ.நா. நிபுணர்குழு இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதற்கு நம்பகமான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இதுபற்றி மீள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இன்னமும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விவகாரத்தை மீள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை மீள் விசாரணை செய்ய வேண்டும் இலங்கை சிறிலங்கா அரசின் பொறு ப்புச் செயற்பாடுகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற கவலை யை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கோரப்பட் டுள்ளது.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை பொறிமுறையை அமைத்தல் உள்ளிட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா.பொதுச் செயலரை மனித உரிமைகள் பேரவை ஊக்குவிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33952

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.