Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாந்தபுரத்தில் மக்களின் காணிகளையே படையினர் அபகரித்துள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தபுரத்தில் மக்களின் காணிகளையே படையினர் அபகரித்துள்ளனர்

05 அக்டோபர் 2011

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்

Militarization%20in%20kilinochchi1_CI.JPG

சாந்தபுரம் பகுதில் மக்களுக்கு சொந்தமான காணிநிலங்களையே படையினர் அபகரித்துள்ளனர் என்று குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார். இரணைமடுவுக்கும் சாந்தபுரம் பகுதிக்கும் இடையில் உள்ள காணியை படையினர் அபகரித்தாக குளோபல் தமிழ்ச் செய்திகள் உடனடியாகச் செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த பகுதியில் இராணுவத் தளவாடங்களை படையினர் காட்சிப் படுத்தியுள்ளனர்.

குறித்த காணி நிலப்பகுதி சாந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவிற்குள் அடங்குகிறது. வெளிநாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த காணியை அந்தக் காணிக்குறியவர் வந்து பார்த்துச் சென்றுள்ளார். புலிகளுக்குச் சொந்தாமான காணி என்று குறிப்பிட்ட படையினர் தமது பாவனைக்கு காணியை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாந்தபுரம் பகுதியை மக்களிடம் இருந்து அபகரிக்க முற்பட்ட பொழுது அதை எதிரத்து நின்று அந்தக் காணிநிலங்கள் தமக்குத் தேவை என்று மக்கள் கடும் போராட்டங்களை நடத்தியிருந்தனர். மக்களின் ஆறுமாத காலப் போராட்டத்தை தொடர்ந்து மக்களின் காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. சாந்தபுரம் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த காணிநிலத்தில் இராணுவப் பிரதேசம் என்று பெயர்பலகை நாட்டி மக்கள் உள்நுழைய இராணுவத்தினர் தடை விதித்திருந்தனர்.

'இராணுவத்தினரின் பிரதேசம்' உள் நுழையத் தடை என்று குறிப்பிட்டு நாட்டியிருந்த ஆக்கிரமிப்புப் பெயர்ப் பலகையை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புகைப்படம் பிடித்திருந்தார்.

Militarization%20in%20kilinochchi1_CI.JPG

அதேவேளை சாந்தபுரம் பகுதிக்கு இரணைமடு என்று பெயர் மாற்றவும் படைத்தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. கிராமத்தின் பெயர்ப் பலகையிலும் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் என்ற பாடசாலையின் பெயர்ப்பலகையிலும் இரணைமடு என்று ஊரின் பெயர் மாற்றி எழுதப்பட்டுள்ளது. அதன்படி இரணைமடு என குறித்த கிராமத்தை அடையாளப்படுத்தியதுடன் இரணைமடு கலைமகள் வித்தியாலயம் என்றும் பாடசாலைக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது..

Militarization%20in%20kilinochchi2.JPG

சாந்தபுரம் பிரதேச இராணுவ அதிகாரி ஒருவர் தான் பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெயர்ப் பலகைகளை அன்பளிப்புச் செய்யப் போவதாக தெரிவித்து கொழும்பில் தான் படித்த பாடசாலை அந்த அன்பளிப்பை வழங்குகிறது என்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள பாடசாலை அதன் அபதிர் மற்றும் புத்த பிக்கு ஒருவரது பெயர்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை பொறித்ததுடன் பாடசாலை சுவரிலும் அதை பொறித்துள்ளனர்.

சாந்தபுரம் என்ற கிராமத்தின் பெயர் சாந்தன் என்ற புலிகள் இயக்க மாவீரர் ஒருவரது பெயரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று படையினர் குறித்த கிராமத்திற்கு பெயரை மாற்றம் செய்ய முனைந்து வருகின்றனர். குறித்த காணிப் பகுதியில் படையினரின் யுத்த தளபாடங்கள் காட்சிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் படையினரின் தேவைக்கு பயன்படுதப்பட்டம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மக்களுக்கு சொந்தமான காணியை படையினர் அபகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Militarization%20in%20kilinochchi3%20copy.jpg

அதேவேளை இந்தப் பகுதியை அண்டிய இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் அருகாமையில் பெரும் படைமுகாமிற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் விமானத்தின் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிங்கள சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கிலேயே போரின் தடங்களை குறித்த காணிகளில் இராணுவத்தினர் காட்சிப்படுத்துகின்றனர் என்று குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68155/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.