Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு 6488 பேர் களத்தில் பாதுகாப்பு _

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு 6488 பேர் களத்தில் பாதுகாப்பு _

வீரகேசரி நாளிதழ் 10/8/2011 9:17:42 AM

கொழும்பு மாநகரசபை உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 420 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 6488 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 உள்ளூராட்சி சபைகளிலும் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

மூன்றாவது கட்டமாக இன்று நடைபெறும் இந்த தேர்தலில் 1,167 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 21ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

இன்று நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது முடிவு வெளியிடப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு. கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை, குருணாகல், அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி ஆகிய 13 மாவட்டங்களிலேயே 23 சபைகளுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்றது. 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரதான வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்து நேற்று பொலிஸாரின் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்லுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுகின்றபோதிலும் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் கொழும்பு மாநகரசபை உட்பட 23 சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி கைப்பற்றும் என்று அதன் செயலாளரும், அமைச்சருமான பசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேபோல் கொழும்பு மாநகரசபை உட்பட பெரும்பாலான சபைகளை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றும் என்று அக்கட்சியன் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இங்கு ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் கணிசமான உறுப்பினர்களை பெறலாம் என்ற நமக்பிக்கையும் செயற்பட்டு வருகின்றன.

கொழும்பு மாவட்டம்

பாராளுமன்ற தேர்தல் ஒன்றில் முன்னெடுக்கப்படும் பிரகாரங்களுக்கு ஒத்த பிரகாரம் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்காக இம்முறை முன்முனைகளில் ஏட்டிக்கு போட்டியாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெறும் கொழும்பு மாநகர சபைக்கு 53 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக கட்சிகளின் சார்பில் 531 பேரும் சுயேட்சைக்;குழுக்களின் சார்பில் 590 பேருமென 1121 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களை தெரிவு செய்வதற்காக 3 இலட்சத்து 93 ஆயிரத்து 85 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

தெஹிவளைகல்கிஸை மாநகர சபைக்கு 29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் சார்பில் தலா 210 பேர் போட்டியிட்டுள்ளதுடன் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 903 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டை மாநகர சபைக்கு 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 130 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 156 உறுப்பினர்களும் அடங்களாக 286 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 73 ஆயிரத்து 486 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். மொரட்டுவை மாநகர சபைக்கு 29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 210 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 105 உறுப்பினர்களும் அடங்களாக 315 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1 இலட்சத்து 13 ஆயிரத்து 795 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

கொலன்னாவ நகர சபைக்கு 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 90 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 45 உறுப்பினர்களும் அடங்களாக 135 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 36ஆயிரத்து 504 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் தொடர்பில் 135 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 108 உறுப்பினர்களும் அடங்களாக 243 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 78 ஆயிரத்து 144 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

கம்பஹா மாவட்டம்

நீர்கொழும்பு மாநகர சபைக்கு 26 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் தொடர்பில் 288 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 128 உறுப்பினர்களும் அடங்களாக 416 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1 இலட்சத்து 283 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

கம்பஹா மாநகர சபைக்கு 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 192 பேரும் சுயேட்சைக் குழுக்களின் தொடர்பில் 96 உறுப்பினர்களும் அடங்களாக 288 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 45 ஆயிரத்து 890 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டம்

கண்டி மாநகர சபைக்கு 24 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 210 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 150 உறுப்பினர்களும் அடங்களாக 360 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 74 ஆயிரத்து 73 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

குண்டசாலை பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 168 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 28 உறுப்பினர்களும் அடங்களாக 196 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 88 ஆயிரத்து 903 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

கங்கவத்தை கோரளை பிரதேசசபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 112 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 48 உறுப்பினர்களூம் அடங்களாக 160 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 40 ஆயிரத்து 391 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தளை மாவட்டம்

மாத்தளை மாநகர சபைக்கு 13 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 136 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 119 உறுப்பினர்களும் அடங்களாக 255 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 26 ஆயிரத்து 587 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம்

நுவரெலியா மாநகர சபைக்கு 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 65 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 78 உறுப்பினர்களும் அடங்களாக 143 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 18 ஆயிரத்து 472 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

காலி மாவட்டம்

காலி மாநகர சபைக்கு 19 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 200 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 150 உறுப்பினர்களும் அடங்களாக 350 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 64 ஆயிரத்து 720 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தறை மாவட்டம்

மாத்தறை மாநகர சபைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 140 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 40 உறுப்பினர்களும் அடங்களாக 180 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 51 ஆயிரத்து 895 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாநதோட்டை மாவட்டம்

அம்பாநதோட்டை மாநகர சபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 112 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 64 உறுப்பினர்களும் அடங்களாக 176 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 14 ஆயிரத்து 616 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாநதோட்டை பிரதேச சபைக்கு 05 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 36 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 18 உறுப்பினர்களும் அடங்களாக 54 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 23 ஆயிரத்து 511 @பர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

சூரியவௌ பிரதேசசபைக்கு 07 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 49 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 07 உறுப்பினர்களும் அடங்களாக 56 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 29 ஆயிரத்து 894 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டம்

கல்முனை மாநகர சபைக்கு 19 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 225 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 200 உறுப்பினர்களும் அடங்களாக 425 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 68 ஆயிரத்து 198 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

குருநாகல் மாவட்டம்

குருநாகல் மாநகர சபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 112 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 144 உறுப்பினர்களும் அடங்களாக 256 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 19 ஆயிரத்து 307 பே ர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டம்

அநுராதபுரம் மாநகர சபைக்கு 13 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 102 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 51 உறுப்பினர்களும் அடங்களாக 153 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 32 ஆயிரத்து 975 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பதுளை மாவட்டம்

பதுளை மாநகர சபைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 160 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 40 உறுப்பினர்களும் அடங்களாக 200 பேரும் போட்டியிடுகின்றனர். அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 29 ஆயிரத்து 312 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டம்

இரத்தினபுரி மாநகர சபைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 200 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 100 உறுப்பினர்களும் அடங்களாக 300 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 32 ஆயிரத்து 677 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

கொழும்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட வேய்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏனைய சபைகளை விடவும் அதிகமாக இருப்பதனால். அந்த சபைக்கான வாக்குச்சீட்டின் நீளம் 2 அடியாக இருக்கின்றது. அத்துடன் வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பிற்கென வாக்குப்பெட்டிக்குள் விஷேட ஸ்ரக்கர் ஒட்டப்படும். சபைக்கான பெறுபேற்றை மாற்றும் வகையில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறுமாயின் அந்த சபைக்கான வாக்களிப்பு முழுமையாக இரத்து செய்யப்பட்டு மறுத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த தேர்தலில் பாதுகாப்பு கடமைகளுக்கென 22 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பு தினத்தன்று வன்முறைகள் இடம்பெறுமாயின் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு மேலதிக படையினர் பாதுகாப்பு கடமைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தேர்தலுக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34217

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

420 கதிரைகளுக்காக 6,488 பேர் களத்தில்; கொழும்பு உட்பட 23 சபைகளுக்கு தேர்தல் வாக்களிப்பு இன்று

news

கொழும்பு மாநகரசபை உட்பட 17 மாநகர சபைகள், ஒரு நகரசபை, 5 பிரதேச சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 23 உள்ளூராட்சி சபைகளில் 420 உறுப்பினர் பதவிகளுக்காக 6 ஆயிரத்து 488 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆயிரத்து 167 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

2010 வாக்காளர் பட்டியலின் பிரகாரம் இம்முறை தேர்தலில் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.கொழும்பு, தெஹிவளை கல்கிஸை, ஸ்ரீ ஜயவர்தனபுரகோட்டே, மொறட்டுவ, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, குருநாகல், பதுளை, அநுராதபுரம், இரத்தினபுரி ஆகிய 17 மாநகரசபைகளுக்குமான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

அத்துடன், கொலன்னாவ நகரசபைக்கான தேர்தலும், கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேசசபை, குண்டசாலை பிரதேசசபை, கங்கவட்ட கோரளை பிரதேசசபை, ஹம்பாந்தோட்டை பிரதேசசபை மற்றும் சூரியவௌ பிரதேசசபை ஆகியவற்றுக்கான தேர்தலும் இன்று நடைபெறுகின்றது. 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக 163 கட்சிகளும், 132 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன. இதில் 9 கட்சிகளதும், 28 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 160 கட்சிகளும் 104 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அதற்கமைய 160 கட்சிகள் சார்பில் 3ஆயிரத்து 813 வேட்பாளர்களும், 104 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 2ஆயிரத்து 675 வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.இதேவேளை, முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னரே அறிவிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி கூறினார்.

இத் தேர்தலில் விசேடமாக கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கென 6 பேர் அடங்கிய குழு ஒன்று இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இக்குழு தேர்தலைக் கண்காணித்து தேர்தலின் பின்னர் அறிக்கை ஒன்றை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

22ஆயிரம் பொலிஸார்

இன்று நடைபெறும் தேர்தலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிர்வகிக்கவென 14 பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த தேர்தல்களை விடவும் குறைவான வன்முறைச் சம்பவங்களே இம்முறை பதிவாகியுள்ளன எனத் தெரிவித்த அவர், நேற்றுவரை தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் 94 முறைப்பாடுகள் பதிவாகின எனவும் கூறினார். இது தொடர்பில் 194 பேர் கைதுசெய்யப்படடுள்ளனர் எனவும், 45 வாகனங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கொழும்பின் தனித்துவம்

கொழும்பு மாநகரசபைக்கான வாக்குச்சீட்டு இம்முறை இரண்டு அடி நீளம் கொண்டதாக உள்ளது. ஏனைய 22 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுகின்ற கட்சிகள், வேட்பாளர்களின் எண்ணிக்கையை விடவும், கொழும்பு மாநகரசபைக்காகப் போட்டியிடுகின்ற கட்சிகளதும், வேட்பாளர்களதும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இதற்கான காரணம் எனத் தேர்தல்கள் செயலகத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

08 அக்டோபர் 2011, சனி 9:30 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=65438603208439896

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.