Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியுறவு செயலர் இலங்கையில்- தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

Featured Replies

வெளியுறவு செயலர் இலங்கையில்- கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் இலங்கைக்கு போயுள்ள நிலையில், கச்சத்தீவு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை அடித்து விரட்டி தாக்கியுள்ளது இலங்கை கடற்படை.

மத்திய வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் மத்தாய் இலங்கை போயுள்ளார். போவதற்கு முன்பு சென்னை வந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்தார். அப்போது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வரும் செயல் குறித்து கடுமையாக பேசிய முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்சினையை இந்திய அரசு தேசியப் பிரச்சினையாக அணுக வேண்டும். இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் சமீப காலமாக தொடர்ந்து இந்திய மீனவர்களைத் தாக்கி வரும் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த காலிப்படையினர் நேற்றும் மண்டபம் பகுதி மீனவர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

மண்டபம் பகுதியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படை ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் மீனவர்களின் வலைகளை பறித்து கிழித்து எறிந்தனர். மீன்களையும் கடலில் தூக்கிப் போட்டனர். பின்னர் தமிழக மீனவர்களை ஓடுமாறு மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து வேகமாக கரைக்குத் திரும்பி விட்டனர்.

இலங்கைக் கடற்படையின் இந்த காலித்தனம் தொடர்வது குறித்து இதுவரை மத்திய அரசு வாய் திறக்காமல் மூடியபடி இருப்பது மீனவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

http://thatstamil.on...en-aid0091.html

Edited by akootha

  • தொடங்கியவர்

தமிழக மீனவர் தாக்கப்படுவதை தேசப் பிரச்னையாக பார்க்க வெளியுறவுச் செயலரிடம் ஜெ. வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தேசப் பிரச்னையாக பார்க்க வேண்டும் என்று என்று வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

மூன்று நாள் பயணமாக இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

இந்திய வெளியுறவுச் செயலராக பொறுப்பேற்ற பின் ரஞ்சன் மாத்தாய் முதல் முறையாக இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.

இலங்கைக்கு இன்றிரவு செல்லும் அவர், அதற்கு முன்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை மாலை 5.45-க்கு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பு குறித்து அவரிடம் கருத்து கேட்பதற்காக நிருபர்கள் அதிக எண்ணிக்கையில் கூடியிருந்தனர். ஆனால், நிருபர்களிடம் பதில் வணக்கம் செலுத்திபடியே வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் தனது காரில் ஏறி கிளம்பிவிட்டார்.

முன்னதாக, மாலை 4.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தபோதும் பத்திரிகையாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்துவிட்டார்.

ஜெ. வலியுறுத்தல்...

முதல்வரை வெளியுறவுச் செயலர் சந்தித்தது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடனான சந்திப்பின்போது முதல்வர் ஜெயலலிதா, புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 5 மாதங்களாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் சம்பவங்களை தொகுத்து எடுத்துரைத்தார்.

கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி அன்று இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 4 மீனவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்றும், அதுபோன்று 20-ம் தேதி 23 மீனவர்களை பிடித்து 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர் என்றும், ஜூலை 4-ம் தேதி நாட்டுப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த 14 மீனவர்களை பிடித்தனர் என்றும் கூறினார்.

பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் பிடித்து துன்புறுத்திய பல்வேறு சம்பவங்களையும் முதல்வர் ஜெயலலிதா நினைவுகூர்ந்தார். இந்த ஆண்டு கடந்த மே மாதம் தொடங்கி இதுவரை இதுபோன்று 14 சம்பவங்கள் நடந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தமிழக மக்கள் என்று பார்க்காமல் இந்திய குடிமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாக பார்க்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான ஆக்ரோஷமான தாக்குதலை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக கருத வேண்டும்.

அதுமட்டுமின்றி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை, பாகிஸ்தான், சீன எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது அந்த நாடுகளின் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவத்தை போன்று கருத வேண்டும். மேலும், இந்த பிரச்னையை தமிழகத்தின் தனிப்பட்ட பிரச்னையாக பார்க்காமல் தேசிய பிரச்னையாக பார்க்க வேண்டும்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் பெரும்பாலும் ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கடலோர பகுதிகளில்தான் நடக்கின்றன. இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும், பிடித்துவைத்துள்ள மீன்களையும் பறித்து கொள்கிறார்கள். இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு அப்பால் உள்ள கடல்பகுதியில் உன்னிப்பாக கண்காணித்து அந்த பகுதியில் வரும் படகுகளை குறிவைத்து தாக்குகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இலங்கை கடற்படைக்கு தெரிந்தே நடக்கின்றன என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

மேலும், இலங்கை மீனவர்கள் என்ற போர்வையில் தமிழக மீனவர்களை தாக்கி வருவது இலங்கை கடற்படையினர்தான் என்றும் அவர் கூறினார். நீண்ட தூரம் செல்ல தேவைப்படும் டீசலை எடுத்துச்செல்ல முடியாத சிறிய படகுகளில்கூட இலங்கை கடற்படையினர் வந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது முக்கியமான விஷயம் ஆகும்.

கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமைகளை அனுபவிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். வெளியுறவுத்துறை செயலாளர் தனது இலங்கை பயணத்தின்போது இந்த பிரச்னைகளை எல்லாம் இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

மேலும், இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வழிவகை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசிடம் வலியுறுத்துமாறும் முதல்வர் ஜெயலலிதா வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் கேட்டுக்கொண்டார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://news.vikatan.com/?nid=4290

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா கடற்படை தாக்குதல்கள் இந்தியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும் - ஜெயலலிதா [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஒக்ரோபர் 2011, 07:45 GMT ] [ அ.எழிலரசன் ]

T.N-JJeya.JPG"சீற்றங்கொள்ள வைக்கின்ற செயலாக உள்ளதுடன், இந்தியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும்" என தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் குறித்து தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு கொழும்பிற்குச் செல்வதற்கு முன்னர் இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய், தமிழ்நாட்டு முதல்வரை சந்தித்துக் கொண்டபோதே அவர் இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

"சிறிலங்கா கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களானது தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மட்டும் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதலாக மட்டும் கருதப்படக் கூடாதென்றும், இது ஒட்டுமொத்தமாக இந்தியக் குடிமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களாகவும், இந்தியா என்ற நாட்டிற்கு எதிராக சிறிலங்காவால் மேற்கொள்ளப்படுகின்ற ஆத்திரமூட்டக் கூடிய செயலாகவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவும் கருதப்பட வேண்டும்" எனவும் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சிறிலங்கா கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களானது அயல்நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளால் இந்திய எல்லைப் புறங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களுக்கு ஒப்பானது எனவும் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தையாவிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

கடந்த மே மாதத்திலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் 16 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், இத்தாக்குதல்களை தேசிய பிரச்சினையாகவே நோக்க வேண்டும் என்றும், மாறாக தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகக் கருதக் கூடாதென்றும், முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாக இந்திய அரசால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைத்தல் மற்றும் துன்புறுத்தல்களை விளைவித்தல் போன்றன அதிகம் இந்தியாவின் இராமநாதபுரம் மற்றும் நாகபட்டினம் போன்ற மாவட்டங்களுக்குச் சொந்தமான கடலிலேயே நடைபெறுவதாகவும், கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டு மீனவர்களுக்குச் சொந்தமான கடல் எல்லையில் குறிப்பாக நாகபட்டின மாவட்டத்தின் கடல் பிரதேசத்தில் சிறிலங்கா மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"சிறிலங்காவின் கடல் எல்லைக்கு வெளியே தொழிலில் ஈடுபடுத்தப்படும் படகுகள் சிறிலங்கா கடற்படையால் கண்காணிக்கப்படுவதாகவும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சிறிலங்கா கடற்படையின் துணையுடனேயே மேற்கொள்ளப்படுவதாகவும்" தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவிற்கான தனது மூன்று நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் அங்கு சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடும்போது இவ்வாறான விடயங்கள் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சிறிலங்கா மீனவர்கள் என்ற போர்வையில் தமிழ்நாட்டு மீனவர்களை அச்சுறுத்தியவர்கள் உண்மையில் சிறிலங்காவின் கடற்படை வீரர்களாக இருக்கலாம் எனவும் முதல்வர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம்:The Hindu

http://www.puthinappalakai.com/view.php?20111009104836

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.