Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூவரின் தூக்குத் தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூவரின் தூக்குத் தண்டனை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன்.

15 அக்டோபர் 2011

சாந்தன், அறிவு, முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்காலத்தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் வரவிருப்பதையொட்டி தமிழகத்தில் மரணதண்டனைக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வேர்விடத் துவங்கியுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரின் தூக்கிற்கு எதிரான போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்த ஏனைய எல்லா கட்சிகளும் பங்கேற்கின்றன. ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் உற்ற நண்பராகவும் இருந்த ஜெயலலி்தாவே மரணதண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் உற்ற தோழனாக மாறிவிட்ட திமுகவும் தூக்குத் தண்டனையை எதிர்க்கிற நிலையில் தமிழகத்தில் எழுந்துள்ள இந்த புதிய சூழல் மத்திய அரசையும் காங்கிரஸ் கட்சியையும் ஒரு விதமான நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட காலத்தைப் போன்ற சூழல் இன்று இல்லை.ராஜீவ் கொல்லப்பட்ட சூழல் தமிழகத்திற்கு நெருக்கடியான காலம். அச்சூழலை பயன்படுத்தியே தடாச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கருத்துரிமை பறிப்பும் அடக்குமுறையும் ஏவப்பட்ட நிலையை தமிழகம் கடந்து வந்து விட்டது.

இன்று சட்டத்தின் நடவடிக்கை என்னும் பெயரில் நிகழவிருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடும் சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் கசப்பும் ஈழ மக்கள் படுகொலையும் எடுபடாமல் போயிருந்தால் இன்றைக்கு தூக்குத் தண்டனையை எதிர்க்கிற கட்சிகள் மௌனமாகவே இருந்திருக்கும். சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் மக்கள் சட்டத்தோடு போராடிய போராட்டமும், ஏராளமான அமைப்புகள் மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்ததன் விளைவாகமே இன்றைய சூழல் கனிந்துள்ளது. தமிழகமெங்கிலும் விலைவாசி உயர்வு, வேலையிழப்பு, மின்வெட்டு, தொழில் இழப்பு என பல் வேறு இன்னல்களை அனுபவிக்கும் மக்கள் அத்தோடு கூடவே ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியா துரோகம் இழைத்து விட்டதாகவும் நம்புகிறார்கள். கூடவே தூக்குத் தண்டனை கூடாது என்ற சிந்தனையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் இன்று காங்கிரஸ் கட்சி மக்கள் மன்றத்தை சார்ந்திருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.ஆகவே தூக்குத் தண்டனை விஷயத்தில் நீதிமன்றத்தினூடாக இதை நிறைவேற்றத் துடிக்கிறது காங்கிரஸ் கட்சி. கருணை மனுக்கள் தள்ளிப் போடப்பட்ட விஷயங்களில் முன்னுதாரணங்களைக் கொண்டு நீதிமன்றம் மூலம் தடையாணை பெற்றது தமிழக மனித உரிமை வரலாற்றில் ஒரு மைல் கல். மனித உரிமை வரலாற்றில் மட்டுமல்ல நீதிமன்ற வரலாற்றிலும் கூட அது ஒரு முன்னுதாரண வழக்கு.மூவரின் தூக்கையும் நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்க நீதிமன்ற வளாகத்தில் பல்லாயிரம் பேர் திரண்டிருந்தனர். ஒரு நீதிமன்ற வளாகத்தினுள் ஒரு வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து பல்லாயிரம் பேர் திரண்டு நிற்பதென்பது நீதிமன்றத்தை அச்சுறுத்துவதென்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதென்றும் காங்கிரசார் பிரச்சாரம் செய்தனர்.இது தொடர்பான கேள்வியொன்றை நீதிபதியிடம் கேட்ட போது அவரோ இதை ”பாப்புலர் செண்டிமெண்ட்” என்று சொல்லிச் சிரித்துச் சென்றார்.

ஆனால் மூப்பனார் பேரவை என்னும் அமைப்பைச் சார்ந்த ஒருவர் திடீரென முருகன், சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை தொடர்பாக தமிழார்வலர்கள் தொடுத்துள்ள வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகச் சொன்ன காங்கிரஸ் கட்சி அந்த வழக்கை உச்சநீதிமன்றத்திலேயே தொடர்ந்தது. கீழ் நீதிமன்றத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கும் செல்லும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கிறது.ஒரு மாநில நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கு தொடர்பான இன்னொரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது மூப்பனார் பேரவை..கடந்த ஜெயலலிதா ஆட்சியில் சங்கராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார்.அந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி சங்கரமடம் தரப்பு வழக்குத் தொடர்ந்தது. அப்போது ஆட்சியிலிருந்த திமுக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் அந்த வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டது. அது போல வருமானததிற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா மீதான அந்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்த வழக்குகளையும் இந்த வழக்குகளையும் ஒன்று போல பார்க்க முடியாது இது உயிரோடு தூக்குமர நிழலில் நிறுத்தப்பட்டுள்ள மூவரின் வாழ்வு சம்பந்தப்பட்டது.மற்ற வழக்குகள் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களின் வழக்குகள் ஆனால் மூவரின் வழக்கோ மனித உரிமயாளர்கள் மற்றும் சட்ட உரிமைகளின் படியே விடுதலை வேண்டி நிற்கிறது.

மூப்பனார் பேரவை என்னும் காங்கிரஸ் கட்சியின் அமைப்பானது சட்டக்காரணங்ககாக அல்லாது அரசியல்காரணங்களுக்காகவே இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளhது. அவர்கள் சொல்கிற அரசியல் காரணம் விசித்திரமானது. அது ஒன்றே ஒன்றுதான் அது தமிழகத்தில் சுழல் சரியில்லை ஆகவே வழக்கை வேறு மாநி்ல நீதி மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோருகிறார்கள்.காங்கிரசார் எந்த அளவுக்கு மக்கள் மீது தமிழகத்தில் வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. தமிழநாட்டின் மீது அவர்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர் ராம்ஜெட்மலானி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.மூப்பனார் பேரவை தொடுத்த இந்த வழக்கில் தன் கருத்தைத் தெரிவித்த தமிழக அரசு இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து மாற்ற எதிர்ப்புத் தெர்வித்துள்ளது. இந்த வழக்கு வழக்கில் தொடர்புடையவர்களின் வழக்காடு உரிமையை பறித்து விடுகிறது. மேல் முறையீட்டு உரிமையை பறித்து விடுகிறது.இந்த வழக்கில் வென்றிருப்பது நீதிமன்றம் மூலம் என்றாலும் இந்த வெற்றியின் அடித்தளம் மக்கள் உணர்வுகளில் இருந்து உருவானது. அதனால்தான் காங்கிரசார் தமிழர்கள் அல்லாத வேறு மொழி பேசும் மாநிலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68669/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.