Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் நாடுகளை நோக்கிப் பொன்முட்டைகள் : சுதர்சன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளை நோக்கிப் பொன்முட்டைகள் : சுதர்சன்

greasedevil.jpg

வரலாறு தெரிந்த காலம் முதல் வளரும் தலைமுறை சமூகவிரோதச் சிந்தனை அனைத்தையுமே நியாயமான வாழ்க்கை முறை என்று கேட்டே முதுமை கொள்கிறது.

பெரும் வியாபார நிறுவனங்களின் கொள்ளையை நயம் மிக்க வியாபாரத் தந்திரம் என்று விதந்து போகிறார்கள். அத் திருட்டுக்கள் சமூகத்தின் பொதுச் சிந்தனையாகிவிட்டது. அளவுக்கு அதிகமான நுகர்வையும் ஆடம்பரக் கொள்வனவையும் திறமை என்கிறார்கள். இவ்வாறான வரையறைக்குள் சமூகத்தைப் பேணிக்கொள்ளும் அரசியலையே ஜனநாயகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதங்களை மட்டுமே நம்பியிருக்கும் வன் முறை செயற்பாடாக மாற்றமடைந்த போது கூட ஒடுக்கு முறை உருவாக்கிய சமூகத்தின் சிந்தனை தனது எல்லையை வரையறுத்திருந்தது.

துரோகிகள் என்று ஒரு பகுதியாகவும் தியாகிகள் என்று இன்னொரு பகுதியாகவும் சமூகம் பிளவுற்றது. அரசியல் அடிப்படை, தத்துவார்த்தப் பின்புலம், கருத்து என்பன எல்லாவற்றிற்கும் அப்பால் பலம் மிக்கவர்களாக இனம்காணப்பட்டவர்கள் பொதுவாகத் தியாகிகளாகக் கருதப்பட்டனர். வலிமை குன்றிய ஆனால் மாற்று அரசியலை முன்வைத்தவர்கள் துரோகிகள் வரை தரம் தாழ்த்தப்பட்டனர்.

சமூக வழக்காயிருந்த இவ்வாறான கருத்தும் சிந்தனையும் பொதுவாக யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை முறையிலிருந்தே உருவானது. வெளிப்படையாகத் தெரிகின்ற பலம் என்பதே அங்கு முக்கியத்துவப்படுத்தப்பட்டது. அந்தப் பலத்தை அடைவதற்கு அயோக்கியர்கள் கூடத் தகுதியானவர்களாகக் கருதப்பட்டனர்.

அறுபது வீதத்திற்கு மேலாக நில உடமையாளர்களாகவோ, நிர்வாக உத்தியோகத்தர்களாகவோ காணப்பட்ட யாழ்ப்பாணம் சார்ந்தே தமிழ்த் தேசியத்தினது கருத்தியலும் சிந்தனையும் உருப்பெற்றது.

இக்கருத்தியலின் பிரதிநிதிகளாக உருவான விடுதலை இயக்கங்கள் சமூகத்தோடு தம்மை இசைவாக்கம் அடையச் செய்து கொள்வதற்கான வழிமுறைகளைக் கையாண்டனர்.

- பலமானவர்கள் என நிறுவிக்கொள்ள ஏதாவது ஒரு வழியில் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டனர்.

- தாம் சார்ந்த இயக்கத்தை சுற்றி “நாம்” என்ற கருத்து விதைக்கப்பட்டது.

- ஒவ்வ்வொரு “நாம்” இற்கும் மற்றவர்கள் துரோகிகளாக இனம் காட்டப்பட்டனர்.

- எங்காவது தன்னிச்சையான தாக்குதல்கள் நடந்தால்கூட அதனை உரிமை கோரி தமது பலத்தை இனம்காட்ட முற்பட்டனர்.

- தமது குறுகிய வரலாற்றை ஊதிப் பெருப்பித்து தம்மை பலமானவர்களாகவும் தகுதியானவர்களாகவும் காட்ட முற்பட்டனர்.

- யாராவது மரணமடைந்தால் அதன் அனுதாப அலையை நீட்டிப் பெருப்பித்து இலாபகரமான அரசியலாக்கிக்கொண்டனர்.

இந்தச் சிந்தனை புலிகளின் அழிவோடு இலங்கையில் மாறுதலுக்கு உள்ளாகி வருகின்றது. சிறீலங்கா பாசிச அரசுக்கு எதிரான போராட்டங்களை புதிய வழிகளில் முன்னெடுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்வார்கள் என்பது திண்ணம்.

புலம்பெயர் நாடுகளில் இயக்கங்கள் கையாண்ட அதே வழிமுறைகளை இப்போது அங்குள்ள வியாபாரிகள் கையாள்கிறார்களா என்ற சந்தேகம் அவ்வப்போது கேட்கும் சலசலப்புகளிலிருந்து முளைவிடுகிறது.

இதில் இரண்டு வகையான மனித வியாபாரிகளைப் பார்க்கின்றோம்.

முதலாவதாக புலி சார் பிரமுகர்கள் இரண்டாவதாக புலி எதிர்ப்புப் பிரமுகர்கள்.

புலிசார் பிரமுகர்கள் நடுவே பிளவுகளைக் காண்கிறோம். இவர்களை தமக்கு இடையே சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதுவரை சிறீ லங்கா பாசிச இன அடக்கு முறைக்கு எதிராகப் போராடி மரணித்துப் போனவர்களை வைத்தே இவர்களின் அரசியல் நடைபெறுகிறது.

பிரபாகரன் கொலை செய்யப்பட்டது கூட இவர்களுக்குத் தெரியும். இன்னும் பிரபாகரன் இருக்கிறார் என்று குறைந்தபட்ச அஞ்சலி பிரசுரம் கூட விட மறுக்கும் இவர்களின் வியாபாரத்திற்கு பிரபாகரன் பயன்பட்டுப் போகிறார். அதில் வேறு தேசியத் தலைவர் என்று வரிக்கு வரி கூறும் இவர்களின் அயோக்கியத் தனத்தை ஈழத்தில் மரணத்துள் வாழும் மக்கள் அருவருப்பாகத் தான் பார்கிறார்கள்.

உணவும் உறக்கமும் இன்றி போராடி இறந்து போன அப்பாவிகளின் படங்களை வைத்து இவர்கள் ஆடம்பரமாகக் கொண்டாடும் மாவீரர் தினத்தில் மட்டும் பசிக்காக எத்தனை பெண்கள் உடலை விற்கிறார்கள்? எத்தனை பிஞ்சுகள் பசித்த வயிற்றோடு கண்ணீர் வடிக்கிறார்கள்??

சரி இவற்றை எல்லாம் இணையத் தளங்களில் எழுதித் தொலைப்பவர்கள் யாரென்று நோக்கினால், கொலைகார அரசின் அம்மணமான அடிவருடிகள். இவர்களும் அதே இயக்க வழிமுறைகளையெ பின்பற்றுகின்றனர்.

புலி சார்ந்தவர்களுக்கு வியாபாரம் செய்வதற்கு எப்படி அரசால் கொல்லப்பட்டவர்கள் பயன்ப்பட்டுப் போகிறார்களோ, அரசு சார் அயோக்கியர்களுக்கு புலிகளால் கொலை செய்பவர்கள் பயன்படுகிறார்கள்.

இலங்கை அரசாங்கத்துடன் தமது வியாபார நோக்கங்களுக்காக நேரடியான தொடர்பு வைத்திருக்கும் வியாபாரிகளோடு இணைந்த பலர் தமது ஆட் சேர்ப்பு வியாபாரத்தை ஓ ஹோ என்று நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

புலிகளால் கொல்லப்பட்ட பலர் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடியவர்கள். வேறு வழிமுறைகளை முன்வைத்தவர்கள். இவர்களின் மரணத்தை விற்பனை செய்து ஆட்சேர்கும் குழுக்கள் இப்போது துளிர் விடுகின்றன. இது வரைக்கும் இவர்கள் ஆபத்தான கட்டம் வரை வளர்ச்சியடையவில்லை. மரணித்துப் போனவர்களை வைத்து சம்பாதித்துக்கொள்ள இன்னுமொரு வெளி காணப்படுகின்றது என்பதை இவர்கள் நன்கு உணர்ந்து கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

எது எவ்வாறாயினும் சாம்பல் மேடுகளில் இருந்து பொன் முட்டையிடும் வாத்துக்கள் புலம் பெயர்கின்றன என்பது மட்டும் தெளிவாகிறது.

இலங்கையிலிருந்து சுதர்சன் அனுப்பிய ஆக்கம் கருத்து மாற்றமடையாத மாற்றங்களோடு பதியப்படுகிறது

http://inioru.com/?p=23739

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.