Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை சிறிலங்கா அரசு நிராகரிப்பு!

Featured Replies

மகிந்தவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை சிறிலங்கா அரசு நிராகரிப்பு! - கொழும்பு ஊடகம் தகவல்!!

அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணை உள்ளூர் ஊடகங்கள் மூலம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் கூட, அதற்குப் பதில் அளிக்கப் போவதில்லை என சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பில் இருந்து வெளிவரும் The Sunday Leader எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கேணல் ரமேஷின் துணைவியார் வத்சலாதேவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குத் தொடர்பிலேயே சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்த அழைப்பாணை ஊடகங்கள் ஊடாக அனுப்பப்பட்டிருந்தது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஷின் துணைவி வத்சலாதேவி மற்றும் இருவரின் சார்பில் இவ்வழக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

கேணல் ரமேஷின் படுகொலை, வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்குத் தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பதிலளிக்குமாறு கோரும் அழைப்பாணை அலரி மாளிகைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், அதனை ஏற்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்திருந்தனர்.

அமெரிக்கச் சட்டத்தின் பிரகாரம் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை குறித்து அறிந்திருக்க வேண்டும். இதனால், இலங்கையில் உள்ள இரு ஊடகங்கள் மூலம் இந்த அழைப்பாணையை வெளியிட அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணை உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தாலும் கூட, அதற்குப் பதில் அளிக்கப் போவதில்லை என சிறிலங்காவின் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இவ்வழக்குத் தொடர்பில் வலுவான காரணம் எதுவுமின்றி அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கும் போது அதற்கு சிறிலங்கா ஜனாதிபதி பதிலளிக்க வேண்டியதில்லை என ஜெயந்த ஜெயசூரிய கூறியுள்ளார்.

அதுவேளை, சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும் சிறிலங்கா அமைச்சரவையின் சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இராஜதந்திர விலக்கு இருப்பதால், அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணை உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தாலும் கூட அதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது சிறிலங்காவின் சட்டமா அதிபராக இருந்த மொஹான் பீரிஸ், சிறிலங்கா ஜனாதிபதியின் செயலகத்துக்கோ அல்லது வதிவிடத்துக்கோ அமெரிக்க நீதிமன்றத்தின் எந்தவொரு அழைப்பாணையும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் என The Sunday Leader தெரிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிமன்றத்தில் சமூகமளித்து பதிலளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி நிரந்திர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் கடந்த மாதம் 23ஆம் திகதி அழைப்பாணை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.pongutham...62-d39974810fd5

தொடர்புபட்ட செய்தி: ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்பாணையை ஊடகங்களில் வெளியிடுமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது : http://www.yarl.com/...showtopic=92968

Edited by akootha

  • தொடங்கியவர்

மகிந்த ராஜபக்சவுக்கான அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை இலங்கை நாளேடுகளில் விளம்பரப் படுத்த ஏற்பாடாகியுள்ளது….

இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட அழைப்பாணையை இலங்கை நாளேடுகளில் வெளியிட அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், இலங்கை அரச அதிபருக்கு சிக்கல் நிலை அதிகரித்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு இறுதிப் போரில் 40,000 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், 1.4 இலட்சம் பேர் காணாமல் போனதாகவும் ஐக்கி நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ முனின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிப்படுத்தியது.

மனித உரிமை மீறல்கள் விடயம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். இந்நிலையில், தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்ததில் தனது மகனைப் பறிகொடுத்த காசிப்பிள்ளை மனோகரன் என்பவர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கில் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அரச அதிபருக்கு நீதிமன்ற அழைப்பாணையை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணை தன்னை கட்டுப்படுத்தாது என்று மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணை விபரத்தினை ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தும் வகையில் இலங்கையின் முக்கிய பத்திரிகைகளில் அதனை வெளியிட அமெரிக்க நீதிமன்றத்தில் மனுதாரர் முன்தினம் அனுமதி கோரினார்.

அதை ஏற்ற நீதிமன்றம், இலங்கையில் அதிக விற்பனையாகும் 2 நாளேடுகளில் வாரம் 3 முறை என்ற வகையில் நான்கு வாரங்களுக்கு விளம்பரமாக வெளியிடவும், தமிழ்நெட் இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிடவும் அனுமதி அளித்தது.

இது தொடர்பாக, அமெரிக்க வழக்கறிஞர் ப்புரூஸ் பெய்ன்(Bruce Fein) கூறுகையில், ‘‘ராஜபக்சவின் அடக்குமுறை ஆட்சியின் கீழ், நீதிமன்ற அழைப்பாணையை வெளியிட ஒப்புக்கொள்ளும் இலங்கை நாளேடுகளின் துணிச்சலுக்கு தலைவணங்குவேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9648

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.