Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பரப்புரைப் போருக்குள் கனடா வீழ்ந்து விட்டதாம்: தூதுவர் சித்ராங்கனி கவலை .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Monday, 2011-10-17 09:16:54]

Chitranganee-Wagiswara_seithy150.jpg

விடுதலைப் புலிகளின் பரப்புரைக்குள் கனடா வீழ்ந்து விட்டதாக கனடாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் சித்ராங்கனி விசனம் வெளியிட்டுள்ளார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்துள்ளார் சித்ராங்கனி வாகீஸ்வரா.

கனேடிய ஊடகங்களை சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரா நேற்றையதினம் ஒட்டாவாவில் சந்தித்தபோது ஊடகங்களுக்கு அளித்துள்ள செவ்வியில், கனடாவின் இந்த அறிக்கைகள் தொடர்பாக தாம் கவலை கொள்வதாகவும், உண்மையான நிலைமைகளை கனடா அறிந்து கொள்ள வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துகள் தொடர்பாக சிறிலங்கா தூதுவர் வெளிப்படுத்தியுள்ள முதலாவது கருத்து இதுவாகும்.

போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் அண்மையில் விமர்சித்திருந்தார். போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான தீவிரமான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவர் ஐ.நாவிலும் கனேடிய நாடாளுமன்றத்திலும் கூறியிருந்தார்.

இதையடுத்து சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரா, கனேடிய வெளிவிவகார அமைச்சரை கடந்தமாதம் சந்தித்துப் பேசியிருந்தார். சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், ஐரோப்பாவில் அதன் அரசியல் பிரிவு இன்னமும் பலமாக உயர்ப்புடன் இருப்பதாகவும், அதன் பரப்புரை இயந்திரம் வலுவாக செயற்படுவதாகவும் சித்ராங்கனி வாகீஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசுக்கு எதிரான நிலையை தோற்றுவிக்க புலிகள் பரப்புரைப் போர் ஒன்றைத் தொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புலிகள் பல்வேறு வடிவங்களில் இருப்பதாகவும், கனடா புலிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ள அவர், கனடா இந்த விடயத்தில் விழிப்புடன் இருந்து நிலைமைகளை அவதானிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=50936&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.