Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவமயத்தில் சிங்கள மயம் – வலம்புரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Valampurii-148x150.jpg

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு மூல காரணமாக இருந்தவர் சேர்.பொன்.இராமநாதன். தமிழ் மக்களின் கல்வி நலன்கருதி தனது நிலத்தை வழங்கி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைவதற்கு அவர் வழிவகுத்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த சிந்தனை பலவாக இருந்தாலும் சைவசமயம் சார்ந்த பல்கலைக்கழகம் தேவை என்பதன் அடிப்படையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாக காரணமாயிற்று. எனினும் தனித்துவமாக சைவசமயம் சார்ந்த பல்கலைக்கழகம் ஒன்று உருவாகாமல் போனாலும், தமிழ் மக்களின் கல்விக் களஞ்சியமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாகியது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமகாலப் போக்கு நமக்கு அதிகம் தெரியாவிடினும் ஒரு காலத்தில் தமிழின உரிமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு காத்திரமானதென்பதை எவரும் மறுக்கமுடியாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எடுக்கின்ற முடிபுகளை ஏற்றுக்கொள்வது என்ற நிலைப்பாடு தமிழ் மக்களிடம் இருந்தது. இந் நிலைமை எங்கும் இல்லாத ஒரு தனித்துவமாகும். எனினும் சில சந்தர்ப்பங்களில் பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் தடம்புரண்டதால்-கலாசாரப் பண்பாடுகளைப் பேணத்தவறியமையால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சொல்வதை அப்படியே கேட்பதென்ற நிலைப்பாட்டில் சில தளர்வு நிலை ஏற்பட்டது.

இருந்தும் பட்டப்படிப்பு படிக்கும் எங்கள் பிள்ளைகள் எடுக்கின்ற முடிபு எங்களுக்கானது. அது சரியாக இருக்கும் என்ற நினைப்பு இன்னமும் தளர்வின்றி தொடர்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் சிங்கள மாணவர்களின் அதீதமான அனுமதி எங்கள் இறைமைக்கு-தமிழ் மக்களின் பல்கலைக்கழகம் என்ற நினைப்புக்கு குந்தகமாக அமைந்து விட்டது என்பதை கூறித்தான் ஆகவேண்டும். சிங்கள மாணவர்கள் எங்களுடன் கற்பது, அவர்கள் எங்கள் கலாசாரத்தையும் நாங்கள் அவர்களது கலாசாரத்தையும் அறிவது வரவேற்கப்படவேண்டிய விடயங்கள்.

எனினும் தமிழ்மக்கள் நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொண்ட பின் சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்வார்களாயின் அஃது ஏற்புடையதாக இருந்திருக்கும். என்ன செய்வது? சேர் பொன் இராமநாதன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ‘சிவமயம்’ ஆகப்பார்த்தார். ஆனால் இனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிங்களமயமாக காட்சி தரப்போகிறது. நடக்கட்டும். நாங்கள் அடுத்த தேர்தலில் எம்.பி. பதவி பெற ஏதும் திட்டம் போடுவோம்.

http://www.saritham.com/?p=38008

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.