Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா விவகாரம்: வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டை குடையும் அவுஸ்ரேலிய எதிர்க்கட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kevin%20rudd.jpg

[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 01:42 GMT ] [ தா.அருணாசலம் ]

சிறிலங்காவின் தூதுவராக அட்மிரல் திசார சமரசிங்கவை ஏற்றுக்கொள்ள முன்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு தெரிந்திருந்ததா என்பதை வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் வெளிப்படுத்த வேண்டும் என்று, அவுஸ்ரேலியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிசப் கோரியுள்ளார்.

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் அட்மிரல் திசார சமரசிங்க வடக்கு, கிழக்கு பகுதிகளுக்காக கடற்படைத் தளபதியாக இருந்தவர்.

ஆயுதம் தரிக்காத பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்தியதாக அவுஸ்ரேலியாவிலும், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவிலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி அவுஸ்ரேலிய காவல்துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக சட்டங்களின்படி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க அவுஸ்ரேலிய காவல்துறைக்கு பொறுப்பு உள்ளதாக அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து ‘தி ஏஜ்‘ , ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ள நிழல் வெளிவிவகார அமைச்சர் பிசப்,

“சிறிலங்கா தூதுவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவை, இவரை தூதுவராக ஏற்றுக் கொள்ள முன்னர் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிந்திருந்ததா என்பதை கெவின் ரூட் வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் இவரது நியமனம் தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் ஏதாவது விசாரணைகள் நடத்தியதா இல்லையா என்பதையும் அறியத்தர வேண்டும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒரு செனெட் விவாதத்தின் போது அட்மிரல் திசார சமரசிங்கவின் நியமனம் தொடர்பாக பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் மற்றும் அமைச்சரவைத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே அவுஸ்ரேலிய காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக கருத்துச் சொல்வது பொருத்தமற்றது என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டின் பேச்சாளர் கூறியுள்ளார்.

அதேவேளை அடுத்தவாரம் கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்கா விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த, கொமன்வெல்த் உறுப்பினர்களிடம் கெவின் ரூட் வலியுறுத்த வேண்டும் என்று அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சி கோரியுள்ளது.

அத்துடன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்காவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.puthinapp...?20111018104890

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.