Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபிரிக்கா நோக்கி விரியும் சிறிலங்கா அரசின் கரங்கள்

Featured Replies

சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் முன் வைத்த பிரேரணை ஒன்றுக்கு எந்த எதிர்ப்போ, மறுப்போ

இல்லாமல் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

ருவண்டா மற்றும் தென்சூடான் ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது பற்றிய பிரேரணையே அதுவாகும். இந்தப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அடுத்த கட்டமாக இந்த நாடுகளுக்கான தூதுவர்களை நியமித்து, தூதரகங்களையோ அல்லது தூதரகப் பணியகங்களையோ அமைக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளது.

ஆபிக்காவில் உள்ள 54 நாடுகளில் அடங்கியுள்ள ருவண்டாவும், தென்டானும் 118 நாடுகள் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. தென்சூடான் அண்மையில் தான் உருவாக்கப்பட்ட நாடு. அதன் சுதந்திரப் பிரகடன நிகழ்வுக்கு மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரனவை அரசாங்கம் அனுப்பி வைத்திருந்தது. ஐ.நா. பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வுக்கு இலங்கை அரசாங்கம் வெளிவிவகார அமைச்சரையோ அல்லது வலுவானதொரு அமைச்சரையோ அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால், நாடுகளின் பிரிவினையை, புதிய நாடுகளின் தோற்றத்தை இலங்கை கடுமையாக எதிர்த்து வருகிறது.இதனால் தான் தென்சூடானுக்கு அப்போது பேராசிரியர் திஸ்ஸ விதாரனவை அரசாங்கம் அனுப்பி வைத்தது. ஆனால், அதே தென்சூடானுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது இன்று காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

ஏனென்றால், தென்சூடான் சுதந்திரப் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்னரே, நாடு கடந்த தமிழீழ அரசு அதனுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இப்போது அந்த உறவுகள் விரிவடையும் ஆபத்து இருப்பதாக அரசாங்கம் உணர்கிறது. அதைவிட, மற்றொரு காரணம் உள்ளது. சர்வதேச அளவில் இலங்கை அரசு தனக்குச் சார்பாக கை தூக்குபவர்களை தயார்படுத்த ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமே இந்த உறவுக்கான அடிக்கல்.ஏற்கெனவே எத்தியோப்பியாவில் இருந்து 1993 இல் பிரிந்து போன எரித்ரியா இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளவேயில்லை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எரித்ரியாவை அவர்கள் தமது ஆயுதங்களைக் கடத்தும் தளமாகப் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த போது, அதனுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றது அரசாங்கம்.

எரித்திரியா தலைநகர் அஸ்மாராவில் தூதரகம் ஒன்றை அமைப்பதற்கு வசதியாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவை அந்த நாட்டுக்கான தூதுவராக நியமித்தது. ஆனால், எரித்ரிய அரசின் ஒத்துழைப்புக் கிடைக்காததால், அந்த முயற்சி தடைபட்டுப் போனது. தென்சூடான், எரித்ரியா போன்ற ஆபிக்க நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை அரசாங்கம் முடிவு செய்ததற்கான காரணங்களில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தான் முக்கியமானது.

அதைவிட இப்போது இலங்கை அரசாங்கம் ஆபிக்க நாடுகளுடன் மட்டுமின்றி தென்அமெரிக்க நாடுகளுடனும் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம் உள்நாட்டுப் போர் அல்ல உள்நாட்டில் நடந்த போரின் விளைவாக சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் இராஜதந்திரப் போரேயாகும். உள்நாட்டில் போர் நடந்து கொண்டிருந்த போது இலங்கை அரசு இரண்டு விதமான நாடுகளை மட்டும் தான் கைக்குள் வைத்திருந்தது. ஆயுதங்களையும், நிதியையும், அரசியல் ஆதரவையும் வழங்கி போருக்கு உதவிக் கொண்டிருந்த நாடுகள் முதலாவது வகை.

அவ்வப்போது குற்றம், குறை கூறினாலும் போரை எதிர்க்காமல் மதில்மேல் பூனையாக இருந்து கொண்டு மறைக ஆதரவு கொடுத்த நாடுகள் இரண்டாம் வகை. முதலாவது வகைக்குள் சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், லிபியா போன்றவற்றை அடக்கலாம். இரண்டாவது வகைக்குள் மேற்குலக நாடுகள் அடங்கியிருந்தன. போர்க்காலத்தில் இந்த இரண்டு வகைக்குள்ளேயும் தொடர்புபடாத பெரும்பாலான உலக நாடுகள் பற்றி இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. அவற்றைக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கான தேவையும் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதற்குக் காரணம், முன்னர் மதில்மேல் பூனையாக இருந்து கொண்டு மறைக முமாகப் போரை ஆதரித்த மேற்குலக நாடுகள் இப்போது அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி நிற்கின்றன. இந்த நாடுகளின் அழுத்தங்களைச் சமாளிக்க ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவினால் மட்டும் முடியாது.

இதனால் தான் உலகின் பெரும்பாலான நாடுகளுடன் உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது. சர்வதேச அரங்கில், சர்வதேச அமைப்புகளில் இலங்கைக்காக குரல் கொடுக்கின்ற நாடுகளைக் கொண்ட அணி ஒன்றை உருவாக்குவதன் மூலமே மேற்குலக அழுத்தங்களை முறியடிக்கலாம் என்பதே அரசாங்கத்தின் கருத்தாக உள்ளது. இந்த அணி தனியே ஐ.நா.வுக்கானது மட்டுமல்ல. அதற்கும் அப்பால் அணிசேரா நாடுகள் அமைப்பு, கொமன்வெல்த் அமைப்பு என்று எல்லா சர்வதேச அமைப்புகளிலும் பலமான ஆதரவுத்தளம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் கருதுகிறது. இதன் அடிப்படையில் தான் 54 நாடுகளைக் கொண்ட ஆபிக்காவின் பக்கம் அரசின் கவனம் திரும்பியுள்ளது. ஆபிக்க நாடுகள் எதற்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் இல்லை. ஆனால், பாதுகாப்புச் சபையில் ஆபிக்க நாடுகளுக்கு மூன்று ஆசனங்கள் உள்ளன.

அதைவிட 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆபிக்க நாடுகளுக்கு 13 ஆசனங்கள் உள்ளன. மேலும், 118 நாடுகள் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகள் அமைப்பில், 54 நாடுகள் ஆபிக்காவைச் சேர்ந்தவை. இதனால் தான், எரித்ரியா, ருவண்டா, தென்சூடான் என்று இலங்கையின் கவனம் ஆபிக்காவின் பக்கம் திரும்பி இருக்கின்றது. ஆபிக்க நாடுகளில் பெரும்பாலானவற்றிற்கு இலங்கை தொடர்பான எந்த அரசியல், பொருளாதார விருப்பு வெறுப்புகளும் கிடையாது. இது அரசாங்கத்துக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது.

அதுமட்டுமின்றி கடந்த மே மாதம் இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்த பாதுகாப்புக் கருத்தரங்கை பெரும்பாலான மேற்கு நாடுகள் புறக்கணிக்கும் நிலை உருவான போது, இலங்கை அரசின் மானத்தைக் காப்பாற்ற கைகொடுத்தவை இந்த ஆபிக்கநாடுகள் தான். இலங்கை அரசின் அவசர அழைப்பின் பேரில் இந்த நாடுகள் தமது அதிகாரபூர்வ பிரதிநிதிகளை அனுப்பி வைத்ததால் தான், அந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கையை அதிகத்துக் காண்பிக்க முடிந்தது.

ஆபிக்க நாடுகள் மட்டுமின்றி இப்போது இலங்கையின் கவனம் மத்திய கிழக்கு மற்றும், தென்அமெரிக்க நாடுகளின் மீதும் திரும்பியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் அனைத்துமே, தமது பக்கம் நிற்பதாக அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நெருக்கடி வலுத்த போது இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. அதனை உறுதி செய்து கொள்வதற்காக தொடர்ந்தும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் கடந்தவாரம் கூட மத்திய கிழக்கில் சுற்றிக் கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தென் அமெரிக்க நாடுகளின் பக்கம் சுற்றிக்கொண்டிருக்கிறார். தென்அமெரிக்க நாடுகளில் பல அமெரிக்காவின் செல்வாக்கை வெறுப்பவை. கியூபா, வெனிலா போன்ற நாடுகளின் ஆதரவுடன் தென்அமெரிக்க நாடுகளை கைக்குள் போட்டுக் கொள்ளும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

முன்னர் ஒரு காலத்தில் மேற்கு நாடுகளை நேச அணியாகவும், ரஷ்யா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளை விரோதமாகவும் இலங்கை பார்த்தது. இப்போது அந்தநிலை தலைகீழாக மாறியுள்ளது. இப்போது தனியே ரஷ்யா மற்றும் ஆசிய நாடுகளை மட்டும் நம்பியிருந்தால் போதாது. அதற்கும் அப்பால் பரந்துபட்ட அளவில் நாடுகளின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

ஏனென்றால், இலங்கை அரசுக்கு இப்போது பிரச்சினை தனியே ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் கொமன்வெல்த், அணிசேரா அமைப்புகளிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. இங்கெல்லாம் நெருக்கடிகள் வரும் போது அதனைத் தாங்கிக் கொள்வதற்கு ஆபிக்கா, தென்அமெரிக்கா, மத்திய கிழக்கு என்று உலகின் பரந்தளவு நாடுகளின் ஆதரவைக் கொண்டிருப்பது அவசியம். இந்த உண்மையை உணர்ந்து தான் அரசாங்கம் அதன் எல்லைகளை மாற்றிக் கொண் டிருக்கிறது. இது எந்தளவுக்குப் பயன் தரக் கூடியது என்பதை தற்போதைக்கு உறுதி செய்து கொள்ள முடியாது. ஆனால், இந்த இராஜதந்திர தொடர்பு பரவலாக்கம் அரசாங்கத்தின் காசைக் கரியாக்கப்போகிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்க நாடுகளை நோக்கிச் சீனாவின் கரங்கள் நீள்வதாலேயே, சிங்களத்தின் கரங்களும் விரிகின்றன!

சீன பணத்தைக் கொடுக்கும்!

சிங்களவனிடம் கொடுக்கக் கோவணத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.