Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியதலையீடு - அமெரிக்கா ஊக்குவிப்பு

Featured Replies

அண்மைய மாதங்களில் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்சீன கடற்பரப்பு மற்றும் அந்தமான் கடற்பரப்பு குறித்த விவகாரங்கள் உலக அரங்கின் கவனயீர்ப்பு மிக்க நிலையை எட்டியிருக்கிறன. பல்வேறு மேற்கு நாடுகளின் இராஜதந்திர வெளிவிவகார நிலைமைகள் குறித்தும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டிருக்கிறது.

அத்துடன் அப்பிராந்திய நாடுகளிலும் கடற்பரப்புகளிலும் அண்மைக்காலங்களில் இடம் பெற்று வரும் பதட்டநிலை மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தளத்திற்கு உலக அரங்கில் நிலை எடுத்துள்ளது. மேலும் இனிவரும் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மிக கொதிநிலையில் இருக்க கூடிய பிரதேசமாக தென்கிழக்காசிய பகுதி அமெரிக்க நோக்குநர்களால் கணிப்பிடப்பட்டுள்ளது.

south_east_asia_map.jpg

ஒப்பீட்டு ரீதியிலான உலக வர்த்தகத்தில் உற்பத்தி செலவுகளால் தாக்கு பிடிக்க முடியாத நிலையை அடைந்துள்ள மேலை நாடுகளுக்கு குறைந்த செலவில் அதிக உற்பத்தி எனும் தொழிலாளர் பலத்தை கொண்டுள்ள இப்பகுதி 'உலகின் பொருளாதார இயந்திர'மாக கொள்ளப்படுகிறது.

மேலைநாடுகள், ஒருசில சேவைசார் வர்த்தகங்களை தவிர ஏனைய எல்லாவற்றிக்கும் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்வான், சிங்கப்பூர், ஆகிய தென்சீன கடற்பரப்பை அண்டிய நாடுகளிலும்; பர்மா [மியான்மர்], தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, இந்தோனீசியா, புறுனை, கிழக்கு தீமோர், பப்புவா நியூகினி ஆகிய சூழவுள்ள நாடுகளிலும் பல்வேறு விடயங்களில் தங்கி உள்ளன.

அதேவேளை சீனா இந்தியா ஆகிய இரு பெரும் வல்லரசுகளும் இந்த நாடுகளிடையே தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பெற்றுக் கொள்வதற்கு போட்டியிட்டு வருகின்றன. இவ்விரு நாடுகளும் தத்தமது செல்வாக்கை பாதுகாத்து கொள்வதன்மூலம் தமது பொருளாதார இராணுவ வர்த்தகத்தை வலுப்படுத்தி கொள்ளவும் முனைகின்றன.

1991ல் பி வி நரசிம்ம ராவ்அவர்கள் இந்தியாவின் பிரதமராய் இருந்த காலப்பகுதியில் Look East Policy -LEP என்ற ஒரு கொள்கையை முன் வைத்திருந்தார். இந்தகொள்கை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிவினைவாதத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாது. வர்த்தகத்தை மையமாக கொண்டு உலகில் வளர்ந்து வரும் போட்டி நிலைமையை சாமாளிக்க கூடிய நிகழ்ச்சி நிரலாகவும் அமைந்திருந்தது.

இவ்வாண்டு தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டான 'ஆசியான்' கூட்டதொடருக்கு செல்லும் வழியில் சென்னையில் ஹிலாரி கிளின்ரன் அம்மையார் குறிப்பிட்ட விடையங்களில் “We encourage India not just to look east but also act east." என்பதிலிருந்தும், தென்சீன கடலில் சீனாவுடனான பிரச்சனையில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்த அமெரிக்க ஆய்வாளர்களின் பேச்சுகளிலிருந்தும் தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியதலையீடுகளை ஊக்குவிப்பதில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் ஆர்வமாக இருப்பதை எடுத்து காட்டுகிறது.

இந்தியாவுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையில் புவியியல் ரீதியாக பர்மாவுடன் (மியான்மர்) நில தொடர்பை கொண்டிருக்கும் அதேவேளை இந்திய ஆட்சிக்குட்பட்டுள்ள கிழக்கு வங்கக் கடற்கரையிலிருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலேயே சீன சமிக்ஞை தளமிட்டுள்ள கொக்கோ தீவுகள் உள்ளன.

இந்தியாவின் ஆட்சிக்குட்பட்டுள்ள தீவுகளான அந்தமான் நிக்கோபார் தீவுகளில், நிக்கோபார் தீவின் 163 கிலோ மீட்டர் தொலைவில் இந்தோனீசியா தீவுகளான சுனாமியால் அதிபயங்கரமாக தாக்கப்பட்ட சுமாத்திரா தீவுகள் உள்ளன. மேலும் தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகள் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலும் குறைந்த தூரத்திலேயே உள்ளன.

கலாச்சார ரீதியாக பார்க்கும் இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்காலத்திலே இருந்து புலம்பெயர் இந்தியர்கள் லட்சக்கணக்கில் தென்கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் இதனால் இந்திய கலாச்சாரமும், சினிமாவும், உணவு வகைகளும், பண்டிகைகளும் தென்கிழக்காசிய நாடுகளில் நன்கு பழக்கமானவைகளாகும்.

மேற்கு சார்பு தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டான 'ஆசியான்' நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பனிப்போர் காலங்களில் பெரியளவு நெருக்கமானதாக இருக்கவில்லை. இதற்கு இந்தியாவின் சோவியத் ரஷ்ய சார்பு போக்கே இதற்கு முக்கிய காரணமாகும்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யாவின் உடைவுடன் இந்தியாவின் போக்கு மாறத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்தே தென்கிழக்காசிய நாடுகள் பல இந்தியாவுடன் பல்வேறு பொருளாதார இராஜதந்திர பாதுகாப்பு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தலைப்பட்டன.

தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளுக்கு இடையே பல்வேறு புவியியல், சமூக, சமய, அரசியல் ரீதியான ஒருமித்த தொடர்புகள் இருக்கிறன. அதேபோல இவை ஒவ்வென்றிக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபாடுகளும் உள்ளன.

சிங்கப்பூரைப் பொறுத்த வரையில் 1965ல் மலேசியாவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து. இந்தோனேசியா, மலேசியா போன்ற பெரிய அயல்நாடுகள் சிங்கப்பூருக்கு பிராந்திய பாதுகாப்பு ரீதியாக தெல்லைகள் தரக்கூடிய நிலை இருந்தன.

இந்த நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிங்கப்பூர் தலைவர்கள் தமது கருத்தாதரவு செயற்பாடுகளின் ஊடாக இந்தியாவை தமது இரு பெரிய அயல்நாடுகளுக்கும் பதில்பலமாக பயன்படுத்தினர்.

உள்நாட்டு பிரச்சனையில் சமூகங்களுக்கிடையிலான பிளவுகளை அதீத சட்டஒழுங்கு நடவடிக்கைகளால் கட்டுபடுத்திய சிங்கப்பூர், இந்தியா சோவியத் சார்பாக இருந்தபோதிலும் தமது இறைமையை காப்பாற்றிகொள்ளும் பொருட்டு நீண்ட கால நோக்கில் இந்தியாவின் உதவியில் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நிலைப்படுத்தல் போன்ற தேவைகளை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் பெற்று கொண்டது.

தொண்ணூறுகளின் பின்னே சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமிடையே மிக நெருக்கமான பாதுகாப்பு உடன்படிக்கைகளும் படை ஒத்திகைகளும் பயிற்சிகளும் இடம் பெற்று வருகின்றன.

இதேவேளை பெரும்பான்மை சீனர்களை கொண்ட சிங்கப்பூருக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு பொதுவாக பொருளாதார நலன்களை மையமாக கொண்டதாகவே இருந்து வந்திருக்கிறது. சீனாவை சிங்கப்பூர் பொருளாதார முதலீட்டுக்கு வாய்புகள் அடங்கிய தேசமாகவே பார்க்கிறது.

இதற்கமைய சீன சிங்கப்பூர் பொருளாதார உறவு பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. சிங்கப்பூர் தேசத்தின் முக்கியத்துவம் அதன் திடமான அரசியல் வெளியுறவு அணுகுமுறைகளால் மிகவும் செம்மை படுத்தப்பட்டு நகர்த்தப்பட்டு வருகிறது.

தென் கிழக்காசிய நாடுகளிலேஅடுத்து பர்மாவை (மியான்மர்) நோக்குவோமாக இருந்தால் 1990ல் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற தேசிய சனநாயக முன்னணியிடம் ஆட்சியை கையளிக்க மறுத்த பர்மிய இராணுவ ஆட்சியாளர்கள் மியான்மர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டதுடன் தொடர்ச்சியாக பல்வேறு மனித உரிமை மீறல்களையும் செய்தவண்ணம் உலக அரங்கில் நிலை பெற்று நிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கு நாடுகளால் உலகின் 'தீய' நாடுகளில் ஒன்றாக கணிப்பிடப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டு இருந்த போதிலும் மியான்மர் தனது அமைவிடம் காரணமாக தற்போதய உலக அரசியல் மாற்றத்திற்கு ஏற்றவகையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை கண்டுள்ளது.

இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் நிலத்தொடர்பு கொண்ட அயல் நாடுகளாக கொண்டிருக்கும் மியான்மர் தென்கிழக்காசிய நாடுகளிலே மிக முக்கிய இடத்தை பிடித்து வருகின்றது.

விரைவாக வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவும் சீனாவும் மியான்மருடன் வரலாற்று ரீதியான தெடர்புகள் இருந்ததாக உரிமை பாராட்டி கொள்கின்றனர். தென் சீனாவின் பண்டைய அரசுகள் பல பத்தாண்டுகளாக மியான்மரின் ஊடாகவே தமது வர்த்தகப்பாதைகளை கொண்டிருந்ததாக சீன ஆய்வாளர்கள் கருதுகிண்றனர்.

ஒடுங்கி நீண்டு கிடக்கும் மலாக்கா நீர்ரிணைப்பகுதியிலும் இலட்சக்கணக்கான தீவுகளை கொண்ட இந்தோனேசிய தென்மேற்கு பசுபிக் கடற்பாதைகளிலும் கடற்கொள்ளையர்கள் மற்றும் உள்ளுர் தலைமைகளாலும் தொல்லைகள் அதிகரித்த போதெல்லாம் தென்சீன அரசுகள் மியான்மரின் காட்டு பாதைகளை தமது மாற்று வியாபார பாதையாக பயன்படுத்தி வந்ததாக சீன ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சீனர்கள் மியான்மரை மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாகவே காண்கின்றனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மியான்மரில் 23பில்லியன் டொலர் அதிவேக தொடருந்துப்பாதை அமைக்கப்பட உள்ளது.

இன்னமும் 18 மாதங்களில் சீனாவின் தென்பிராந்தியத்தையும் வங்கக்கடற்பகுதியையும் இணைக்கும் எரிபொருள் எண்ணை மற்றும் வாயுக்குழாய்களை பொருத்தும் பணி முடிவடைய உள்ளது.

இவை தவிர மியான்மரின் பல பெருந்தெருக்கள் சீன அரச நிறுவனங்களால் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் பாரிய நீர் வலுமின்சக்தி உருவாக்கும் பொருட்டு மியான்மரின் பிரதான ஆற்று படுக்கையான இரவட்டி ஆற்றை இடைமறித்து மின் உற்பத்தி திட்டங்கள் உருவாகி வருகிறன.

ஆக சீனா பொருளாதார ரீதியாகவும் இராசதந்திர ரீதியாகவும் மியான்மரின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆரம்பத்தில் சீன ஆட்சியாளர்கள் பர்மாவில்(மியான்மர்) நீண்டகால எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த போதிலும், தற்காலிகமாக சீனாவின் தென்மேற்கு பகுதியான யுனான் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் அன்றாட உபயோகப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை பெறும் திட்டத்துடன் மியான்மரை கையாள முற்பட்டனர்.

சீனாவின் தென் பகுதி நகரான கும்மிங் பகுதி மற்றும் அதை சூழவுள்ள சிறு நகரங்களில் வடகிழக்கு நகரங்களான பீஜிங், சங்காய் போல் அல்லாது மிக வறுமைக்குள்ளான மக்கள் அதிகம் வாழ்வதால் அந்தப்பகுதிகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு மியான்மர் மற்றும் இதர தென்கிழக்காசிய நாடுகளை தனது செல்வாக்கிற்குள் வைத்திருக்கவே சீனா விரும்பியது.

ஆனால் காலப்போக்கில் உலக அரசியல் ஓட்டத்தின் மாற்றம் காரணமாக மியான்மரின் முக்கியத்துவத்தை சீனா கொள்கை வகுப்ப்பாளர்கள் உணரத்தலைப்பட்டனர். வர்த்தக நலன்களுக்கும் மேலாக மியான்மரின் நிலையம் கேந்திர முக்கியத்துவத்தை சீனாவுக்கு உணர்த்தியது.

சீனாவுக்கு தேவையான எரிபொருள்களில் எண்பது சதவிகிதமான எரிபொருள் ஒடுங்கிய மலாக்கா நீரினை வழியாகவே தற்பொழுது செல்கிறது.

வரலாற்று காலப்பகுதியில் கடற்கொள்ளையர்களால் ஏற்பட்ட பிரைச்சனைகள் போல உலகின் சக்தி வாய்ந்த நாடுகளான இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் துணையுடன் தென்கிழக்காசியாவின் எந்த ஒருநாடும் சீனாவுக்கு எதிராக திரும்புமாயின் மலாக்கா நீரிணையோ அல்லது தென்மேற்கு பசுபிக்கரையோரமாக உள்ள நாடுகளினாலோ சீனாவின் எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்படுமாயின் ஒரு பதிலீட்டு பாதையாக பர்மாவில் உள்ள எண்னை எரிவாயு குழாய்களை பயன்படுத்த முடியும் என்பது இதன் அடிப்படையாகும்.

மியான்மருடன் 1600 கிலோ மீட்டர் நில எல்லையை கொண்டது இந்தியா. அத்துடன் வங்கக் கடலின் கிழக்காக அமைந்துள்ள மியான்மரை இந்தியாவும் வரலாற்று ரீதியான உறவாகவே பார்க்கிறது. சமூக பண்பாட்டு சமய ரீதியாக மியான்மர் இந்தியாவுடன் நெருக்கமாக உள்ளதாகவும் கணிப்பிடப்படுகிறது.

சிறிலங்காவைப் போல மியான்மரும் தேரவாத பௌத்த சமயத்தை தனது பிரதானமான சமயமாக கொண்ட ஒரு நாடாகும். தேரவாத பௌத்தம் இந்தியாவிலிருந்தே பரவியதாக இந்தியர்களால் கூறப்படுகிறது.

இரண்டாவது உலகப்போரின்போது பர்மாவின அரைப்பகுதி ஜப்பானிய படைகளால் கைப்பற்றப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது சீனர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் சித்வே (Sittwe port) துறைமுகத்தினூடாகவே வடகிழக்கு இந்தியாவுக்கான வழங்கல் பாதைகள் இருந்ததாக இந்திய வெளியுறவு அதிகாரிகள் நினைவு கூருகின்றனர்.

ஒருகாலப்பகுதியில் மியன்மாரின் தலைநகரான ரங்கூன் நகர்புறப்பகுதியில் 60 சதவிகிதமானவர்கள் இந்தியர்களாக இருந்தனர்.

எங்கும் இந்தியமயமாகவும் இந்தியப்பொருட்கள் தாராளமாக பெற்று கொள்ளகூடியதாக இருந்ததாகவும் கல்வி போக்குவரத்து உட்பட அனைத்திலும் இந்திய செல்வாக்கு இருந்ததாகவும் நினைவு கூரப்படுகிறது. அந்தகாலப்பகுதிதான் மியான்மர் இந்தியாவின் ஒருபகுதியாக பிரித்தானியாவால் பேணப்பட்டு வந்த காலமாகும்.

இருந்த போதிலும் 1937ம் ஆண்டு பர்மா (மியான்மர்) இந்தியாவிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட பின்பு பிரித்தானியர்களின் வெளியேற்றத்தின் பின்பு இந்தியர்கள் நேரடியாகவே அங்கு ஒடுக்கப்பட்டனர். இந்தியர்களின் நிலை அந்த நாட்டில் காலாகாலம் வந்த இராணுவ அரசுகளிலும் உள்ளுர் அதிகாரிகளாலும் மிக கடுமையாக ஒடுக்கப்பட்ட நிலை ஏற்பட்ட போதிலும் இந்தியா பர்மாவின் உறவை முறித்து கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

நல்நோக்கத்தை வலுவடைய செய்யும் வகையில் 1987ம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் இராஜீவ் காந்தி அவர்கள் மியான்மருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இன்றுவரை இந்தியா மியான்மர் மீது பகை பாராட்டாது நேரடி கையாழ்கை கொள்கையை கொண்டிருக்கிறது என்றால் மியான்மரின் நிலையமும் அதன் இராணுவ ஆட்சியாளர்களின் திடமான போக்கும் தான் காரணமெனலாம்.

சீனாவின் நடவடிக்கைகள் மியான்மரில் பாரிய அளவில் நன்கு ஊடுருவி விட்டது. இதனை பதிலீடு செய்வதற்கு இந்தியா மிக கவனமாக மியான்மருடன் உறவுநிலையை வைத்திருக்க வேண்டி உள்ளது.

இருபதாண்டுகளுக்கு மேலாக வீட்டு காவலில் இருந்த சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற சமாதான முன்னணியின் மியான்மரின் மக்கள் ஆதரவு பெற்ற தலைவியுமான ஒன் சான் சுகி அவர்களை கையாழ்வது கூட நடுநிலையை விட்டு அகலாத நிலையில் இராணுவ ஆட்சியாளர்களையும் ஒன் சான் சுகி அவர்களையும் கையாழவேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

ஓன் சான் சுகி அவர்கள் இந்தியாவில் கல்வி கற்றவராவர். இந்திய ஆட்சியில் இருந்தவர்களும் கல்வி மான்களும் ஒன் சான் சுகியின் ஆதரவாளர்களாக இருந்தனர். 1992 ம் ஆண்டு ஒன் சான் சுகி அவர்களுக்கு அனைத்துலக புரிதலுக்கான ஜவகர்லால் நேரு நினைவுப் பரிசை இந்திய அரசு வழங்கி இருந்தது.

ஆனால் இதுவே சீன அரசு மியான்மருக்குள் அதிகமாக ஊடுருவுவதற்கு வழி வகுத்து கொடுத்து விட்டது. இது போல மேலும் தவறுகள் ஏற்படாத வகையில் தற்பொழுது இந்திய வெளியுறவு அதிகாரிகள் கவனமாக செயற்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.

ஓன் சான் சுகி மட்டுமல்லாது மியான்மரின் ஆதரவுடன் இந்தியாவின் நலன்களை கருத்தில் கொள்ள வேண்டிய இன்னுமோர் விடயம் முன்பு ஜப்பானியர்களின் படையெடுப்பின்போது பேருதவியாக இருந்த சித்வே துறைமுக பயன்பாடு ஆகும்.

Sittwe.jpg

சித்வே துறைமுகம்

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியமான மிசோராம் நாகாலாந்து போன்ற பகுதிகளை இலகுவாக எட்டுவதற்கு வங்கக்கடலூடாக மிக இலகுவானதாகும் ஆனால் இதனை சிட்டகொங் துறைமுகத்தின் ஊடாக எட்டுவது வங்கதேசத்துடன் ஆன முரன்பாடு காரணமாக கடினமாக தென்படுவதால் மியான்மரின் தயவு மிக இன்றியமையாததாகி உள்ளது.

மிசோராம் பகுதி புவியியல் ரீதியாக துண்டிக்கப்பட்டு கிடப்பதால் பதில் வழங்கல் பாதையாக சித்வே துறைமுக பாதை அத்தியாவசியமாக தேவையானதாக உள்ளது.

இதனால் மியான்மர் மீது பொருளாதார தடையை விதிக்கும் படி அனைத்துலக நாடுகள் கேட்டு கொண்ட போதிலும் 103 மில்லியன் டாலர் பெறுமதி கொண்ட சித்வே துறைமுக கட்டுமான ஒப்பந்தத்தை இந்தியா 2007 அக்ரோபரில் மியான்மருடன் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

இது மட்டுமல்லாது சீனாவின் பல்வேறு கட்டுமான திட்டங்களுடான ஊடுருவலுக்கு போட்டியாக இந்தியாவும் மியான்மரில் எண்ணை எரிவாயு குழாய்கள் அமைப்பது மட்டு மல்லாது பெரும் தெருக்கள் உட்பட பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

இந்தியா சீனா ஆகியன மியான்மர் இரணுவ ஆட்சியாளர்களின் செல்வாக்கை பெற்று கொள்வதற்கு போட்டி போடும் அதேவேளை அமெரிக்க இராசாங்கத் தினைக்களமும் மியான்மர் மீதான தனது பிடியினை சற்று தளர்த்தி உள்ளது என்பது முக்கியமானதாகும்.

கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களின் கொடுமையாலும், சனநாயக விதி முறைகேட்டிற்காகவும், அணுஆய்வு நடவடிக்கைகளின் செயற்பாட்டிற்காகவும் உலகின் 'தீய' நாடுகள் என கியூபா, சிம்பாவே, வடகொறியா, என்ற வரிசையில் மியான்மரையும் வரிசையிட்டு வந்த அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் அண்மையில் நேரடியாக மியான்மருடன் பேச்சுகள் நடாத்த தீர்மானித்துள்ளதாக கூறுகின்றது.

அத்துடன் மியான்மர் அரசு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக இருந்தால் நீண்ட காலமாக போடப்பட்டு இருக்கும் பொருளாதார தடைகளை கூட இளக்கி விடுவதற்கு தயாராக இருப்பதாக அதிபர் ஒபாமா நிர்வாகம் தயாராக இருப்பதாக குறிப்பிடபட்டுள்ளது.

அமெரிக்க சார்பு தென்கிழக்காசிய நாடுகளின் வலுமையான கட்டமைப்பின் அவசியத்தை அமெரிக்கா உணர்ந்துள்ளது. சீனாவின் பாரிய வளர்ச்சி அமெரிக்காவை ஒரம் கட்டி விடவல்ல நிலைக்கு வளர்வதை ஏற்று கொள்ள முடியாததாகும். தனது வலிமையை நேச சக்திகளிந் ஊடாகவே பெற்று கொள்ளவேண்டிய நிலையில் தற்போது அமெரிக்கா உள்ளது.

நேசசக்திகளை ஆயுதவலுவின் மூலம் உருவாக்கி கொள்ளும் நிலை பொருளாதார நலன்களை மையமாக கொண்ட செல்வாக்கு யுத்தத்தில் செல்லுபடியற்றதாக ஆகி விட்டது.

இந்நிலையில் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட மியான்மர் போன்ற 'தீய' நாடுகளுடன் பேச்சுகள் மூலமே கையாள வேண்டிய நிலையில் இருப்பது கவனிக்கதக்கதாகும்.

அமெரிக்காவின் இந்தப்போக்கு மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்களுக்கு தென்பை கொடுத்திருப்பதோடு சில நூறு கைதிகளையும் விடுதலை செய்வதற்கு காரணமாய் அமைந்துள்ளது. ஆனால் பிரதானமான பல அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளிலேயே இருப்பதாக மியான்மர் மனிதஉரிமை கண்காணிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இங்கே மியான்மரின் இராணுவ ஆட்சி அகற்றப்படவில்லை, பல்வேறு சிறுபான்மை சமூகத்தினர் மியான்மரில் தமது விடுதலைக்காக போராடி வருகின்றனர் அவர்களின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சனநாயகம் சுதந்திரம் என்பவற்றிற்கு பாரிய விமோசனம் தற்போதைக்கு கிடைக்கப் போவதில்லை, சனநாயக வாதிகளும் போராளிகளும் இன்னமும் சிறை கூடங்களில் சித்திரவதைகளுக்கு உள்ளாகிய வண்ணமே உள்ளனர்.

ஆனால் வல்லரசுகளின் கையாழ்கைகள் மாத்திரம் அவரவர் நலன்களுக்கு ஏற்றவாறு நகர்ந்த வண்ணமுள்ளது.

வங்கக்கடலின் கிழக்கு கரையோரமான மியான்மரின் நிலை இவ்வாறிருக்க தென்சீன கடல்களின் நிலை குறித்து அடுத்த பாகத்தில் பார்க்கலாம்

வங்கக்கடலின் கிழக்கு கரையோரமான மியான்மரின் நிலை இவ்வாறிருக்க தென்சீன கடல்களின் நிலை குறித்து அடுத்த பாகத்தில் பார்க்கலாம்

ஆவலுடன்.

எங்கே, இங்கேயா இணைக்கப்படும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை ஊக்கிவிப்பது என்பது இலகுவான வேலை இல்லை. அவர்களிடம் இன்னும் ஒரு ஒழுங்கான நவீன கப்பல்களை கையாளும் துறை முகம் இல்லை. ஆனால் இந்தியாவை சுத்தியிருக்கும் குட்டி நாடுகள் எல்லாம் ஒன்றை வைத்திருக்கின்றன.

கொச்சினில் ஒன்று வந்தால் போதும். அதை விட பெரிய ஆப்பு ஸ்ரீ லங்காவிற்கு வராது.

நல்லதொரு அலசல். ஒரு பச்சையால் கொட்டி விடுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.