Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் செயற்பாடுகளை முடக்க மேலும் 5 புலனாய்வு பிரிவுகள் உருவாக்கம்: கோட்டாபய

Featured Replies

புலிகளின் செயற்பாடுகளை முடக்க மேலும் 5 புலனாய்வு பிரிவுகள் உருவாக்கம்: கோட்டாபய

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்குள்ளேயும் வெளிநாடுகளிலும் புலிகள் இயக்கத்துக்குச் சார்ப்பானவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.

இவர்களின் செயற்பாடுகளை முடக்கி, நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதம் தோற்றுவிக்கப்படாமல் தடுப்பதற்காக இராணுவத்துக்குள் புதிதாக ஐந்து புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

யுத்தத்தின் போது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர்களினூடாக அவ்வியக்கத்தை மேலும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்ட சமாதானம் சீர்குலைக்கப்படாமல் பாதுகாத்து புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளை முடக்கும் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

40.6 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட படைத் தலைமையகம், இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கிளிநொச்சி படைத்தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.பீ.மார்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/29751-----5-----.html

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் புதிய இராணுவ தலைமையகம்

இலங்கை இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை, அதிலிருந்து தப்பியோடியிருப்பவர்கள் மீண்டும் உருவாக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இராணுவத்தின் பொறுப்பாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ கிளிநொச்சியில் தெரிவித்திருக்கின்றார்.

வட இலங்கையில் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராகத் திகழ்ந்த கிளிநொச்சியில், இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ தலைமையகத் தொகுதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ வைபவரீதியாகத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியிருக்கின்றார்.

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் 40 மில்லியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், இராணுவத்தினரின் பெரும் தியாகத்தின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அடைந்துள்ள வெற்றியைப் பேணி பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு அமைதியும் சமாதானமும் நிறைந்த நாடொன்றைக் கையளிக்க வேண்டியிருக்கின்றது. எனவே, அதற்கு ஏற்ற வகையில் மீண்டும் விடுதலைப்புலிகள் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபாயா தெரிவித்திருக்கின்றார்.

யுத்த காலத்தில் ஒரு படையணியாகத் திகழ்ந்த இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு இப்போது ஆறு அணிகளாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமாதானச் சூழ்நிலையில் இராணுவத்தினர் என்னென்ன கடமைகளில் ஈடுபட வேண்டுமோ அத்தகைய கடமைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். அதற்கான தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க வகையில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த வைபவத்தில் இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் முக்கிய இராணுவ உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

http://www.bbc.co.uk...aryoffice.shtml

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.