Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்காலத்தில் உயிர் இழப்புக்களையும், அவலங்களையும் தவிர்க்க சிந்திக்க வேண்டும்

Featured Replies

வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு, பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், தமிழ் கலாசாரங்களை சீரழிக்கும் நடவடிக்கைகள், தமிழின விகிதாசாரத்தை பாதிக்கும் நிகழ்வுகள்

மற்றும் இன சுத்திகரிப்புகள் இடம்பெறுமாயின் மீள் இணக்கமோ, இனங்கள் இணைந்து வாழவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

சபையில் இருக்கின்றவர்களில் பலர் நியாயமானவர்கள். அரசினால் முன்னெடுக்கப் படும் பல விடயங்களை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். மேற்படி விவகாரம் தொடர்பில் பல தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் குற்றஞ்சாட்டவில்லை. அதற்காக அவரை குற்றஞ்சாட்டவும் முடியாது என்றும் கூறவில்லை.

அரசாங்கத்தின் விடயங்களை ஒருவர் ஒரு நாளைக்கு சாதிப்பார் அப்போது மஹிந்த ராஜபக்ஷ வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பார். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார். வடக்கு கிழக்கில் காணி சுவீகரிப்பு மற்றும் பெரும்பான்மையின மக்களை பலவந்தமாக குடியேற்றுதல் உள்ளிட்ட விடயங்களை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக சமர்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சம்பந்தன் எம்.பி. பிரேரிக்கப்பட்டுள்ள ஒத்திவைப்புப் பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக தமிழ் மக்களைக் கொண்டுள்ள நாட்டின் வட கிழக்கு பகுதியில் அப்பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் எதிர்கால நல்வாழ்வை மீள்சீரமைக்க முடியாத அளவுக்கு பாதிக்கின்றதும் அப்பிரதேசத்தின் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அப்பிரதேசத்தின் குடிநிலைப் புள்ளியியல் ஆக்கக்கூறுகளை மாற்றுகின்றதும் அப் பிரதேசங்களின் கலாசார மற்றும் மொழி ரீதியிலான அடையாளத்தில் மிக மோசமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றதுமான இராணுவச் செயற்பாடுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சமய,கலாசார செயற்பாடுகள் மற்றும் நிர்வாக, அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களும் செயற்பாடுகளும் தொடர்பான பல விடயங்களை 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்ததில் இருந்து பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியுடனும் இலங்கை அரசாங்கத்துடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி எழுப்பியுள்ளதாலும் அத்துடன்,

01.அரச காணி மற்றும் தனியார் காணி தொடர்பாக

02.அரசாங்கத்தின் வெளிப்படையான அல்லது மறைகமான அங்கீகாரத்துடன் ஆயுதப் படையினராலும் பெரும்பான்மைச் சமூகத்தினராலும் பலவந்தமாகவும் அதிகாரம் இன்றியும் காணிகள் கைப்பற்றப்படுதல்.

03. கடந்த காலத்தில் தம் வசம் வைத்திருந்த மற்றும் பயன்படுத்தியவையும் அவ்வாறு தம் வசம் வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் சட்ட ரீதியான உரித்தைக் கொண்டதுமான காணிகளை வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்தல்.

04. இராணுவ நோக்கங்களுக்காகவும் அபிவிருத்தி என்னும் பெயரில் பெரும்பான்மை சமுதாய உறுப்பினர்களுக்கு மாத்திரம் காணிகளைத் தன்னிச்சையாக ஒதுக்குவதுடன் இந்தப் பிரதேசத்தில் உள்ள ஆயிரக் கணக்கான தமிழ் குடும்பங்கள் காணியற்றவர்களாக இருக்கின்ற அதேவேளை, அத்தகைய ஒதுக்கீடுகளின் பலன்களை தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் செய்தல்.

05.பெரும்பான்மைச் சமய மற்றும் கலாசார நோக்கங்களுக்காக காணிகளை எடுத்துக் கொள்ளுதல்.

06. தமிழ் மக்களால் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட சமய கலாசார தளங்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் மறுப்புக்கு உள்ளாக்கப்படுதல்.

07. அவர்களால் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் சமயத் தளங்களை அழித்தல்.

08. தமிழ் மக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில், தற்போதுள்ள நிர்வாக எல்லை களில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிர்வாக எல்லைகளில் அரசியல் ரீதியாக உந்தப்பட்ட மாற்றங்கள்.

09. நிர்வாகத்தை இராணுவ மயமாக்கு தலும் அதன் விளைவாக சிவில் நிர்வாகத்தின் பயனுறுதியின்மையும்

10. தமிழ் மக்கள் தமக்குரிய அரசியல் அங்கீகாரத்தையும் ஏதேனும் வடிவிலான ஆட்சியை அடைந்து கொள்வதிலும் இருந்து தடை செய்து அவர்களின் ஜனநாயகத் தீர்ப்பை மதிக்காமலும் விடுதல்.

11. தனிப்பட்ட காணி உடைமைக்கான அடிப்படை உரிமை மீது கடுமையாக இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட காணி உடைமைகளை பதிவு செய்வது தொடர்பான புதிய நடைறைகளை அறிகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகிய செயற்பாடுகள் காணப்படுவதாலும், அத்தகைய வேண்டுதல்களுக்கு எவ்வகையிலும் இலங்கை அரசாங்கம் பதில் செயற்பாடு காட்டாதிருப்பதுடன் அத்தகைய சட்ட ரீதியான வேண்டுதல்களுக்கு வெறுமனே அக்கறை இன்றியும் அலட்சிய மாகவும் இருக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டி

அத்தகைய தீங்கான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றது.ஆனால் அரசாங்கம் குறித்த சில அரசியல் குறிக்கோள்களுடன் திட்டவட்டமான கொள்கை ஒன்றை நடைறைப்படுத்துவதுடன் அதன் குறிக்கோள்களை அடையும் வரை தொடர்ச்சியாக அதன் கொள்கைகளை நடைறைப்படுத்துவதினின்றும் அதன் போக்கை மாற்றாது என்பதாலும், அத்துடன் அரசாங்கத்தின் இந்தக் கொள்கை தெளிவாக இராணுவ வெற்றியை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் அதன் விளைவாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தளவுக்கு முரணானதாகவும் அநீதியானவையாகவும் இருப்பினும் அத்தகைய செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் தமிழ் மக்கள் கீழடங்கியே ஆக வேண்டும் என்னும் கருத்தை அது கொண்டுள்ளதுடன் தமிழ் மக்களின் அத்தகைய மனக் குறைகள் சட்ட ரீதியானவையாகவும் கவனம் செலுத்த வேண்டியனவாகவும் இருப்பினும் தமிழ் மக்களின் மனக் குறைகளை அரசாங்கம் நிவர்த்திக்காது என்பதாலும், அத்தகைய கொள்கைகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் தொடர்ந்தும் நடை முறைப்படுத்துவதன் விளைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் குடிநிலை ஆக்க அமைவு மற்றும் மொழி, கலாசார தனித்துவம் அரசாங்கத்தினால் வேண்டப்படுகின்றவாறு தவிர்க்க முடியாத விதத்தில் மாற்றமடைந்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் செல்வாக்கு படிப்படியாகக் குன்றி காலப் போக்கில் அதிகரித்த ரீதியில் பொருத்த மற்றதாக ஆகும் நிலை உள்ளதாலும், பல்லின மக்களிடையே நிரந்தரமான சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்தக் கூடியவாறு அவர்களிடையே மீள் இணக்கப்பாடு மற்றும் நல்லெண்ணத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் கொள்கை ஒன்றைப் பின்பற்றுவதாக அரசாங்கம் கூறுகின்ற அதேவேளை,

உண்மையில் நடைபெறுவது அதற்கு மாற்றமாகவே காணப்படுவதுடன் தமிழ் மக்கள் வேறு எவரையும் போன்று மிகவும் தொன்மையான காலத்திலிருந்து தாம் வாழும் தமது சொந்த நாட்டில் தாழ்வான பிரஜைகளாக நடத்தப்படுவதன் மூலம் மேலும் கசப்பூட்டப்பட்டு அந்நியப் படுத்தப்படுவதாலும், வன்முறை மீண்டும் எழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு தம்மாலான மிகச் சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் உறுதி பூண்டுள்ளதாலும், ஆதலால் மீள் நல்லிணக்கத்துக்கு அல்லது நிரந்தரமான சமாதானத்திற்கும் சக வாழ்விற்கு உகந்தது.

அல்லாத வடக்கு கிழக்கில் நிலவும் யதார்த்தமான நிலைமையை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருதல் அவசியம் எனக் கருதுகின்ற அதேவேளை, வன்முறை மீண்டும் தோன்றினால் மிகவும் பாதிக்கப்படுபவர்களாகத் தாம் இருப்போம் என்னும் உண்மையான அச்சம் தமிழ் மக்களிடையே இருப்பதாலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமக்கு என்ன நேரிடுகின்றது என்பது தொடர்பாக பாராளுமன்றம் எதுவும் அறியாது இருப்பதாக தமிழ் மக்கள் கருதுவதாலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எதிர்காலத்தில் அவலங்களையும் உயிர் இழப்புக்களையும் தவிர்க்கக் கூடியவாறு யதார்த்த நிலைமை அறியப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்கள் கருதுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரண்பாடுகளை எமக்குப் பின்னால் போட்டுவிட்டு வேறுபக்கம் திரும்பிப்பார்க்கின்றோம். அதன் பின்னணியிலேயே நான் இந்த பிரேரணையை முன் வைக்கின்றேன். இதனூடாக முரண்படுவதற்கு எந்த நோக்கம் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர்களிடம் கலந்துரையாடினேன். அரசாங்கம், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினேன். பாராளுமன்றத்திலும் உரையாற்றினேன். ஆலோசனையும் நடத்தினேன்.

இது நல்லதல்ல.

அரசாங்கத்திற்கும் கடிதங்களை எழுதியிருக்கின்றேன். ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையினால் அந்தக் கடிதங்களை ஊடகங்களுக்கு கூட அனுப்பவில்லை என்றாலும் நிலைமை அதே வழியில்தான் தொடர்கின்றன.

அதேவழியில் தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. பிரச்சினைக்கு பரிகார நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி, சமாதானம் கொண்டு வரப்பட வேண்டும். நில அபகரிப்பு உள்ளிட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது மாற்றப்பட வேண்டும்.

தமிழ் மணம் கமழும் பிரதேசங்களில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தோரை பெரும்பான்மையாக்குவதற்கும் சிறு பான்மை இனத்தினரை சிறுபான்மையாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது நல்லதல்ல.

பண்டா செல்வா ஒப்பந்தம் கலாசார, மொழி வடக்கு கிழக்கு அடையாளத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலையை கொண்டிருந்தது. அவ்வொப்பந்தம் அமுல் படுத்தப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. சில விடயங்களை அங்கீகரிக்க வேண்டும். அதேபோல சில விடயங்களை உறுதிப்படுத்தவும் வேண்டும்.

தமிழர்கள் விசேட அடையாளத்துவம் நாகரீகம் கொண்ட மக்கள் ஏனையோரை விடவும் இந்த நாட்டில் கூடுதலான காலம் வாழ்ந்தவர்கள். அவ்வாறனவர்களின் அடையாளத்தை அமிழ்த்தும் நோக்கம் இருக்குமாயின் அதனை நாம் பாதுகாக்க வேண்டும். அமிழ்த்தும் நடவடிக்கைகளை நீங்கள் கைவிடவேண்டும்.

புத்தர் பிறந்த நாட்டில் வசிப்பதாக பெருமை கொள்கின்றீர்கள். புத்தர் பகவானை விடவும் மேன்மையான ஒருவரை நானும் காணவில்லை. எனினும் புத்த சமயம் மற்றும் கொள்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளே இங்கு முன்னெடுக்கப்படுகின்றன.

காணிகள் சுவீகரிக்கப்படுவது வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை பாதிக்கின்றது. தமிழ் மக்கள் குழம்பியிருக்கின்றனர்.அரைவாசிக்கு மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.

யுத்தத்தினால் சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஆவணங்கள், சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும் காணிகளை உறுதிப்படுத்துமாறு இரண்டு மாத காலத்திற்குள் அழைப்பது நியாயமானதல்ல. நிலவுரிமை சொத்து மனிதனின் அடிப்படை உரிமையாகும். கண்டிய சட்டம், தேசவழமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறான சட்டங்கள் இருக்கின்றன.

நிலக்காணி உரிமைகள் தொடர்பில் பிரிவுகள் இருக்கின்றன. காணி பதிவாளர்களும் இருக்கின்றனர். ஆவணங்களை தொலைத்து விட்டவர்களுக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுவது எங்களுக்கு விளங்குகிறது. எனினும் காணிகளை பதியுமாறு சகலரையும் கட்டாயப்படுத்துவது எவ்வாறு? இதன் மூலமாக மக்களின் சீற்றங்கள் வெளியாகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்புக்களை தெரிவிக்கின்றன.

காணிகளை பதிவு செய்யுமாறு அமைச்சர்கள், இராணுவம் படிவங்களை விநியோகிக்கின்றன. நிலவுரிமை தொடர்பில் இராணுவம் என்ன செய்யப் போகின்றது. இவை நிறுத்தப்பட வேண்டும். தொடரக் கூடாது.

அரசாங்கம் கலந்தாலோசித்து தெளிவாக ஆராய வேண்டும். படிவங்கள் விநியோகிப்பது தீங்கையும் கொண்டு வருகின்றது.

அதிகாரம் இல்லை காணி உறுதிப்பத்திரங்கள் தொலைந்தால் அவற்றை வழங்குவதற்கு காணி திணைக்களங்கள் இருக்கின்றன. எனினும் காணிகளை பதியுமாறு சுற்று நிரூபங்களின் மூலமாக கோருவது எந்த சட்டத்திலும் இல்லை. அதற்கான அதிகாரம் இல்லை. இது நிலைமையை இன்னும் சீரழிக்கும்.

சம்பூரில் 2975 ஏக்கர் காணி இருக்கின்றது உரிய காணிகளில் பரம்பரையாக வாழ்ந்தவர்கள், கிளைகளாக வாழ்ந்தவர்களை எப்படி வெளியேற்றுவது. யுத்தம் முடிந்து விட்டது. புலிகள் இல்லை, மக்கள் சொந்த காணிகளுக்கு திரும்பி போக விரும்புகின்றனர். எனினும் அரசாங்கம் அவர்களின் காணிகளை சுவீகரிக்கிறது.

புலிகளை உருவாக்கியவர்கள் நீங்களே?

உங்களினால் தான் புலிகள் உருவானார்கள்.

செல்வா அமிர்தலிங்கம் கூறியதை நிறை வேற்றியிருந்தால் புலிகள் உருவாகியிருக்க மாட்டார்கள். பிறந்திருக்கவும் மாட்டார்கள்.

சம்பூர் மீட்கப்பட்டதன் பின்னர் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பீரங்கிகள் இல்லை, புலிகள் இல்லை. சுடு கலன்கள் இல்லை என்றாலே மக்கள் சொந்த காணிகளில் ஏன் மீள்குடியேற்ற முடியாது. சர்வதேச நியமங்களின் பிரகாரம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவர் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்த முடியாவிடின் மீள் இணக்கப் பாட்டை எவ்வாறு கொண்டு வர முடியும்?

உயர் நீதிமன்றத்தின் உத்தரவாதம் இருக்கையில் ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் ஒரு ஏக்கர் வதிவிட காணியும் வழங்கப்படுகின்றது. இதனை இன சுத்திகரிப்பு என்றே கூறுகின்றேன்.

முதன் முறையாக கூறுகின்றேன் ““இன சுத்திகப்பு'' என்ற வசனத்தை பாராளுமன்றத்தில் முதன் முறையாக கூறுகின்றேன். அவ்வாறான நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

இந்தியா மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் இந்திய பிரதமர் இலங்கைக்கான தூதுவர் இந்திய வெளிவிவகார செயலாளர்களுடன் கலந்துரையாடினேன். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்கு உதவுவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது. மக்களை வெளியில் துரத்துவதற்கு இந்தியா விரும்பவில்லை என்பதனால் இந்த விடயங்களில் மீள் சிந்தனையை செலுத்த வேண்டும்.

வறிய மக்கள் துன்புறுவதை பார்க்க வேண்டும் இடங்களை தெரிவு செய்யாவிடின் உணவு முத்திரையை நிறுத்துவதாக சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து இருக்கும் மக்களிடம் கூறப்படுகின்றது. இது கொடூரமான சித்திரவதை, மனித பிறவிகளை இவ்வாறு நடத்த முடியுமா?

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களை அவர்களின் சொந்த இடங்களிலிருந்து தூக்கியெறியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இது மனித பிரச்சினை, மனிதனுடன் தொடர்புடைய பிரச்சினை என்ன? செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயற்பட வேண்டும். நான் முரண்பட்டுக் கொள்ளவில்லை. நல்லிணக்கம் ஏற்பட வேண்டும், காணி சுவீகப்பு, இனச் சுத்திகரிப்பு கைவிடப்பட வேண்டும். அதன் ஊடாகவே மீள் இணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மற்றும் இன சுத்திகரிப்புகள் இடம்பெறுமாயின்மற்றும் இன சுத்திகரிப்புகள் இடம்பெறுமாயின்...."

அப்ப கடைசி எழுபது வருடமா என்ன நடக்குது?

இவர் கொஞ்சம் லேட்டா சபைக்கு வந்திருக்கிறார் போலும்.

  • தொடங்கியவர்

கொஞ்சம்...காரசாரமாத்தான் கதைச்சிருக்கார்..பாப்பம்...அமெரிக்காவில் முக்கியமான சிலரை சந்திக்கவுள்ளாராம்...பாப்பம் என்ன நடக்கும் எண்டு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.