Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்கா கவலை

Featured Replies

இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்கா கவலை

இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், சிறிலங்கா அரசாங்கத்துடன் சீனா கொண்டுள்ள படைத்துறை ரீதியான உறவுகள் குறித்தும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இலங்ழைகக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜக் கிங்ஸ்ரன் தனது விஜயத்தின் முடிவில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையுடன் முன்னர் அமெரிக்கா மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் அடையிலான படைத்துறை மற்றும் வர்த்தக உறவுகள் நெருக்கமடைந்ததால் இந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை அதிகம் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையுடனான அரசியல், படைத்துறை மற்றும் வர்த்தக ரீதியிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதன் ஊடாகவே இலங்கையில் சீனாவின் தலையீட்டைக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புவியியல் ரீதியாக இலங்கையில் அமைவிடம் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இலங்கை மீதான கவனத்தை அமெரிக்கா இழக்கவில்லை என்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜக் கிங்ஸ்ரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான நம்பத்தகுந்த விசாரணைகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில், 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி வரை மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.pongutham...1b-f4d57392c8a3

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.