Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பிரதாயங்களுக்கு வெளியால் ஒரு தீபாவளி

Featured Replies

சம்பிரதாயங்களுக்கு வெளியால் ஒரு தீபாவளி

மற்றவனைக் கொன்று விளக்கேற்றும் மடமைத் தீபாவளியை அகற்றி யாரையுமே கொல்வதில்லை என்ற புதுமைத் தீபாவளியை இன்று பிரகடனப்படுத்துவோம்...

இன்று ஈழத் தமிழனுக்கு ஒரு புதுமைத் தீபாவளி..! நாமெல்லாம் புது மனங்களுடன் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்..

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபட்டு அட.. நமக்கும் தீபாவளி இருக்கிறதா என்று சிந்திககிறார்கள்…

தீபாவளியை நாம் கொண்டாடலாமா இல்லை அமைதியாக இருக்கலாமா என்ற எண்ணங்கள் பலரிடையே இன்றும் இருக்கிறது.

புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளில் வரும் தொலைக்காட்சிகளும், இணையங்களும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தி அட.. தீபாவளி நடக்கிறது என்று பிரச்சாரம் செய்து வருகின்றன.. கோயில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.. கொடியவருக்கும் நல்லவருக்கும் போர் நடந்து நல்லவர் வென்றதால் தீபங்கள் ஏற்றப்படுகின்றன என்று காலைத் தொலைக்காட்சிகள் அலறுகின்றன.

இலங்கையில் நடந்த போரில் நல்லவர்கள் வெல்லவில்லை என்பதற்கு சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் நிகழ்ச்சியே சான்றாக உள்ளது. தீபாவளிக்காக பேசும் நடிகைகளுக்கு சனல் 4 என்றால் செக்கோ சிவலிங்கமோ என்று தெரியாது.

இலங்கைத் தமிழ் மக்கள் தீபாவளிக்காக தீபங்களை ஏற்றும்போது இறந்துபோன நல்லவர்களுக்காகவே தீபங்களை ஏற்றுகிறார்கள். உயிருடனிருக்கும் அரக்கர்களுக்காக அல்ல என்பது தெரிகிறது.

புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் போர் முடிந்தாவது தாயகம் போகலாம் என்று கனவு கண்டார்கள். அவர்கள் வரக்கூடாது என்பதற்கான வியூகங்களை இந்தியாவும், சிறீலங்காவும் கச்சிதமாக திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளன.

புலம் பெயர் தமிழன் உழைத்த பணத்துடன் வந்து ஈழ மண்ணை உருப்படுத்த முன் இந்திய வியாபாரிகளுக்கு இடம் கொடுத்து, இடைவெளிகளை அடைத்து இந்தியாவை திருப்திப்படுத்தியுள்ளது சிங்கள அரசு.

முன்னர் மலைநாட்டு தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தால் தேயிலைத் தோட்டங்களை எழுதித் தருகிறோமென்று பிரிட்டனுடன் சிங்கள தலைவர்கள் போட்ட இரகசிய ஒப்பந்தம் போல இது அமைந்துள்ளது.

அதுபோல புலம் பெயர் தமிழர்கள் இந்தியாவிலும் கால்பதிக்க அனுமதிக்கக் கூடாது, அவர்களை தொலைந்து போன இனமாக்க வேண்டுமென்ற வியூகமும் பாதர் இமானுவல் நாடுகடத்தலால் ஊர்ஜிதமாகியுள்ளது. அவருக்கு முன் பலர் நாடு கடத்தப்பட்டதைப்பற்றி அவருக்குத் தெரிந்தும் அதற்காக குரல் கொடுக்காது தான் ஒரு பாதர் என்று நினைத்து நடந்ததால் வந்தவினை இது.. இத்தகைய நாடு கடத்தல்களுக்கு எதிரான பொதுப் பிரகடனத்தை இனியாவது வகுக்க வேண்டும்.

இது மட்டுமா.. மேலும் ஒரு படி முன்னேறி காணிகளை பதிவு செய்யும் திட்டத்தை கொண்டுவந்து புலம் பெயர் தமிழனின் உரிமை நிலங்களை சூறையாடி அவனை நிலமற்றவனாக்கும் வியூகங்கள் அரங்கேறியுள்ளன.

ஆக.. புலம் பெயர் தமிழனுக்கு எதிராக மறைமுகமான போர் ஒன்றை சிறீலங்காவும், இந்திய நடுவண் அரசும் பிரகடனப்படுத்தியிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

இந்தப் போரே புலம் பெயர் தமிழன் பெற்ற வெற்றி..!

இந்த நிலையில் கூட்டமைப்பு அமெரிக்கா போயுள்ளது பேச்சுக்களை நடாத்த..

இந்தத் தீபாவளியில் நமக்கு மகிழக்கூடிய இன்னொரு நிகழ்வு அது.

கூட்டமைப்பு தலைவர்களிடையே குழப்பகர அரசியல், பரந்த அறிவின்மை, தமது இனத்திற்கு எது வேண்டும் என்பதில் இன்றுவரை தெளிவின்மை ஆகிய குறைபாடுகள் இருந்தாலும் அவர்களை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டியதே தற்போதைக்கு சிறந்த வழி.

அதுமட்டுமல்ல..

முதலில் சிங்கள இராணுவம் வடக்குக் கிழக்கில் இருந்து வெளியேற வேண்டும்..

இந்திய நடுவண் அரசு இனியாவது ஈழத் தமிழருக்கு எதிரான போக்கை மாற்ற வேண்டும்.

சிங்கள நிர்வாகம் இல்லாத ஓர் ஆட்சி வடக்குக் கிழக்கில் வேண்டும்.

பிரிந்த உறவுகள் சிங்கள ஆமி இல்லாத தூய தமிழ் மண்ணில் ஒன்றுகூட வேண்டும்.

;இறந்த தமிழ் மக்கள், வீரர்கள் அனைவரும் புது மரியாதை பெறவேண்டும்.

தமிழன் சுயமரியாதை உறுதி செய்யப்பட வேண்டும்.

அப்படியொரு நாள் மலர வேண்டும்..

அதற்கு தடையாக உள்ள தீய சக்திகள் அழியக்கூடாது பாவம் அவர்கள் திருந்த வேண்டும்.

இன்னொருவரின் அழிவிலும், வீழ்ச்சியிலும் ஈழத் தமிழன் விடிவு காணக்கூடாது. அரக்கனை கொன்றோம் என்று தீபாவளி கொண்டாடும் நீர்த்துப்போன இந்தியக் கொள்கையில் இருந்து விடுபட்டு, அரக்கர்களையும் திருந்தி வாழ அனுமதிப்பவன் ஈழத் தமிழன் என்ற புதுத் தீபாவளி மலர வேண்டும்.

தமிழ் மக்கள் வெறுமனே குறை கூறுவதையும், ஆளையாள் தின்னுவதையும் நிறுத்தி நல்லறிவு பெற வேண்டும்.

இந்திய உளவுப்பிரிவு கொள்கைகளிலும், சிங்கள உளவுப்பிரிவு கொள்கைகளிலும் தமிழன் மீது ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அவர்கள் உள்ளத்து இருள் இனியாவது அகல வேண்டும். உங்களுக்கு பயந்து ஊமையாக இருப்பவர்களால்தான் நீங்கள் இப்படி மாறியிருக்கிறீர்கள்.. உங்கள் உள்ளத்து இருள் அகல வேண்டும்.

இவைகள் எல்லாம் நடக்க வேண்டும்…

இன்றைய உலக பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிட்டால் ஈழத் தமிழன் பிரச்சனை சுண்டங்காயளவு சிறியதே..

ஆகவே உலக மக்கள் நலம் பெற வேண்டும்.

நாம் தீபாவளியை புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். சம்பிரதாயங்களுக்கு வெளியால் நின்று அதை சீர்தூக்க வேண்டும்.

புலம் பெயர் தமிழனுக்கு எதிராக வகுக்கப்பட்ட அத்தனை வியூகங்களும் அவனுடைய வெற்றியின் அடையாளமே என்று மாற்றிப்போட்டு சிந்திக்க வேண்டும்.

அந்த வெற்றியைப் பெற்ற நிகழ்வுக்காக தீபங்களை ஏற்றுவோம்.

மற்றவனைக் கொன்று விளக்கேற்றும் மடமைத் தீபாவளியை அகற்றி யாரையுமே கொல்வதில்லை என்ற புதுமைத் தீபாவளியை இன்று பிரகடனப்படுத்துவோம்.

கொலைக்காக தீபாவளி என்ற கொடிய கொள்கையை நினைத்து தீபம் ஏற்றினால் மனதில் கொலைவெறியே ஏற்படும்..!

நரகாசூரனை நல்லவனாக்கத் தெரியாதது மாபெரும் அறியாமை.. ! அந்த இருள்தான் நரகம்..! ஆகவே அதை விலத்தவே தீபாவளி வருகிறது என்பதை உணர்வோம்.

வெற்றியின் முதல்படியில் புலம் பெயர் தமிழன் நிற்கிறான் என்ற பெருமை நெஞ்சை நிமிர வைக்கிறது..

வெற்றிபெற்ற ஒவ்வொரு புலம் பெயர் தமிழனுக்கும் எமது வாழ்த்துக்கள்.

மனித குலமே புவியில் மகிழ்வுடன் வாழும் பொன்னாள் வரவேண்டும், புலம் பெயர் தமிழன் அதற்காக பாடுபடுவான் என்ற உறுதியுடன் தீபங்களை ஏற்றுவோம்.

http://www.alaikal.com/news/?p=86181

Edited by akootha

  • தொடங்கியவர்

கண்ணா! இராவணனை வதம் செய்ததோடு இலங்கையில் தலையிட மறந்தனையோ!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-10-26 10:40:14| யாழ்ப்பாணம்]

நரகாசூரனை வதம் செய்த திருநாளை தீபாவளியாகக் கொண்டாடுகின்றோம். தீபங்களை ஏற்றுவதன் மூலம் எங்ஙனம் புறச் சூழலின் இருள் அகன்று ஒளிப்பிரவாகம் ஏற்படுகின்றதோ அது போல எங்களிடம் இருக் கக்கூடிய அசுரத்தனங்கள் அழிந்தால், ஒளி தரும் மெஞ்ஞான அறிவு நம் அகத்தில் உருவாகும் என்ற தத்துவத்தைத் தீபாவளித் திருநாள் எடுத்தியம்புகின்றது. தீபத் திருநாளின் தத்துவம் இதற்கு அப்பாலும் விரிவுபடக்கூடியதாக இருந்தாலும் நரகாசூரன் என்ற அசுரனை வதம் செய்த கண்ண பரமாத்மாவுக்கு ஈழத்தில் தமிழ் இனம் படும் வேதனையும் துன்பமும் தெரியாமல் போனமை வேதனைக்குரியது.

கடந்த கால் நூற்றாண்டுகளாக ஈழத் தமிழ் இனம் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.அதனை நியாயப்படுத்தவும் முடியாது. அதே நேரம் உலகில் அவலப்பட்ட அடக்கப்பட்ட இனங்களின் போராட்டங்கள் ஏதோ ஒரு வகையில் அந்த இனத்தின் விடுதலைக்கு உதவியுள்ளது. ஆனால், ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டம் எங்கள் கெளரவத்தையும் இருப்பையும் அடித்துச் சென்று இன்று தலைநிமிர முடியாத அளவிற்கு நிலைமையைக் கொண்டு வந்துள்ளது. இதிலிருந்து நரகாசூரனை வதம் செய்த கண்ண பரமாத்மா ஈழத் தமிழ ர்களைக் கவனிக்கவில்லை அல்லது எங்களின் பிரச்சினையில் தலை யிடுவதில்லை என்ற முடிபை எடுத்து விட்டார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

சிலவேளை இலங்கை வேந்தன் இராவணனை இராம அவதாரமாக வந்து இலங்கையில் சங்காரம் செய்த பின்பு, இலங்கை விடயத்தில் தலையிடுவதே இல்லை என்ற முடிபை கண்ணபிரான் எடுத்திருக்க வேண்டும். அல்லது ராஜீவ் காந்தியின் கொலை கூட இலங்கைத் தமிழ் வேந்தன் இராவணனை இந்தியாவில் அவதரித்த இராமர் கொலை செய்தன் ஊழ்வினை உறுத்தலாக நடந்தது என்ற தொடர்புபடுத்தலில், அசுரத்தனத்தால் அழிக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் அவலத்தை கண்ணன் பார்க்க மறந்தனனோ என்று எண்ணத் தோன்றுகின்றது. கண்ணா! உன் செயல் இந்திய தேசத்தின் செயலிலும் கொடுமை. உன் பார்வை எங்கள் பக்கம் திரும்பட்டும். இதற்காக நீ அவதாரம் எடுக்க வேண்டாம்.

அமெரிக்காவின் பேரில், ஐநாவின் சார்பில் ஏதோ ஒரு வகையில் உன் நாடகத்தைக் காட்டு. இனியும் எங்களால் தாங்கமுடியாது. இதை நீ செய்யத் தவறினால் அடுத்த தீபாவளியை அனுஷ்டிப்பதில் அர்த்தமே இல்லை.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=24623

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.