Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13திருத்தச் சட்டத்தை ஏற்குமாறு அமெரிக்கா கூட்டமைப்பிடம் வலியுறுத்தக் கூடாது – ஹிலரிக்கு வடக்கு கிழக்கு புத்திஜீவிகள் கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29-hillary-clinton300-2-150x150.jpg

வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கியமான சில சிவில் சமூகத் தலைவர்களால் திருமதி ஹிலரி கிளின்டனுக்கு தமிழர் பிரச்சனை தொடர்பாக 24.10.2011 அன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கங்கள் சில வெளிவந்துள்ளன.

1. அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், தமிழர்களுக்கெதிராக இறுதி யுத்தத்திலும் அதற்கு முன்னரான யுத்தங்கள் பலவற்றின் போதிலும் இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள்; விட்டுக் கொடுக்கப்படக் கூடாது என அமெரிக்காவிடம் சிவில் சமூகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்குமாயின் போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேசம் விட்டுக் கொடுக்கலாம் என்றவாறாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் சிவில் சமூகத் தலைவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு தமது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கின்றனர். ‘வெற்றிகரமான’ பேச்சுவார்த்தைகள் என்றால் என்ன என்ற கேள்வி ஒரு புறமிருக்க ஒரு போதும் நீதியை வேறு பயன் எதற்காக வேணும் பேரம் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

2. 13ஆவது திருத்தத்தை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளலாம் என அமெரிக்க உதவி இராஜாங்கச் செயாலாளர் ரொபேர்ட் பிளேக் இலங்கைக்கான தனது அண்மைய விஜயத்தின் போது தெரிவித்துள்ளமை தொடர்பில் சிவில் சமூகத் தலைவர்கள் தமது கவலையை வெளியிட்டிருக்கின்றனர். 13ஆம் திருத்தம் ஒற்றையாட்சி அரசியல் வரையறைமைப்புக்கு உட்பட்டிருக்கின்ற தன்மை, வேண்டுமென்றே குழப்பகரமாக மொழியில் அவ்வரசியலைமைப்புத் திருத்தம் எழுதப்பட்டுள்ளமை, நீதிமன்றங்களினால் இத்திருத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய விளக்கங்கள் யாவுமே 13ஆம் திருத்தத்தின் பொருத்தமற்ற தன்மையை எடுத்தியம்புகின்றன.

தற்போதைய அரசாங்கத்தைத் தவிர 1987க்குப் பின்னரான அனைத்து அரசாங்கங்களும் 13ஆவது திருத்தம் தமிழரது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்ற அடிப்படையிலேயே தமிழர் தரப்போடு பேச்சுவார்த்தைகளை நடாத்தின எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் 13ஆவது திருத்தம் என்ற வரையறைக்குள் நின்று கொண்டு படிப் படியாக மேலும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையையும் சிவில் சமூகத் தலைவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். 13ஆவது திருத்தத்தின் வரையறைகள் மிக இறுக்கமாக இருக்கும் தன்மையினால் இவ்வாறான படிப்பயான அதிகாரமெடுத்தலுக்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

எனவே அமெரிக்கா 13ஆவது திருத்தத்தை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தமிழர்களுக்கு சுயாட்சிக்கான உரிமையுண்டு என்ற அடிப்படையை ஏற்றுக் கொள்ளளாத எந்த்த் தீர்விலும் பயனில்லை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் பிரதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.saritham.com/?p=39009

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது டைவர்சு கேசு.

ஸ்ரீ லங்கா காரன் அடி அடி என்று அடித்து சின்ன ஈழ தமிழ் மனுசியை நாசம் பண்ணி வைச்சிருக்கிறான்.

இனி ஸ்ரீ லங்கா காரன் யாரோ, ஈழ தமிழச்சி யாரோ.

இங்கே ஒரு சமரச பேச்சுக்கும் இடமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.