Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசைக் காப்பாற்ற கை உயர்த்தும் நாடுகளை என் செய்வோம்?

Featured Replies

இலங்கை அரசைக் காப்பாற்ற கை உயர்த்தும் நாடுகளை என் செய்வோம்?

போர் முடிபுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதெனக் கூறப்படும் அதே நேரம் தமிழ் மக்களின் அவலம் தொடர் கதையாகவே செல்கின்றது. போர் ஏற்படுத்திய தாக்கம், அதனால் தமிழ் மக்கள் படும் துன்பம் என்பன குறித்துச் சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உள்ளிட்ட பொது அமைப்புகள் கவலை கொள்கின்ற போதிலும், அது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ப தே யதார்த்தமாகவுள்ளது.

2009-ம் ஆண்டு மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுப் போர் முடிபுறுத்தப்பட்டதாக இலங்கை அரசு பகிரங்கப்படுத்தியதில் இருந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு - உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.

உண்மையில் பயங்கரவாதத்தினை ஒழித்துவிட்டோம் என்று கூறுவ தனை விட-போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று மார்தட்டுவதை விட - இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டோம். இன்னுமோர் தீவிரவாதம் தலையயடுக்காத வகையில் இலங்கை மண்ணில் இன ஒற்றுமையை ஏற்படுத்திவிட்டோம் எனக் கூறுவதே பெறுமதியான தாகவிருக்கும். எனினும் இலங்கை அரசு போர் வெற்றி பற்றிப் பேசுவது மட்டுமன்றி அதனைச் சிங்கள மக்களின் தனிப்பட்ட வெற்றி யாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஒரு நாடு பயங்கரவாத த்தினை ஒழித்ததெனில் - போரில் வெற்றி கொண்டதெனில் அது அந்நாட்டின் ஒட்டுமொத்த வெற்றியாகவிருத்தல் வேண்டும்.

ஆனால், இலங்கையைப் பொறுத்த வரை போர் வெற்றி சிங்கள மக்களுக்கான வெற்றியாகக் கூறப்படும் போது அங்கு இனங்களுக் கிடையிலான இடைவெளி வேகமாக அதிகரிக்கப்படுகின்றது எனும் உண்மை புலப்படும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென இலங்கை அரசின் முன்னைய பிரசாரம் இருந்த போதிலும், தற்போது அபிவிருத்தி என்ற எண்ணக் கருவை முன்னிலைப்படுத்தி, அதற்குள் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளை மூடி மறைக்கும் காரியம் நடந்தேறுகின்றது. இலங்கை அரசின் போர் வெற்றிக்கு உதவிய நாடுகள், ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை உணராத அல்லது ஏற்றுக்கொள்ளாத நிலைமை யிலேயே உள்ளன. அது மட்டுமன்றி இலங்கை அரசிற்காக இப்போதும் கையுயர்த்தி அதனைக் காப்பாற்ற நினைக்கும் நாடுகளு க்கும் ஈழத்தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பம் தெரியாமல் உள்ள தென்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தனித்து இலங்கை அரசு கூறுவதை மட்டும் செவிமடுத்தால் நிலைமை இதுவாகத்தான் அமையு மென்ற அடிப்படையைப் புரிந்து கொண்டு,தமிழ் அரசியல் தலைமைகள் எங்கள் பிரச்சினையை உலகிற்கு எடுத்தியம்ப வெளிநாடுகளுக்கான பிரசார அமைப் பொன்றை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சூறாவளி வேகத்தில் பரப்புரை செய்வது அவசியம். அப்போதுதான் எங்கள் பற்றிய உண்மைகள் தெரியவரும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=24660

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.