Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழாம் அறிவின் பஞ்டயலொக்குகள் இலங்கையில் வெட்டப்பட்டன – தணிக்கைக்குப் பின் வெளியிட அனுமதி:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாம் அறிவின் பஞ்டயலொக்குகள் இலங்கையில் வெட்டப்பட்டன – தணிக்கைக்குப் பின் வெளியிட அனுமதி:-

29 அக்டோபர் 2011

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ஏ.ஆர் முர்கதாசின் இயக்கத்தில் நடிகர் சூயாவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஏழாம் அறிவு பொதுவாக படம் துவங்கிய முதல் பத்து நிமிடங்கள் மிகச் சிறப்பாகவும் பின்னர் சலிப்பாகவும் இருப்பதாக பட விமர்சனங்கள் வெளியாகியிருந்தாலும் பரவலாக தமிழ் உணர்வாளர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது காரணம் படத்தில் வரும் தமிழர்கள் சார்ந்த பஞ்ச் டயலாக்குகள்தான் காரணம். பிரதானமாக ஒன்பது பேர் சேர்ந்து அடிக்கிறதுக்கு பேர் வீரமில்லை துரோம், தமிழனா இருந்தா திருப்பியடிக்கணும் போன்ற வசனங்களுக்கு திரயரங்குகளில் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு ஆனால் இதே படம் இலங்கையிலும் வெளியாகியிருக்கிறது. இந்த பஞ்ச் டயலாக்குகளை எதிர்பார்த்துப் போன இலங்கை தமிழ் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் சுமார் 15 நிமிடங்கள் படம் வெட்டி எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கிறதாக பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

யாழ்பாணத்திலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் படம் வெளியான திரையரங்குகளில் தமிழக சினிமா ரசிகர்களுக்கு சவால் விடும் வகையில் மேளம் முழங்க பலாபிஷேகம் செய்துதான் ஏழாம் அறிவை வரவேற்றிருக்கிறார்கள் இலங்கை ரசிகர்கள். ஆனால் அவர்களுக்கு தமிழர்கள் தொடர்பான டயலாக்குகள் நீக்கப்பட்டு படம் வெளியாகியிருக்கும் விஷயங்கள் தெரியவில்லை. படத்தை இலங்கை விநியோகஸ்தவர்கள் வாங்கி இலங்கையில் தணிக்கைக்கு உட்படுத்திய போது படத்தை வெளியிட முடியாது என் தணிக்கைச் சபை கைவிரித்து விட்டதாம். இறுதியில் படத்தின் சுமார் 15 வரையிலான நிமிடங்களுக்கு உட்பட்ட சில பாகங்களை நீக்கினால் பரீசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக படக்குழுவினர் (இந்தப் படத்தை தயாரித்திருப்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் தமிழக துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத் தக்கது) ஸ்டாலின் தலையிட்டு இந்தப் படத்திற்காக இலங்கை தரப்பிடம் பேசியதன் பின்னரும், தமிழர்கள் தொடர்பான முக்கிய உரையாடல்கள் சில நீக்கப்பட்டும் படம் வெளியாகியிருப்பதாக இலங்கையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை என்றாலும் அது காட்டும் பரபரப்பு அரசியலுக்கு பஞ்சமில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69316/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்திலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் படம் வெளியான திரையரங்குகளில் தமிழக சினிமா ரசிகர்களுக்கு சவால் விடும் வகையில் மேளம் முழங்க பலாபிஷேகம் செய்துதான் ஏழாம் அறிவை வரவேற்றிருக்கிறார்கள் இலங்கை ரசிகர்கள்.

சந்தோசமான செய்தி.

வெறும் வயித்திலை பாலை ஊத்தின மாரி இருக்கு

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.