Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா விவகாரம்: பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே பிளவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chogm-logo.jpg

பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பொதுவான விடயங்களைக் கலந்துரையாடுவதற்காகச் சந்தித்துக் கொள்வார்கள். பொதுநலவாய அமைப்பின் எதிர்கால நிலைப்பாடு தொடர்பாக அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்ற சந்திப்புக்களில் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.

பொதுநலவாய அமைப்பு நிறுவப்பட்டதற்கான கோட்பாடுகள் தற்போதும் உடையாது பாதுகாக்கப்பட்டு வருகிறதா?

2013 ல் சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை வைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தேர்தலானது, தற்போது இவ்வமைப்பானது தனது கோட்பாடுகளைப் பின்பற்றாதுள்ளதையே வெளிக்காட்டி நிற்கின்றது.

பொதுநலவாய அமைப்பானது தனது உறுப்பு நாடொன்று போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக தீவிர கவனத்தை எடுத்துக் கொள்ள முடியாதா?

சிறிலங்கா போர்ப் பாதிப்புக்களிலிருந்து தற்போது மீண்டு வருவதால், இவ்வாண்டில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை சிறிலங்கா தனது நாட்டில் நடாத்த முடியாதெனத் தெரிவிக்கப்பட்டதுடன், 2013 ல் இம்மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகள் அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் சந்திக்கவுள்ளனர். ஆனால் சிறிலங்கா மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பினும், 2013 ல் சிறிலங்காவில் நடைபெறத் தீர்மானிக்கப்பட்ட பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை வேறிடத்திற்கு மாற்றுவது தொடர்பாகக் கலந்துரையாட உறுப்பு நாடுகள் மறுத்துள்ளன.

2013-2015 வரை பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை சிறிலங்கா எடுப்பது தொடர்பாக மீண்டும் ஒரு தடைவ ஆழமாக யோசித்துத் தீர்வை எட்டுவதனை பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தும் முகமாக அரசசார்பற்ற நிறுவனங்களின் அனைத்துலகக் குழுவொன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

"பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் மேற்கொள்வதற்கான பொருத்தப்பாடுகள் தொடர்பாக பேர்த்தில் மீளவும் ஆராய்ந்து தீர்வை எட்டும்படி நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். தனது நாட்டில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பற்றதன்மை மற்றும் அது தொடர்பாக தனது நாட்டிற்குள்ளே மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைகள் இன்னமும் நிலுவையில் உள்ளமை போன்றவற்றை பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் தமது கவனத்திற் கொள்ளவேண்டும்" என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள 11 அரசசார்பற்ற நிறுவனங்களில் பொதுநலவாய அமைப்பின் மனித உரிமைகள் அமைப்பும் [Commonwealth Human Rights Initiative -CHRI] ஒன்றாகும். பொதுநலவாய அமைப்பு நன்மை அடைவதற்காக மட்டுமன்றி சிறிலங்காவும் இதனால் நன்மை அடையும் என்பதைக் கருத்திற் கொண்டே 2013 ல் சிறிலங்காவில் உச்சி மாநாட்டை மேற்கொள்வதைப் பிற்போடுமாறு இந்நிறுவனத்தின் இயக்குனர் Maja Daruwala தெரிவித்துள்ளார்.

"சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தீவிர போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள இந்நிலையில், அங்கு உச்சி மாநாட்டை மேற்கொள்ளாது பிற்போடுவது புத்திசாலித்தனமானது. அத்துடன் இவ்வாறானதொரு மாநாட்டை மேற்கொள்வதற்கு பெருமளவிலான நிதி தேவைப்படும். சிறிலங்கா தற்போது தனது மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. தற்போதுதான் இந்நாடு போரின் அழிவிலிருந்து மீண்டுவருகின்றது. ஆகவே இந்நிலையில் சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை வைப்பதென்பது நல்லதல்ல" என Maja Daruwala மேலும் தெரிவித்துள்ளார்.

"இம்மாநாட்டைத் தங்களால் மிக இலகுவாக பிற்போட முடியும். குறைந்தது இதையாவது செய்யவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொதுநலவாய அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான பலமான சமிக்கையாக இது அமைந்திருக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரேவிதமான சட்டங்கள், ஜனநாயகம், மனித உரிமை விடயங்களைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே பொதுநலவாய அமைப்பாகும். ஆனால் இதில் உறுப்புரிமை பெற்றுள்ள 54 நாடுகளும் மனித உரிமை விவகாரம் தொடர்பாக சமமாக நடந்துகொள்ளவில்லை.

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக முரண்பாடு தோன்றியுள்ள உறுப்பு நாடாக சிறிலங்கா மட்டும் இருக்கவில்லை. பாகிஸ்தான் ஏற்கனவே இரு தடவைகள் தனது உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.

1999 ல் பாகிஸ்தானில் பர்வேஸ் முசராப்பின் கிளர்ச்சி இடம்பெற்றதன் காரணமாக 2004 வரை அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் அண்மையில் முசராப் ஆறு மாத கால அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திய போதும் பாகிஸ்தான் இரண்டாவது தடவையாக அதன் பொதுநலவாய உறுப்புரிமையிலிருந்து இடைவிலக்கப்பட்டிருந்தது.

பிஜி தற்போதும் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடாகக் கருதப்பட்டாலும் கூட, விளையாட்டு நிகழ்வுகள், சந்திப்புக்கள், உதவி நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றவற்றிலிருந்து பிஜி தற்போது 'முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது'.

"பொதுநலவாய அமைப்பிலிருந்து சிறிலங்காவை இடைநிறுத்துவதற்கான எந்தவொரு பேச்சுக்களும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துமாறு சில வேண்டுகோள் விடுத்துள்ளன. ஏற்கனவே மனித உரிமைகள் தொடர்பாக அதிக மீறல்களை மேற்கொண்ட றுவாண்டா, கமறூண், காம்பியா போன்ற சில நாடுகளும் உள்ளன. பொதுநலவாய அமைப்பானது தான் மனித உரிமை விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்ளுமாறு உண்மையில் தனது உறுப்பு நாடுகள் மீது அழுத்தம் கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்" என CHRI இன் இயக்குனர் Maja Daruwala தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு நடாத்தப்பட்டால், அதனைப் புறக்கணிக்க வேண்டும் என சில நாடுகள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளன. பொதுநலவாய அமைப்பானது தனது அடிப்படைக் கோட்பாட்டிற்கு அமைவாக தனது தீர்வுகளை எட்டவேண்டும் எனவும், இவ்வமைப்பு மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கான ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் முக்கியத்துவம் மிக்க சிலரை உள்ளடக்கிய குழுவொன்றால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக Maja Daruwala மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தக் கருத்தை சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகியன வலுவாக எதிர்த்துள்ளன. உள்நாட்டு விடயம் தொடர்பாக வெளிநாட்டவர் ஒருவர் விசாரணை செய்வது என்கின்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதில் இவ்விரு நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன.

"பொதுநலவாய அமைப்பானது தனது உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துவதா அல்லது இது தொடர்பாகப் பேசாதிருப்பதா என்பது தொடர்பாக தீர்வை எட்டுவதில் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் குழப்பமடைந்துள்ளனர்'"என அனைத்துலக மன்னிப்புச்சபையின் இணையத்தளத்தில் இதன் ஆசிய-பசுபிக் பிராந்திய உதவி இயக்குனர் Madhu Malhotra குறிப்பிட்டுள்ளார்.

செய்தி வழிமூலம்: Radio Netherlands Worldwide - RNW

மொழியாக்கம்: நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20111030104962

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.