Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்டமைபின் வெளிநாட்டுப்பயண முயற்சியால் எந்தப் பலனும் கிட்டாது அவர்கள் தமிழரின் ஏகப்பிரதிநிதிகளும் அல்லர் பீரிஸ் கூறுகிறார் .

Featured Replies

தமிழ்க் கூட்டமைபின் வெளிநாட்டுப்பயண முயற்சியால் எந்தப் பலனும் கிட்டாது அவர்கள் தமிழரின் ஏகப்பிரதிநிதிகளும் அல்லர் பீரிஸ் கூறுகிறார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் தான் இறுதித் தீர்வொன்றைக் காண முடியுமே தவிர வெளிநாடுகளுக்குச் சென்று கூறி அழுத்தம் கொடுப்பதனால் எந்தப் பலனும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போதே இந்தக் கருத்தை வெளியிட்ட பேராசி ரியிர் பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பரதிநிதிகள் அல்லர் என்றும் குறிப்பட்டார்.

தமிழ்க் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் பற்றி அரசாங்கத்துக்கு எதுவும் தெரியப்படுத்தப்பட்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்;

இதில் அரசாங்கத்துக்குத் தெளிவுபடுத்த அவசியமில்லை. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசி வருகிறது. இலங்கை அரசாங்கத்துடன் பேசியே இறுதித் தீர்வுகாண வேண்டும். அதைவிடுத்து வெளிநாடுகளுடன் பேசிப் பயனில்லை.

அரசாங்கத்துடன் பேசி பாராளுமன்றத்தில் பேசி அரசியலமைப்புத் திருத்தம் ஏதும் தேவைப்பட்டால் அதை மேற்கொண்டு இந்த நாட்டில் செய்ய முடிந்ததைத் தான் செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று கூறி அழுத்தம் கொடுப்பதில் எந்தப் பலனும் கிடையாது என்று தெரிவித்தார்.

இதேநேரம் ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்புக் குறித்த கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கையில்;

ஐ.நா.செயன்முறை குறித்து நாம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அவர்கள் யாரைச் சந்திப்பது, யாரைச் சந்திக்கக்கூடாது என்று நாம் தீர்மானிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர். அவர்கள் அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். அதுதவறு. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வேறு பல கட்சிகளும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றன என்று கூறினார்.

http://www.thinakkural.com/news/all-news/local/9511-2011-11-02-01-05-00.html

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு இன்று தாயக மக்களின் அரசியல் பிரதிநிதியாக நிற்கும் கடைசி சக்தி. அதையும் முறியடிக்க சிங்களம் கங்கணம் கட்டியவண்ணம் உள்ளது.

நாம் எல்லோரும் இணைந்து அரசியல் தீர்வை பெற வேண்டும். குறிப்பாக ஆயுதப்போராட்ட வெற்றிகளை அரசியல் வெற்றிகளாக்க விட்ட தவறுகளை இங்கே மீண்டும் விட்டால் இதுவே நாம் வாழ்ந்தோம் என்ற இறுதி அத்தியாயமாகிவிடும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீரீசு பின் தமிழரின் ஏக பிரதிநிதிகளான அண்ணல் டக்கி, அம்மான் கரு, முதலை அமைச்சர் பிள்ளையான் போன்றோர் சென்றிருக்கவேண்டும் என்று குறைப்பட்டார்.

மற்றும் அவர் விஜய் நம்பியார் தனக்கு கேரளா ஆயுர்வேத எண்ணையை நன்றாக மயிர் வளரும் என்று கூறி விற்று ஏமாற்றி விட்டதாக முறைப்பட்டார்.

Edited by KuLavi

எனக்கு வேறு விதமாக படுகிறது. இவர்கள் கூட்டமைப்பை முறியடிக்க கங்கணம் கட்ட ஆரம்பித்தது ஏனெனில், அமெரிக்கா(வும், சிலசமயம் இந்தியாவும்) முஸ்லீம்களையும் கூட்டமைப்புதான் பிரந்திப்படுத்த வேண்டும் என்கிறார்கள் போலிருக்கு. சரியா தெரியாது. இரு தடயம்கள்.

1. முதலாவது சம்பந்தரின் புதிய கோசம் "முஸ்லீம்களும் தமிழருடன் சரி சமமாக வாழ வேண்டும்" என்பது. ஏற்கனவே முஸ்லீம்கள் சிங்களவருடன் சரி சமமாக வாழ்கிறார்கள். இந்த ரகசியம் கட்டாயம் சம்பந்தருக்கும் தெரியும் என்றுதான் வைத்து கொள்ள வேணும். ஆகவே சம்பந்தரின் பேச்சுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.

2. அமெரிக்கவோ, இந்தியாவோ இதுவரையில் ஒரு முஸ்லீம் பிரதிநிதிகளையும் அழைக்கவில்லை. இந்தியாவில் பாகிஸ்த்தான் பிரிந்ததின் பின், எந்த மாநிலத்திலும் முஸ்லீம்கள் என்று ஒரு தனி அரசியல் கிடையாது. அவர்கள் மாநிலத்து மொழிகளுடன் தான் இணைந்து அரசியல் செய்கிறார்கள். எனவே இந்தியாவின் இந்த நடத்தையை பெரிது படுத்த முடியாது. ஆனால் அமெரிக்காவின் நிலை வேறு. அங்கே முஸ்லீம் போன்ற சிறுபான்மையினர் பிரத்தியேகமாக அரசியலில் சேர்க்க பட வேண்டும். இதன் கருத்து அமெரிக்கா தமிழ் கட்சிகள்தான் முஸ்லீம் மக்களையும் பிரநிதி படுத்தும் பொறுப்பு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.