Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தின்போது உதவியது போன்று அபிவிருத்தியிலும் இலங்கைக்கு உதவிசெய்வோம்: ரஷ்யா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின்போது உதவியது போன்று அபிவிருத்தியிலும் இலங்கைக்கு உதவிசெய்வோம்: ரஷ்யா அறிவிப்பு

[Friday, 2011-11-04 10:54:07]

யுத்தத்தின்போது எவ்வளவு அர்ப்பணிப்புடன் ரஷ்யா உதவிபுரிந்ததோ அதேபோல் பொருளாதார அபிவிருத்தியிலும் உதவிசெய்யும் என்று ரஷ்ய தூதுவர் விளாடிமிர் பி.மிகேலோ குறிப்பிட்டார். கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் வரவேற்கத்தக்க வகையிலேயே உள்ளது.

எனவே இவ்வுறவு மேலும் வலுப்பெற ரஷ்யா இலங்கையுடன் ஒன்றினைந்து செயற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்குன் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபட ரஷ்யா உதவி செய்யும் என்றும், பொருளாதாரம் மற்றும் கண்ணிவெடி அகற்றலிலும் உதவி செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியொன்றில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=51585&category=TamilNews&language=tamil

[ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 00:00 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] Russian%20amb.%20mikkalov.jpgதீவிரவாதத்தை தோற்கடிக்கும் போரின்போது சிறிலங்கா அரசுக்கு ஆதரவு வழங்கிய ரஸ்யா, நல்லிணக்கம் உள்ளிட்ட போருக்குப் பிந்திய அனைத்துச் செயற்பாடுகளுக்கும் உதவிகளை வழங்கும் என்று, சிறிலங்காவுக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார்.

302 மில்லியன் ரூபா பெறுமதியான, கண்ணிவெடிகளை அகற்றும் நான்கு இயந்திரத் தொகுதிகளையும் அவற்றுக்கான உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட கருவிகளையும் சிறிலங்கா பாதுகாப்பு செயலரிடம் கையளிக்கும் நிகழ்வில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில், காலிமுகத்திடலில் நேற்றுமுன்தினம் கண்ணிவெடிகளை அகற்றும் இந்தக் கருவிகள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டன.

russia%20donate%20demining%20machnine%201.jpg

russia%20donate%20demining%20machnine%202.jpg

“சிறிலங்காவும் ரஸ்யாவும் பாரம்பரியமான நீண்டகால உறவுகளை கொண்டுள்ளன.

இந்த உறவுகள் அண்மைக்காலத்தில் மேலும் பலப்படுத்தப்பட்டு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.“ என்றும் ரஸ்யத் தூதுவர் மிக்கலோவ் அங்கு மேலும் கூறியுள்ளார்.

ரஸ்யா அன்பளிப்புச் செய்த கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகளை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிடம், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச உடனடியாகவே கையளித்தார்.

ரஸ்யாவின் வெளிவிவகாரச் செயலர் அன்ரேவ் கபனொவ் மற்றும் சிறிலங்காவின் நிதி, பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

http://www.puthinappalakai.com/view.php?20111105104990

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.