Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவாளியை கோட்டைவிட்ட அவுஸ்ரேலிய அரசாங்கம்: செனட்டர் லீ ரியானன்

Featured Replies

Lee%20Rhinnon.jpg

அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சி சிறிலங்காவில் நடந்த போர்க்குற்ற விசாரணைக்கு ஓர் சர்வதேச , முழுமையான விசாரணை ஒன்றை நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றது. இந்த விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம். அதே வேளை மஹிந்த அரசாங்கம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் தனது நல்லிணக்க ஆனைக்குழுவின் அறிக்கையினை வெளியிடப்போவதாகக் கூறியுள்ளது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு பார்வைக்கு வரமாட்டா என பிபிசி நேற்று கூறியுள்ளது. ஆகவே இது ஒரு கண் துடைப்பு நாடகமாகத்தான் முடியும். இவ்வாறு கூறியுள்ளார். அவுஸ்ரேலிய செனட்டர் லீ ரெய்மொன்.

.

கடந்த முதலாம் திகதி பாராளுமன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் ஏன் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கொடுக்கவில்லை, பகிரங்கமாக அறிவிக்கவில்லை என கேட்டபோது . அதற்கு அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரூட் கூறினார், சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைகுழுவின் அறிக்கையினை வெளியிடப்போகின்றது. ஆகவே அதன் நிலமைகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம் அதன் பின்னர் சர்வதேச விசாரணைபற்றி முடிவெடுப்போம் என்று.

.

ஆனால் இன்று சிறிலங்கா நல்லிணக்க ஆணிக்குழுவோ தமது அறிக்கை பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என கூறியுள்ளது. இந்த அறிவிப்பானது அவுஸ்ரேலிய அமைச்சர் கெவின் ரூட்டின் கருத்துக்களுக்கு முரணாக உள்ளது. உள்ளூர் ஆணைக்குழுவின் அறிக்கையானது போர் முழுமையற்ற, எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாத அறிக்கையாகத்தான் இருக்கும் என்பது எமக்கு முன்பே தெரியும்.

.

2010 இலேயே மனித உரிமை காப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிகள் குழு உட்பட பல அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் சிறிலங்காவின் உள்ளூர் ஆணைக்குழுவின் அறிக்கையினை ஏற்கவில்லை. அதில் உள்ள பல்வேறு குரைபாடுகளை சுட்டிக்காட்டியும் இருந்தன. அதாவது அந்த ஆணைக்குழுவில் உள்ளோர் மஹிந்த அரசுக்கு சார்பானவர்கள். நடு நிலையான ஆட்கள் எவரும் இருக்கவில்லை. சர்வதேசத்தை திசை திருப்பவே இந்த உள்ளூர் ஆணைக்குழு என வெளிப்படையாகவே கூறி இருந்தமையினை சுட்டிக்காட்டுகின்றேன் என்றார் செனட்டர் லீ.

.

நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடானது சிறிலங்கா தான் உள் நாட்டிலே நடவடிக்கை எடுப்பது போன்று காட்டுவதன் மூலம் சர்வதேச அழுத்தத்தினை தணிக்க எடுக்கும் ஓர் முயற்சியே என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போ நவம்பர் மாதம் 15 இல் மஹிந்த இராஜபக்‌ஷ இந்த அறிக்கையினைப் பெறுவாராம் பின்னர் அவர்தான் இந்த அறிக்கையினை வெளிவிடுவதா இல்லையா என முடிவு எடுக்கவேண்டுமாம். ஆகவே இந்த ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

.

சிறிலங்கா அரசாங்கத்தின் உள்ளூர் ஆணைக்குழுவின் செய்பாடானது ஓர் நியாயமான சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் நியமங்களை எந்த வகையிலும் பூர்த்திசெய்யவில்லை. இதே வேளை கனடா, பிரித்தானியா உட்பட்ட தலைவர்கள் அவுஸ்ரேலியாவின் முன் நாள் தலைவர்கள் எல்லோரும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளையே வலியுறுத்துகின்றனர்.

.

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் கூறுகின்றார்; சிறிலங்காவில் நடந்த உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைவேண்டும், பரிசீலிக்கவேண்டும் என்று. ஆனால் எனது கேள்வி என்னவென்றால் யார் அந்த விடயங்களை செய்வது என்பதுவே என கூறினார் செனட்டர் லீ. அவுஸ்ரேலியா அரசாங்கம் குற்றம் செய்தவர்களிடமே நியாயத்தினை எதிர்பார்க்கும் வழமை ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் சிறிலங்காவிடம் கெவின் ரூட் அப்படி ஒரு எதிர்பார்ப்பினை வெளியிட்டிருப்பது அசாதாரண விடயமாகவே இருக்கின்றது. அதுவும் சிறிலங்கா அரசாங்கம் தான் மேற்கொண்ட சிவிலியன்கள் மீதான வைத்தியசாலைகள் மீதான .குண்டுத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள் எல்லாவற்றையுமே அடியோடு மறுத்துவருகின்றது. அதே அரசாங்கத்திடம் அவுஸ்ரேலிய ஆரசாங்கம் நியாயத்தினை எதிர்பார்ப்பது வியப்பானது என செனட்டர் லீ சாடினார்.

.

ஐக்கிய நாடுகளின் சபை சிறிலங்காவில் போர்க்குற்றம் நடந்துள்ளதாக கண்டறிந்து 18 மாதங்கள் ஆகின்றன. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கூட அங்கு நடந்த குற்றங்களை ஆதாரபூர்வப்படுத்தியுள்ளார். ஆனால் அவுஸ்ரேலிய அரசாங்கமோ இவற்றையெல்லாம் பரிசீலிக்கும் வேலையை குற்றம் செய்த நாடே செய்யவேண்டும் என கூறுகின்றது. அவுஸ்ரேலியாவின் இத்தகைய செயலானது மனித உரிமையினை மீறும் நாடுகளுக்கு தவறான செய்தியினையே வழங்கும். நான் நினைக்கின்றேன் அவுஸ்ரேலியா குற்றவாளிகளை தண்டிக்கும் மிகப்பெரிய சந்தர்ப்பத்தினை தவறவிட்டுள்|ளது. ஏனென்றால் அவுஸ்ரேலிய பிரதமர் யூலியா ஹிலாட் 2013 ஆம் ஆண்டு பொது நலவாய நாடுகளின் மாநாட்டினை சிறிலங்காவில் நடத்த ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் குற்றவாளிகளை தண்டிக்கும் சந்தர்ப்பத்தினை தவறவிட்டுள்ளார்.

மூலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.