Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கள் நலனுக்காக கூட்டமைப்பைப் பயன்படுத்தும் அமெரிக்காவும், இந்தியாவும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் நலனுக்காக கூட்டமைப்பைப் பயன்படுத்தும் அமெரிக்காவும், இந்தியாவும்

போரின் முடிந்த பின் இலங்கை அரசு மேற்குலகத்தையும், இந்தியாவையும் கைகழுவிவிட்டுவிட்டது. இதனால் இலங்கையில் இவர்களின் ஆட்டம் முடக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் சீனா இங்கு நிலைகொண்டுள்ளதால் தன்னிச்சையாக இலங்கையில் ஆடமுடியவில்லை. பதிலுக்காக உதவிக்கரம் கொடுத்துப்பார்த்தார்கள். அவர்கள் உதவியைப்பெற்றுக்கொண்டார்களே தவிர இவர்களுடன் ஓடும் புளியம்பழமும்போலத் தான் இருக்கின்றார்கள். அதன் பின் போர்குற்ற ஆவண அறிக்கை போட்டு விரட்டினார்கள். அதற்கும் அரசு மிரளுவதாகத்தெரியவில்லை. இப்போது என்றுமில்லாதவாறு கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்து என்ன கதைத்தோம் என்ன கதைக்கவில்லை என்பதை இரகசியமாக வைத்துக்கொண்டு இலங்கை அரசைச்சலனத்திற்குள் விட்டுள்ளார்கள். அதற்கும் இலங்கை அரசு பணியவில்லைப்போலும். இதிலும் கூட்டமைப்பில் இந்திய அரசால் அமெரிக்காவிற்கு முன் மொழியப்பட்டவர்களே அமெரிக்கா வந்திருக்கவேண்டும். ஏனெனில் தெரிவு செய்யப்பட்டவர்களே வந்தார்கள். இங்கு தமிழர்களுக்கு ஏதும் கிடைக்குமா? என்று பார்த்தால் ஏதும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் கூட்டமைப்பை, இலங்கை அரசிறகு உளவியல் தாக்கத்தை உள்ளாக்கும் ஒரு முயற்சியாகவே பயன்படுத்தப்பட்டது .எனலாம். இந்தியாவும், அமெரிக்காவும் சீனாவைப்புறதள்ளி இலங்கையைத்தனது எண்ணக்கட்டுப்பாட்டிற்குள் அச்சுறுத்தல் மூலம் கொண்டுவரவே பிரயத்தனம் செய்கின்றன. இங்கு இலங்கை அரசு பணிந்தால் என்ன பணியாவிட்டால் என்ன தமிழர் நலன்கள் ஏதும் இவை பெற்றுத்தரமாட்டா. இலங்கை அரசு அடிபணிய மறுக்கும் வரைக்கும் உலகம் தமிழர் உரிமைகளில் இக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக்கொள்ளும்.

தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தருவதில் உலகில் எந்தவொரு அரசும் விரும்பவில்லை. அதிகாரப்பகிர்வு, தன்னாட்சி, சமஷ்டி என்று எல்லாம் பேசப்பட்டாலும் அவை உதட்டளவில் தான். ஏனெனில் தமிழர்களுக்கு சிறிதளவு கொடுக்கப்பட்டால் அவர்கள் தாங்களாகவே பெரிதளவில் எடுத்துக்கொள்வார்கள் என்பதைக் கடந்தகாலம் கற்றுகொடுத்திருக்கின்றது.

யாருடைய தூண்டுதலாலும் இனி தமிழர்கள் ஆயுதத்தைக்கையில் எடுக்கக்கூடாது. எங்களைத் துரும்புச்சீட்டாக இந்தியா பயன்படுத்திப் பின்னர் எங்களையே கொன்றுகுவித்ததில் இந்தியாவுடன், உலக வல்லரசுகள் எல்லாவற்றி;ற்கும் பெரும் பங்கு இருக்கின்றது. இங்கு போர்க்குற்றம் என்பது ஒரு செல்லாக்காசுதான் என்பதை நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஓடுமீனோடி ஒறுமீன் வருமளவும் போர்க்குற்றம் கதைக்கப்படும். விசாரணைக்கு வரமாட்டாது.

புலிகள் பேச்சு மேடைக்கு வரமறுக்கின்றார்கள். தீர்வுக்கு இவர்கள் தான் முட்டுக்கட்டை என்றவர்கள்., போர் முடிந்து 3 வருடங்களாகத் தமிழர் பிரச்சனைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார்? ஏன் பிரச்சனைக்குத்தீரவு வைக்கவில்லை.

அமெரிக்காவிடம் உதவி பெற்றுப் பின்னர் அமெரிக்காவை எதிர்த்த எவரையும் (அரசானாலும் சரி, தனிக்குழுக்களானாலும் சரி அமெரிக்கா அவர்களை விட்டு வைக்கவில்லை எல்லோரையும் காலம் கடந்தாவது பொட்டு;தள்ளிவிடுகின்றது. எந்த வல்லரசு எங்கிருந்தாலும் சரி அமெரிக்கா தனக்கு எதிரானவர்களை என்ன விலை கொடுத்தும் சாதூரியமாகப் போட்டுத்தள்ளும். அதன் பின் குடி கொண்டவல்லரசுகளும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை என்பதே கடந்த கால வரலாறு. இந்தியா இப்போது இலங்கையை அமெரிக்காவிடம் கையளித்திருப்பதங்கான சமிக்கை தான் கூட்டமைப்பின் அமெரிக்கச்சுறறுலா.

இருந்தும் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு சிறியளவிலாவது உரிமை கொடுத்து இவர்களின் கடும்போக்கைக் ;குறைத்துவிடலாம் என்று இலங்கை அரசு செய்தாலும் இவர்களின் பக்கம் இலங்கை சாயாவிட்டால் இவர்களும் விடப்போவதில்லை. சிலவேளை இவர்களுக்கிடையே முறுகல் நிலைமுற்றி அந்த மோதலின் பக்கவிளைவாகத் தமிழர்களுக்கு ஏதேனும் கொட்ட வாய்ப்புள்ளது இருந்தாலும் பெரிதாக எதிர்பார்க்கமுடியாது. தமிழர்கள் கொஞ்சமாவது பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் இந்த வாய்ப்பை புத்திசாதூரியமாகப்பயன்படுத்தவேண்டும். அரசியலில் சாதிக்கவேண்டுமாயின் எம்மைக் கொன்ற எதிரியுடனும் சந்தர்ப்பக்கூட்டு வைப்பதில் தவறேதும் இல்லை. அரசியல் விளையாட்டில் நீதிக்கு இடமில்லை. இன்றைய அரசியல் மிகவும் நெளிவு சுழிவு உள்ள பாதை. இதற்குள் நெளிந்தும், சுழிந்தும் செல்லவேண்டும். அவர்கள் நலுனுக்காக எங்களைப் பயன்படுத்த இனிமேலும் நாங்கள் இடமளிக்கக்கூடாது.

கொஞ்சம் பிந்தித்தான் விளங்கியிருக்கிறீங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.