Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தள தடைவிதிப்பு..! புதிய மாபியாவாக நாட்டின் ஊடகங்களுக்கு எதிரான மாபியா உருவாகியுள்ளது: ராஜபக்ஷ குடும்பத்தை சாடுகிறார் மங்கள சமரவீர.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

manhala_amaraweera_02_60079_150.gif

செயற்திறனற்ற நிறுவனங்கள் மற்றும் செயற்திறனற்ற சொத்துக்களை வழமை நிலைமை கொண்டு வரும் சட்டமூலம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள பறிமுதல் சட்டமூலம், ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட தேவைக்காக காணிகளை கொள்ளையிடும் சட்டமூலம் என கொண்டு வந்திருக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இறுதி நேரத்தில் சட்டமூலத்தின் பெயரை அமைச்சரவை மாற்றினாலும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியான பாதிப்புள்ள சட்டமூலம் என்ற போதிலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருபான்மை பலம் இருப்பதாலும், நாடாளுமன்றத்தில் உள்ள ஆளும் கட்சிக்கு ஆதரவான அனைவரும் சிக்கனல் தூண்கள் அன்றி நபர்கள் இல்லை என்பதால், எவ்வாறான சட்டமூலம் கொண்டு வந்தாலும் உயிர் மீது இருக்கும் பாசம் காரணமாக கைகளை தூக்கி ஆதரவு தெரிவிப்பார்கள்.

2007- 2009 ஆண்டுக்கான கோப் அறிக்கை நாடாளுமன்றத்தில் வசித்த அமைச்சர் டியூ.குணசேகர நஷ்டத்தில் இயங்கும் 249 அரச நிறுவனங்கள் இருப்பதாகவும் அவற்றின் நஷ்டம் 9 பில்லியன் ரூபா என சுட்டிக்காட்டினார். இவ்வாறான நிலைமையில் நஷ்டத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்பதன் மூலம் அரசாங்கத்தின் நஷ்டம் அதிகரிக்குமே தவிர குறையாது.

அரசாங்கம் எப்படியும் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ளும் என்பதால், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே சட்டமூலத்தை இரத்துச் செய்ய முடியும். தற்போது நாட்டின் அனைத்து இடங்களிலும் மாப்பியாக்கள் இயங்கி வருகின்றன. போதைப் பொருள் மாபியா, காணிகளை கொள்ளையடிக்கும் மாபியா, பங்கு சந்தையில் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் மாபியா என்பன இவற்றில் பிரதான மாபியாக்களாகும்.

இந்த நிலையில், புதிய மாபியாவாக நாட்டின் ஊடகங்களுக்கு எதிரான மாபியா உருவாகியுள்ளது. தற்போது, இணையத்தளங்களை தடைசெய்வதன் மூலம் அந்த மாபியா செயற்பட ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமாக அறிவிக்கப்படவிருந்த இணையத்தளம் பரீட்சாத்தமாக பதிவேற்றப்பட்டிருந்த நிலையில் அதுவும் தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.