Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட ஆசிரிய ஆலோசகர் வவுனியா இராணுவ இரகசிய சித்திரவதை முகாமில்!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட ஆசிரிய ஆலோசகர் வவுனியா இராணுவ இரகசிய சித்திரவதை முகாமில்!

Published on November 10, 2011-6:33 pm · No Comments

army-in-kili-150x150.jpgகிளிநொச்சி கல்வி வலயத்தில் சங்கீத பாட ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றும் 33வயதுடைய குலவீரசிங்கம் கோகுலன் என்பவர் சுதுமலையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதவர்களால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சுதுமலை வடக்கைச் சேர்ந்தவராவார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவில் உடையில் சென்றவர்களே தாம் பொலிஸ் என்று தெரிவித்ததோடு விசாரணைக்களுக்காக அவரை அழைத்து செல்வதாக தெரிவித்து அழைத்து சென்றதாகவும் பின்னர் அவர் வீடு திரும்பவில்லையென்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக கோகிலனின் மனைவி இலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழுவிலும் கடந்த செவ்வாய்கிழமை முறைப்பாடென்றையும் பதிவு செய்துள்ளார்

இதேவேளை குலவீரசிங்கம் கோகிலன் வவுனியாவில் உள்ள இரகசிய முகாம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை தாங்கள் அறிந்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் அவரது மனைவிக்கு அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் சிலரை அடையாளங்காட்ட வேண்டுமென்றே வாகனத்தில் ஏறும் போது அவரது மனைவியிடம் கடத்திச்சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் கிளிநொச்சி வலய ஆசிரியர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு அண்மையில் ஜெனிவாவில் நடத்திய இருநாள் மகாநாட்டில் வவுனியா உட்பட 7 இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினரினதும், அவர்களுடன் செயற்படும் தமிழ் குழுக்களினதும் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட அங்கு சமூகமளித்திருந்த மனித உரிமை அமைப்புக்கள் பலவும் தெரிவித்திருந்தன.

thinakkathir.com

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு அண்மையில் ஜெனிவாவில் நடத்திய இருநாள் மகாநாட்டில் வவுனியா உட்பட 7 இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினரினதும், அவர்களுடன் செயற்படும் தமிழ் குழுக்களினதும் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட அங்கு சமூகமளித்திருந்த மனித உரிமை அமைப்புக்கள் பலவும் தெரிவித்திருந்தன.

இந்த முகாம்கள் மட்டும் தான் என உறுதியாக கூறமுடியாது

இவற்றை வரும் நாட்களில் சிங்களம் மூடி, படங்களை எடுத்து, ஊடகவியலார்களை அழைத்து ஒரு நாடகமும் ஆடும்

அதேவேளை புதிதாக இன்னும் பல முகாம்கள் முளைக்கும், இம்முறை பரம இரகசியமாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.