Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுடன் ஏட்டிக்குப் போட்டியாக சிறிலங்காவில் முதலீடு செய்யமாட்டோம் – யாழ்ப்பாணத்தில் இந்திய இராஜதந்திரி

Featured Replies

சீனாவுடன் ஏட்டிக்குப் போட்டியாக சிறிலங்காவில் முதலீடு செய்யமாட்டோம் – யாழ்ப்பாணத்தில் இந்திய இராஜதந்திரி [ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 05:47 GMT ] PUTHINAPPALAKAI Shyam_Saran_.jpgசிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டுக்குள் தான் தீர்வு காணப்பட வேண்டும், அதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவலாமே தவிர, தீர்வை வழங்க முடியாது என்று இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் ‘அயல் நாடுகளுடனான இந்தியாவின் உறவும், இந்திய – சிறிலங்கா நட்புறவுக் கொள்கையும்‘ என்ற தலைப்பில் உரையாற்றும் பாதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இரு பகுதியினரும் திறந்த மனதுடன் பேசி அதற்குத் தீர்வுகாண வேண்டும்.

தமிழர்களின் நலன்களில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு,கிழக்கில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, வீடமைப்புத் திட்டம் போன்றவற்றுக்கு இந்தியா உதவியளித்து வருகிறது.

Syam%20saran%20meeting.jpg

சிறிலங்கா அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமென நம்புகின்றேன்.

13வது திருத்தச்சட்டம் என்பது சிறிலங்கா அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம். அதை இந்தியா தயாரிக்கவும் இல்லை, அதில் இந்தியா தலையிடவும் முடியாது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு சிறிலங்காவுக்குள்ளேயே உருவாக்கப்பட வேண்டும்.

அது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதாக அமைய வேண்டும் என்பது முக்கியமானது.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.

இரு தரப் புக்களுக்குமிடையில் நற்பெயரை ஏற்படுத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிப்பதற்கான சாத்தியங்கள் ஏதும் காணப்பட்டால் அது பற்றியும் இந்தியா ஆராயும்.

இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு இப்போது வளர்ச்சியடைந்திருக்கிறது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்திய – சிறிலங்கா உறவின் முக்கியத்துவத்தை அதிகம் உணர்ந்தவராக இருக்கிறார்.

சிறிலங்கா தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில், சிறிலங்காவின் வடபகுதி முக்கிய பங்கு வகித்து வந்தது.

தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையிலான கப்பல் போக்குவரத்து இந்த இணைப்பின் பிரதான அம்சமாக இருந்தது.

வடக்கில் பலாலி விமான நிலையத்தை புனரமைக்கும் பணியில் இப்போது இந்தியா ஈடுபட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகப் பகுதி கடற்பரப்பில் காணப்படும் சேதமடைந்த கப்பல் கழிவுகளை அகற்றி துறைமுகத்தை துரிதமாகச் செயற்படச் செய்வதற்கும் இந்தியா உதவி வருகிறது.

இந்தியாவுக்கும், சிறிலங்காவின் வடபகுதிக்கும் இடையே காணப்படும் இத்தகைய இறுக்கமான தொடர்புகள் மூலம், எதிர்காலத்தில் இந்திய-சிறிலங்கா உறவில் சிறிலங்காவின் வடபகுதி குறிப்பிடத்தக்கதொரு பாத்திரத்தை வகிக்க முடியும்.

சிறிலங்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் அமைக்கத் திட்டமிடப்பட்டு பின்னர், கிடப்பில் போடப்பட்ட தரைவழிப்பாலம் அமைக்கும் திட்டத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இந்தியாவுக்கும், சிறிலங்காவின் வடபகுதிக்கும் இடையில் கடந்த காலத்தில் நிலவிய இறுக்கமான உறவுகள் மேலும் பலமடைவதற்கு தனுஸ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான இராமர் பாலம் விரைவில் அமைக்கப்பட வேண்டும்.

நான் இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த காலத்தில் இந்தப் பாலத்தை அமைப்பது குறித்து இரண்டு நாடுகளும் ஒரு இணக்கத்துக்கு வந்திருந்தன.

ஆனால், பின்னர் சிறிலங்காவின் வடக்கில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலையால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும்.

இந்தியாவின் உறுதித்தன்மைக்கு அண்டை நாடுகளுடனான அதன் உறவு மிகவும் முக்கியமானது.

இந்தியாவின் நில மற்றும் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், சிறிலங்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் சிறுபான்மை இனங்கள் சார்ந்த பிரச்சினைகள் இந்தியாவையும் ஒரு வகையில் பாதிக்கிறது.

இந்த நாடுகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் உறுதித்தன்மைக்கு அவசியமானது.

இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் முரண்பாடுகளும், பட்டினியும் நிலவும் போது, இவை எவற்றுடனும் தொடர்புபடாமல் ஒரு தீவு போல இந்தியா இருந்து விட முடியாது.

இந்தியாவின் பெரிய பரப்பளவும், அதன் சனத்தொகை உள்ளிட்ட பலமான அம்சங்கள் காரணமாகவும் அண்டை நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சம் கொள்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த நிலைமையை மாற்றி அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவைக் கட்டியெழுப்பவே இந்தியா பாடுபடுகிறது.

பொருளாதார ரீதியாகவும், ஏனைய பல வழிகளிலும் பலம்மிக்க ஒரு நாடாக விளங்கும் இந்தியா, தன்து சில அடைவுகளை அண்டை நாடுகளுடனும் பகிர்ந்து கொண்டு ஒரு கண்ணுக்குப் புலப்படாத இணை வட்டம் ஒன்றை அண்டை நாடுகளுடன் ஏற்படுத்த முனைகிறது.

சார்க் அமைப்பு தனக்குச் சவால் விடும் ஒரு அமைப்பு என்றே ஒரு காலத்தில் இந்தியா கருதியிருந்தது. ஆனால், சார்க் பற்றிய இன்றைய இந்தியாவின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது.

இதுபோன்று அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு புதிய மாற்றங்களுடன் வளர்ந்து வருகிறது.

தெற்காசியப்பிராந்தியத்தின் பூகோள அரசியலில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது.

சிறிலங்காவில் உள்ள சகல இன, மத மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும். இதற்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். உறுதியான நிலைத்து நிற்கக் கூடிய ஒரு சமாதானம் உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியா எமது உறவினர், சீனா எமது நண்பர் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளதையிட்டு எங்களுக்குப் பிரச்சினையில்லை. அவர் கூறியபடியே இருந்து விட்டுப் போகட்டும்.

நாங்கள் சீனாவுக்கு ஏட்டிக்குப் போட்டியாக முதலீடுகளையோ, அபிவிருத்தித் திட்டங்களையோ முன்னெடுக்க மாட்டோம். எம்மிடம் பலமும் உண்டு; சில பலவீனங்களும் உள்ளன.

அதேபோன்று சீனாவிடமும் சில பலங்களும் உள்ளன; பலவீனங்களும் உள்ளன. எனினும் சீனாவுடனான எல்லைத் தகராறு ஒரு பிரச்சினை தான் என்பதில் சந்தேகமில்லை.“என்று அவர் மேலும் கூறியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடன் ஏட்டிக்குப் போட்டியாக சிறிலங்காவில் முதலீடு செய்யமாட்டோம் – யாழ்ப்பாணத்தில் இந்திய இராஜதந்திரி [ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 05:47 GMT ] PUTHINAPPALAKAI Shyam_Saran_.jpgசிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டுக்குள் தான் தீர்வு காணப்பட வேண்டும், அதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவலாமே தவிர, தீர்வை வழங்க முடியாது என்று இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் ‘அயல் நாடுகளுடனான இந்தியாவின் உறவும், இந்திய – சிறிலங்கா நட்புறவுக் கொள்கையும்‘ என்ற தலைப்பில் உரையாற்றும் பாதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இரு பகுதியினரும் திறந்த மனதுடன் பேசி அதற்குத் தீர்வுகாண வேண்டும்.

தமிழர்களின் நலன்களில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு,கிழக்கில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, வீடமைப்புத் திட்டம் போன்றவற்றுக்கு இந்தியா உதவியளித்து வருகிறது.

ஆசியப் பிராந்தியத்தில், இந்தியாவின் தலைமைத்துவம், இலங்கைக்கு வழி காட்டுகின்றது !

DonkeysKilimanjaro1.jpg

இணைப்புக்கு நன்றிகள், நீலப்பறவை!!!

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் யாராவது போயிருந்தால் இந்தியா ஏன் தமிழர்களுக்கு ஆயுதப்பயிற்சி குடுத்தது எண்டு கேட்டிருக்கலாம்..! :unsure::rolleyes:

சீனாவுடன் ஏட்டிக்குப் போட்டியாக சிறிலங்காவில் முதலீடு செய்யமாட்டோம் – யாழ்ப்பாணத்தில் இந்திய இராஜதந்திரி

பிச்சைக்காரக் காட்டுமிராண்டிகளால் இது முடியாது என்று எல்லாருக்கும் தெரியும்.

யாழ் பல்கலைக்கழகத்துக்கு நல்ல பாதுகாப்பு போடவேண்டும். கண்ட கண்ட சொறி நாய்களெல்லாம் உள்ளே வந்து ஒப்பாரி வைக்குதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.