Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஆயுதங்களால் ஆளப்படும் நாடு“ – சிறிலங்கா பற்றி மலேசிய நாளேடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

parade.jpg

முப்பது ஆண்டுகளாக சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களால் நாடு சிதைவடைந்துள்ளது. அதன் நிறுவனங்கள் பெருமளவில் பலவீனமாக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா சுதந்திரமடைந்ததில் இருந்து மேற்கொள்ளப்பட்ட சிறந்த சாதனைகள் சில தூக்கி வீசப்பட்டுள்ளன.

இலவச சுகாதார பராமரிப்பு சேவை மற்றும் முதலாவது பட்டப்படிப்பு வரையான இலவசக் கல்வி முறைமை ஆகியவற்றை வழங்குகின்ற சிறிலங்காவின் சமூக ஆதரவு முறைமையைக் கற்றுக் கொள்வதற்காக 1960 களில் சிங்கப்பூர், தென்கொரியா போன்ற கிழக்காசிய நாடுகள், சிறிலங்காவுக்குச் சென்றிருந்தன.

இவ்வாறான கிழக்காசிய நாடுகள் சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக ஆதரவு முறைமையை ஒத்த முறைமைகளைத் தமது நாடுகளில் அறிமுகப்படுத்தி, தற்போது முன்னேற்றம் கண்டுள்ள அதேவேளையில், சிறிலங்காவின் சுகாதார மற்றும் கல்வி முறைமைகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

இன்று, பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனியார் பாடசாலைகளை நோக்கிச் செல்கின்றனர். இதனால் அரசாங்கப் பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வித் தரம் வீழ்ச்சியடையும் ஆபத்தைச் சந்தித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக்கூடங்கள் போன்றவற்றில் இடம்பெறும் அரசியல் தலையீடுகளால், கல்வி மற்றும் நிர்வாக செயற்பாடுகள் ஆழமாகப் பாதிக்கப்படுகின்றன.

ஆனால் மிக மோசமான சீரழிவுகள் நாட்டிலுள்ள ஜனநாயக அமைப்புக்களில் இடம்பெறுகின்றன.

பல பத்தாண்டுகளாக பல்கலாசார, பல் மதங்களைக் கொண்ட, நவீன ஜனநாயக நாடாக விளங்கிய சிறிலங்கா தற்போது, நீதித்துறை மீது மிகக்குறைந்த நம்பிக்கையைக் கொண்டுள்ள மக்கள் வாழ்கின்ற, சிறுபான்மையினர் தாம் இடர்களை எதிர்நோக்குவதாகக் கருதுகின்ற, மிகக் குறைந்த ஜனநாயக சுதந்திரத்தை வழங்குகின்ற ஒரு நாடாக மாறியுள்ளது.

எடுத்துக்காட்டாக, முன்னர் சிறப்பித்துப் போற்றப்பட்ட சிறிலங்கா காவல்துறையானது, 1970 களில் அரசியல் தலையீடு காரணமாக நிறுவனமயப்படுத்தப்பட்டதில் இருந்து இதன் நற்பெயரும் பாதிப்படையத் தொடங்கியது.

சிறிலங்கா காவல்துறையினர் தமக்கான பதவி உயர்வைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளிடம் பரிந்துரைக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால் அரசியல் தலையீடு மேலும் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

சிறிலங்கா அரசு தனக்கெதிராக எழுந்த தமிழ்ப் புலிப் பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராட வேண்டிய தேவை ஏற்பட்ட போது அது உள்நாட்டுப் போராக மாறியது.

இதனால், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்காவின் சில பிரதேசங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதன் மூலம் ஏக கலாசாரத்தைக் கொண்ட இராணுவ மயமாக்கப்பட்ட 'அரசு' ஒன்றை உருவாக்கிக் கொண்டார். இங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனும் விடுதலைப் புலகளின் தலைவர் பிரபாகரனின் ஆட்சிக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது.

இந்தத் தீவிரவாத அமைப்பானது பின்னர் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்ட, சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்திடமும், புலிகளுடன் போரிடுதல் அல்லது சமரசம் செய்தல் என்ற இரு தெரிவுகள் இருந்தன.

சமரசப் பேச்சுக்கள் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், அவற்றை முறியடிப்பதற்கான முயற்சியில் புலிகள் ஈடுபடுவர்.

ஆனால் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தற்போதைய அரசாங்கம் சமரச முயற்சியை மேற்கொள்ளாது புலிகளை யுத்தத்தின் மூலம் வெற்றிகரமாக தோற்கடித்துள்ளது.

சிறிலங்காவில் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் ஊடக சுதந்திரம் என்பது மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஒவ்வொருவரும் யுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் அல்லது ஊழல் மோசடி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துபவர்கள் நாட்டின் துரோகிகளாக கருதப்பட்டனர்.

சிறிலங்கா அரசியலில் மிக முக்கிய பங்கு வகித்த சிங்கள மேலாதிக்கவாதிகள் நாட்டின் மத்திய அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டனர்.

தற்போது சிறிலங்காவில் யுத்தம் ஓய்ந்து விட்டது. ஆனால் ஊடகங்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

அத்துடன் அரசியல் விடயங்கள் தொடர்பாக வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

பலம் பொருந்திய 400,000 இராணுவப்படை மட்டுமே தற்போது சிறிலங்காவில் சமாதானம் ஏற்பட்டுள்ள போதிலும் இங்கே மிகப் பெரியளவில் எஞ்சியுள்ள ஒன்றாக உள்ளது. அதாவது ஒவ்வொரு 50 சிறிலங்கர்களுக்கும் ஒரு ஆயுதம் தரித்த இராணுவ வீரன் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சிறிலங்காவில் பாதாள உலகக் கும்பல்கள் அதிகளவில் செயற்படுகின்றனர். இதனால் ஆயுதங்களே இந்நாட்டைக் கட்டுப்படுத்துவதாக உள்ளன.

இப்பாதாள உலகக் குழுக்கள் ஆயுததாரிகளால் தலைமை தாங்கப்படுகின்றன. சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களே இக்குழுக்களில் அதிகம் உள்ளனர்.

சிறிலங்காவில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் மூலம் இங்கு நடைமுறையிலிருந்த நிறுவகக் கட்டமைப்புக்கள் சிதைவடைந்துள்ளன என்பது மிகத் தெளிவாகியுள்ளது.

சிறிலங்காவின் முன்னணி அரசாங்க சார் தொழிற்சங்கப் பிரதிநிதியும், சிறிலங்கா அதிபரின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவின் பாதுகாவலர் ஒரு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இதனை சிறிலங்கா அரசு எவ்வாறு கையாள முயற்சிக்கின்றது என்பதை மக்கள் தற்போது உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற மாநகரசபைத் தேர்தலின் போது சிறிலங்கா காவற்துறையினர் இவர்கள் இருவரும் பொது இடத்தில் மோதலில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்விருவரினதும் மெய்ப்பாதுகாவலர்களிற்கிடையில் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. ஆளும் அரசாங்கத் தரப்பிற்குள் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்களைக் கைது செய்வதா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக சிறிலங்கா காவற்துறையினரால் தீர்மானிக்க முடியவில்லை.

இதில் தலைக்குள் துப்பாக்கி ரவை ஊடறுத்துள்ளதால் அதனை அகற்றுவதற்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்காக துமிந்த சில்வா, சிங்கப்பூரிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவலை, கோபம், வேதனை போன்ற உணர்வுகளைச் சுமந்து நிற்கும் சிறிலங்கர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளைத் திரும்பிப் பார்ப்பதுடன், மீண்டும் சிறிலங்காவை எவ்வாறு பழைய நிலைக்குக் கொண்டு வரமுடியும் எனவும் சிந்திக்கின்றார்கள்.

இதுவே சிறிலங்கர்களின் வசந்த காலமாக அமையலாம்.

*New Straits Times ஊடகத்தில் அர்ஜுன ரணவான எழுதிய இந்த கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்யபாரதி‘

http://www.puthinapp...?20111117105056

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வலையத்தள காலத்திலும் முப்பது வருடம் லேட்டா செய்தி போட்டதற்கு ஒரு லா போடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.