Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இனக்கொலையை வடிவமைக்கும் இந்தியா - நோர்வே அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இனக்கொலையை வடிவமைக்கும் இந்தியா - நோர்வே அறிக்கை

தோல்வியடைந்த இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையில் ஆசியாவின் வல்லரசுச் சக்திகள் ராணுவ ரீதியான தீர்வை உள்நாட்டுப் பிணக்குகளுக்கு முன்வைத்ததன் காரணமாகவே தமது சமாதான நடவடிக்கை இலங்கையில் தோல்வியடைந்ததாக நோர்வேக்குழு தெரிவித்திருக்கிறது.மேலும் இவ்வாறான போக்கு நோர்வே தலமையிலான பிற்காலத்தில் நடக்கவிருக்கும் எந்தவொரு சமாதான நடவடிக்கைகளையும் முற்றான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்று அது அஞ்சுவதாகக் கூறியிருக்கிறது. தமிழர் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இனக்கொலையின் சுத்திரதாரியாக இந்தியாவை நேரடியாக இந்த அறிக்கைச் சுட்டிக்காட்டவில்லையாயினும் கூட , இந்த அறிக்கையின் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதின்படி நோர்வேயில் நடந்த கலந்துரையாடலில் இனக்கொலையினை நடத்தி முடித்ததில் இந்தியாவே பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளதை இந்த அறிக்கை நாசுக்காகக் கூறியிருக்கிறது. இனக்கொலையின் பின்னரான எழுச்சியடைந்துவரௌம் சிங்களத் தேசியவாதம் பற்றிக்கவலைப்படும் இந்த அறிக்கை, தமிழர்களை "உள்நாட்டுத் தீர்வொன்றிற்கே" செல்லும்படி அறிவுறுத்துகிறது.

சமமற்ற உலக ஒழுங்கில் சிங்களத் தேசியவாதம் சர்வதேசத்தின்மீது கொண்டுள்ள அதிகாரத்துடன் ஒப்பிடும்போது, இனக்கொலையின் பின்னரான தமிழ்த் தேசியம் என்பது சர்வதேசத்தின்மீது பலமான அழுத்தத்தை இதுவரை கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

சிலவேளை புது தில்லியும், தமிழகத்துத் தலைவர்களும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் மீது அதிகரித்துவரும் அபிமானத்தை தகர்த்தெறிந்துவிடுவார்கள் என்று சர்வதேசம் எண்ணியிருக்கலாம்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வெனும் தான் நடத்திவந்த சமாதான நடவடிக்கைகள் ஒன்றில் சர்வதேச தலையீட்டினாலோ அல்லது ராணுவ ஆதிக்கத்தினாலோ தோல்வியடைந்துள்ளதென்பதை இந்த அறிக்கை மறைமுகமாகவோ அல்லது அப்பாவித்தனமாகவோ ஒத்துக்கொள்கிறது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளானா தீர்வென்பதின் தோல்வியென்பது எமக்கு முன்னாலுள்ள மாற்றுத் தீர்வுகளை நன்றாகச் சுருக்கியிருக்கிறது. இனி வார்த்தை ஜாலங்களுக்கு இடமில்லை. ஒன்றில் தனியான நாடு அல்லது முற்றான ஈழத்தமிழரின் அழித்தொழிப்பு என்பவற்றில் ஒன்று நிச்சயம் இனிவரும் காலத்தில் நடக்கப்போகிறது.

நோர்வே, இந்தியா சர்வதேச சமூகம் என்கிற மூன்று பேருக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தாலும் கூட, அவர்கள் மகிந்தவின் "உள்நாட்டுத் தீர்வென்பதை" வலியுறுத்துவதன் மூலம் மேலே சொல்லப்பட்ட இரண்டு தெரிவுகளில் ஒன்றான முற்றான ஈழத்தமிழரின் அழித்தொழிப்பிற்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றன.

தமிழ்நெட்டில் வந்திருக்கும் இந்த அறிக்கையின் வடிவத்தைப் படியுங்கள், இந்தியா செய்த முழுத்துரோகமும் புரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு !

இனக்கொலை தனது கண்முன்னே நடப்பதைப் பார்த்திருந்து அதனைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், இனக்கொலையின் பின்னரான சர்வதேச ரீதியிலான விசாரணைகள், தீர்மானங்கள் போன்றவற்றிற்குத் தொடர்ச்சியான இடையூறாக இருந்துவருவதாலும் இனக்கொலயின் பிரதான சூத்திரதாரி இந்தியாதான் என்று அனைவருனம் இன்று கை நீட்டுகின்றனர்.

நோர்வேயில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் சமாதான அமைப்பின் தலைவரின் கருத்துப்படி, இந்தியா ஒருபோதுமே ஈழத்தமிழரின் போராட்டத்தை நியாயமானது என்று ஏற்றுகொண்டிருக்கவில்லை, அவர்கள் புலிகளை முற்றாகப் புறக்கணித்தார்கள்.

அந்த அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டதன்படி, இந்தியா ஈழத்தமிழர்கக்கான தீர்வாக சுதந்திரத் தனிநாட்டை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், சமஷ்ட்டி முறையிலான தீர்வு முதல் தனிநாட்டிற்கு மாற்றாக புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அரசுவரை அனைத்தையுமே முற்றாக ஒதுக்கித் தள்ளியிருந்தது.

சமஷ்ட்டி அமைப்பிற்கும் மிகக் குறைந்த தீர்வொன்றைத் திணிப்பதிலேயே இந்தியா தொடர்ந்தும் ஆர்வம் காட்டி வந்தது. 1987 ஆம் ஆண்டின் இந்தியப்படை ஆக்கிரமிப்புக் கூட சமஷ்ட்டிமுறைத் தீர்விலும் மகுறைந்த தீர்வொன்றிற்குத் தமிழரை வற்புறுத்துவதன் நோக்கத்திலேயே நடத்தப்பட்டது.

"புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சித் தீர்வென்பது சிங்கள்வராலும், முஸ்லீம்களாலும், அரசினாலும் இந்தியாவினாலுமளொரு பயங்கரமான விடயமாகவே பர்ரக்கப்பட்டது. இடைக்காலத் தீர்வில் இறுதியாக அமைந்திருந்த சர்வஜன வாக்கெடுப்பென்பது இறுதியில் தனிநாட்டிற்கே வழிவகுக்கும் என்று எல்லோரும் அஞ்சினார்கள்".

"நோர்வேயின் சமாதான நடவடிக்கை நிச்சயமாகத் தோல்வியில் முடிவடையும் என்கிற காரனத்தினாலேயே இந்தியா அதனை ஆதரித்தது. இந்தச் ச்மாதான நடவடிக்கையின் தீர்வுகள் எப்படி அமைய வேன்டுமென்பதில் இந்தியா மிகவும் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தது. 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாக வடக்குக் கிழக்கிற்கு எந்தவித அதிகாரங்களும் கொடுக்கப்படுவதை இந்தியா முற்றாக எதிர்த்தது. அதுமட்டுமல்லாமல் புலிகள் தீர்வின் எந்தப் பகுதியிலும் அங்கத்தவர்களாக இருப்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது".

ஈழத்தமிழர்க்கெதிரான அரச மயப்படுத்தப்பட்ட முற்றான கலாச்சார, இன ரீதியிலான படுகொலை அமைதியாக நடந்துவருவதை மவுனமாக ஆதரித்துக்கொண்டே, அது தமிழர்களை உள்நாட்டுத் தீர்வொன்றிற்குச் செல்லுமாறு வற்புறுத்துகிறது.

இனக்கொலையினால் அழிக்கப்பட்டு வரும் ஈழத்தமிழர்களுக்குத் தீர்வாக சுதந்திரத் தனிநாடு உருவாக்கப்படுவதை தான் எதற்காக இதுவரை தடுத்து வருகிறேன் என்று நியாயப்படுத்துவதற்கு தர்க்கரீதியான அல்லது சித்தாந்த ரீதியான எந்தக் காரண்த்தையும் இந்தியா இதுவரை கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஈழத்தமிழர்க்கு சுதந்திரம் கிடைத்துவிடக்கூடாதென்பது சாதாரண இந்திய மக்களின் விருப்பமாக நிச்சயம் இருக்காது. அதேபோல அந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் வாதிகளினது விருப்பமாகவும் அது இருக்கப்போவதில்லை. ஆனால் "இந்திய ஜனநாயகத்தின்" ஒரு பகுத்திக்குள் மறைந்திருக்கும் ஒரு குழுவே இந்திய மக்களின் பெயரினைப்பாவித்து இந்த அடாவடித்தனத்தைத் தொடர்ந்தும் செய்துவருகிறது.

அரசியல் வாதிகளைப் போலப் பேசும் வெளியுறவுச் செயலாளர்களையும், பாதுகாப்பு ஆலோசகர்களையும் இந்திய மக்கள் தொடர்ந்தும் சகித்துக்கொண்டே வருகிறார்கள். அணமியில் வங்கதேசத்துடனான பினக்கு ஒன்றில் தமது மாநிலமான மேற்கு வங்கத்தின் விருப்பிற்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது என்று அதன் வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் கூறியிருந்தார். ஆனால், தனது இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்கள் ஆதரவுடன் பாராளுமறத்தில் நிறைவேற்றப்பட்ட போர்ர்கற்றங்கள் மீதான விசாரனைகளுக்கான கோரிக்கையை முற்றாக உதாசீனம் செய்து, அண்மையில் அவுஸ்த்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் கூட்டத்தில் போர்க்குற்றவாளி மகிந்தவின் சார்பாக போர்க்குற்ற விசாரணைகளுக்கான தனது முற்றான எதிர்ப்பை அவர் காட்டியிருந்தார்.

"சர்வதேச சந்தையில் இந்தியா உள்நுழையும் வேகத்தின் முன்னால் ஈழத்தமிழரின் துயரங்கள் தமிழ்நாட்டில் மறக்கப்பட்டு விட்டன" என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் நடைபெற்ற விதமும் இந்தியாவின் பங்களிப்பும் - நோர்வே அறிக்கையின் பார்வையில்

2004 இல் காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்தவுடன் இலங்கைக்கு ராடர்களை இலவசமாக வழங்குகிறது.

புலிகளுடனான முரண்பாடென்பது இலங்கைக்கான ரணுவ உதவியாக மாற்றம் பெறுகிறது.

இலங்கை பாக்கிஸ்த்தானிடமிருந்து விமானப்படை உதவியையும், இந்தியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து இலத்திரனியல் மற்றும் உளவுத்தகவல்களையும் பெற்றுக்கொள்கிறது.

புலிகளின் ஆயுதக் கப்பலகளை இந்தியாவின் கடற்படை உதவியுடனும், அமெரிக்க உளவுத்துறை உதவியுடனும் வழிமறித்து இலங்கை அழிக்கிறது.

புலிகளுக்கெதிரான போரில் இந்தியா முக்கியமான பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதுடன் இலங்கை சீனா போன்ற நாடுகளிடமிருந்தும் ராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது. சீனாவை தனது பரம வைரியாக தனது மக்களுக்குக் காண்பித்தாலும் கூட, இந்தியா இலங்கையை சீனாவின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது.

இந்திய ஆயுதங்கள் தமிழர்க்கெதிராகப் பாவிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் எதிர்ப்புத் தோன்றலாம் என்பதற்காக ஆயுதங்களை நேரடியாக வழங்க முடியாது என்று வெளியில் கூறினாலும் கூட அது இலங்கை வேறுநாடுகளிலிருந்து கனரக ஆயுதங்கள் வாங்குவதை ஒன்றில் ஊக்குவித்தது அல்லது துணைபோனது.

"இந்திய துப்பாக்கி ரவைகள் தமிழர்கள் மேல் பாய்வதை நாங்கள் விரும்பவில்லை" என்று ஒரு இந்திய அதிகாரி கூறினாலும் கூட,பாவர்கலை அழிப்பதற்கு ராடர்கள், உளவுத்தகவல்கள் என்று இந்தியா தொடர்ந்தும் உதவி வந்தது. இலங்கை தமது கையை விட்டு நழ்விப் போய்விடும் என்பதற்காகவே சீனா , பாக்கிஸ்த்தான் போன்ற நாடுகளைக் கூட இலங்கை சேர்த்துக்கொள்வதை தாம் ஊக்குவித்ததாக ஒரு இந்திய உயரதிகாரி இந்த சமாதானக் குழுவிடம் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

இனக்கொலைக்கான போர் உக்கிரமடைந்து வருகையில் இந்தியா போரை நிறுத்தச் சொல்லி இலங்கையிடம் ஒருபோதுமே கேட்கப்போவதில்லை என்பதை தாம் அறிந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளை அழிப்பதற்கான போரை இந்தியா தொடர்ந்தும் ஆதரித்து வந்தாலும் கூட அதனால் இந்தியாவில் ஏற்படப்போகும் அரசியல் ரீதியான தோல்விபற்றியும் தாம் யோசிக்கத்தொடங்கியதாக அந்த அதிகாரி சமாதானக் குழுவிடம் தெரிவித்தார். தமிழர் மீதான போரஇ முற்றாக ஆதரித்துவந்தாலும் கூட அதை வெளிப்படையாகச் சொல்வதையோ அல்லது ஏற்றுக்கொள்வதையோ இந்தியா தொடர்ந்தும் மறுத்தே வந்திருந்தது.

தமிழரைக் காக்க வேண்டும் என்று உதட்டளவிலும், புலிகளை முற்றாக அழித்தொழிக்கவேண்டும் என்று கொள்கையளவிலுமாக இந்தியா ஒரு கபடியாட்டத்தை ஆடிக்கொண்டிருந்தது.

இந்த இனவழிப்போரில் இந்தியாவின் செல்வாக்கென்பது எதை எதைச் செய்தார்கள் என்பதைவிட எதை எதை செய்யத் தவறினார்கள் என்பதினாலேயே விலங்கிக் கொள்ளப்படமுடியும் என்றும் அந்த சமாதான ஏற்பாட்டளர் கூறினார். "இந்தியாவின் அசாத்திய மவுனமே போரின் முக்கிய உந்துசக்தியாக மாறியிருந்தது "

.

நன்றி இரகுநாதன்.

நோர்வே இந்தியா மீது குற்றம் சாட்டி, ஒரு நாடே ஒரு சிறுபான்மை இனத்தை அழித்துள்ளது என கூறியுள்ளது. இந்த இடத்தில் கூட்டமைப்பு இந்த அறிக்கையை எமது தாயக மக்களின் அரசியல் தீர்வுக்கு ஒரு ஆயுதமாக பாவிக்கவேண்டும், இந்தியாவை தீர்வுக்கு சிங்களத்தை சம்மதிக்க வைக்கவேண்டும்.

அதேவேளை புலம்பெயர் மக்கள் இந்த அறிக்கை மூலம் அடுத்த ஐ.நா. மனித உரிமை தொடரில் ஆதரவு சேர்க்க வேண்டும். இந்தியா இல்லை வேறு யாரும் ஊடாக சிங்களம் ஆதரவு சேர்க்கமுடியாத நிலையை உருவாக்கவேண்டும்.

அதேவேளை இந்தியா செய்த - செய்யும் அநியாயங்கள் ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமாதான நடவடிக்கையை இந்தியா கையாண்டது எப்படி - நோர்வே அறிக்கை

அறிக்கையின்படி இந்தியாவும் அமெரிக்காவுமே இந்த சமாதான நடவடிக்கைகளில் முக்கிய பங்குதாரர்களாக இருந்திருக்கிறார்கள். பா.ஜ.க ஆட்சியில் தில்லியில் வெளியுறவுச் செயலர், பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உளவுதுறை ரோ உடனான சந்திப்புக்களின்போது சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட அது விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றபோதிலும் எட்டித் தொடுமளவு தூரத்திலிருக்கவே அது விரும்பியது.

சமாதானப் பேச்சுக்களதி தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக முன்னால் இந்தியத் ராணுவ அதிகாரி சதீச்ஜஹ் நம்இயாரை ஆலோசகராகப் போடுவதாக முடிவெடுக்கப்பட்டது. இவர் உயர் பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக நீக்குதல், புலிகளின் ஆயுதங்களைப் படிப்படியாகக் களைதல் போன்றவற்றிற்கான வரைபை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

ஆரம்அத்தில் சமாதான நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பென்பது சுவாரசியமற்றறதாகவும், எந்தவித பொறுப்புகளுக்கும் உடன்படாமலும் இருந்தது. நோர்வேயை அவர்கள் ஒரு சவாலாகப் பார்க்கவில்லை என்பதோடு சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடவும் அதிக நாட்டம் காட்டவில்லை. அவர்களைப் பொறுத்தவரையிமல், சரி செய்வதைச் செய்யுங்கள், என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தது.

ஆனால் அங்கேயும் ஒரஉ பிரச்சினை இருந்தது. நோர்வே புலிகளுக்கு சம அந்தஸ்த்துக் கொடுப்பதை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இலங்கையில் ஜப்பானின் செல்வாக்கை இந்தியா எதிர்க்காத போதிலும், அதிகளவில் அரசியல் ரீதியாகத் தலையிடுவதை இந்தியா விரும்அவில்லை. அவர்களைப் பொறுத்தவரை யசூசி அக்காசி தேவையற்ற ஒருவராகவே கணிக்கப்பட்டார்.

கடற்புலிகளும், அவர்களது வர்த்தகக் கப்பலகளும் புலிகளைப் பொறுத்தவரை மிக முக்கியமாக இருந்தாலும் கூட அரசாங்கத்தைப் பொறுத்தவரை கடலில் ஒரு விட்டுக்கொடுப்பிற்கு வர முடியவில்லை. இலங்கைக் கடற்படை, சந்திரிக்கா மற்றும் இந்தியா ஆகிய மூவரும் கடற்புலிகளின் அங்கீகாரத்தை கடுமையாக எதிர்த்ததினால், சமாதான உடன்படிக்கையிலிருந்த இந்தச் சரத்து செயலற்றதாக மாற்றப்பட்டது.

ஒரு பலமான சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அமைவதை இந்தியா முற்றாக எதிர்த்தது.

நோர்வே அறிக்கையின்படி, கருணாவின் பிளவு இந்தியாவின் பலமான ஆதரவைப் பெற்றுக்கொண்டது. முதல்த்தடவையாக சனாதிபதி சந்திரிக்காவின் அதிகாரத்தையும் மீறி சிங்கள ராணுவம் கருணா விடயத்தில் தன்னிச்சையாகச் செயல்பட்டது. கருணா இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டதுடன் இந்து ராமின் வாசஸ்த்தலத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தான். கருணாவை அங்கீகரிக்கவேண்டாம் என்று இந்தியாவைக் கோருமாறு ஐக்கிய தேசியக் கட்சியூடாகவும், மக்கள் சுதந்திர முண்ணணி ஊடாகவும் நோர்வே அழுத்தங்களைக் கொடுத்தது.

பேச்சுக்கள் தேக்கமடைய சமாதானப் பேச்சுகளுக்கான சர்வதேச அழுத்தம் என்பதும் அற்றுப்போக இந்தியா எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதை மறுத்து வந்தது.

ராஜபக்‌ஷ நோர்வேயை நிராகரித்ததோடு, இந்தியா அல்லது ஐ.நா போன்ற அமைப்புகளைத் தலையிடுமாறு கேட்கத் தொடங்கினார்.

2007 வரை இந்தியாவை தீர்க்கமான பங்களிப்பொன்றினை சமாதானப் பேச்சுக்களில் வழங்குமாறு நோர்வே கேட்டுக்கொண்டாலும் கூட அது தொடர்ந்தும் நிராகரித்தே வந்தது.

சமாதானக் குழுவைப் பொறுத்தவரை, இந்தியா மனிதவுரிமை மீறல்கள், ஜனநாயக மீறள்கள் போன்றவற்றினைப் பற்றி இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதை விரும்பவில்லை என்றும், அவ்வாறு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் இலங்கை சீனாவை நோக்கிச் சென்றுவிடும் என்று அது அஞ்சியதாகவும் கூறப்பட்டிருக்கிற்து.

ஆரம்பத்தில் உதட்டளவில் சமாதானப் பேச்சுகளுக்கான ஆதரவை இந்தியா காட்டியிருந்தாலும் கூட, மகிந்த அரசாங்கத்தின் ஆட்சியுடன் அதற்கு முற்றிலும் மாறான போரின்மூலமான தீர்வு என்பதை முன்னிறுத்தத் தொடங்கியது. போரின்மூலமாக புலிகளை முற்றாக அழித்தல் என்கிற இந்தியாவின் புதிய தீர்வினால் சமாதானப் பேச்சுக்கள் முற்றான குழப்ப நிலையை அடைந்தன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பங்களிப்புப் பற்றித் தவறான கருத்தை முன்வைக்க எத்தனித்த எரிக் சொகெயிம்

"இந்தப் பேச்சுகள் சில மாதங்களில் முற்றுப்பெற்றுவிடும் என்கிற எதிர்பார்ப்புடனேயே நாம் ஈடுபடத் தொடங்கினோம். ஆனால் பொறுமை காக்கும்படி இந்தியாவினால் கேட்கப்பட்டோம்."உங்களால் பொறுமை காக்க முடியாவிட்டால் இங்கிருந்து சென்றுவிடுங்கள், நீங்கள் இன்னும் பிரச்சினையைச் சிக்கலாக்குவீர்கள், இந்தப் பிரச்சினைத் தீர குறைந்தது 10 வருடங்களாவது ஆகலாம். நாங்கள் இதுவரை பொறுமை காத்தது போல நீங்களும் பொறுமையாக இருங்கள்" என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்".

"இந்தியா பேச்சுவார்த்தை நடந்த காலம் முழுவதிலும் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இந்தியாவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கவில்லை என்பதால், நானும் மிலிந்தவும் அடிக்கடி இந்தியவுக்குச் சென்று வந்தோம். எத்தனை முறை நான் தில்லி விமான நிலையத்தில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்தேன் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் ஒரு சிறுவிடயம் கூட பேச்சுகளில் நடக்கவில்லை.சிலவேளைகளில் அவர்களுக்கு உள்ளூர விருப்பம் இருக்கவில்லை என்றாலும் கூட சம்மதம் தெர்வித்தார்கள். இதெல்லாம் ஏன் நடக்கிரதென்பது பற்றி எவருக்கும் கேள்வியிருக்கவில்லை".

"நாங்கள் இலங்கையில் செயற்படத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இலங்கையில் மிக அதிகமாகச் செல்வாக்குச் செலுத்தும்வெளிநாட்டுச் சக்தி இந்தியா தான் என்பதை அறிந்துகொண்டோம். அமெரிக்க முக்கியமானதென்றாலும் கூட இந்தியாதான் அங்கே எல்லாம். இலங்கை இந்தியாவைப் பொறுத்தவரை மிக முக்கிய விடயம், அமெரிக்காவைப் பொறுத்தவரை இன்னொரு விடயம் மட்டுமே. இலங்கைக்காக இந்தியாவுடன் பகைத்துக்கொள்வதை அமெரிக்கா எப்போதுமே விரும்பியிருக்கவில்லைபீலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நகர்வு என்னவோ அதையே அமெரிக்காவும் பின்பற்றியது. இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் சர்வதேசக் கண்காணிப்புக் குழுவில் யார் யார் இடம்பெறவேண்டும், எவரெவர் இடம்பெறக்கூடாது என்பதைக்கூட இந்தியாவே தீர்மானித்தது. அவர்கள் தயாரித்த பட்டியலின்படியே நாங்கள் ஆட்களை அமர்த்தினோம்".

"பேச்சுக்களின் எந்தக் கட்டத்திலும் இந்தியாவுக்கு செய்திகள் அனுப்பபடாமல் இருக்கவில்லை என்பதை என்னால் உறுதியாக்ச் சொல்லமுடியும். மிலிந்த கூட இதை உறுதிப்படுத்துவார். பலர் நம்இயிருந்ததைக் காட்டிலும் இந்தியா சமாதான நவடிக்கைகளில் மிக ஆளமாக ஈடுபட்டிருந்தது. புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையே சில ரகசிய சந்திப்புக்களும் நடைபெற்றன. நானும் அவற்றில் கலந்துகொண்டேன். அவை நடைபெற்றதை மட்டுமே சொல்லமுடியுமே தவிர பேசப்பட்டவையும், ஏனைய விடயங்களையும் என்னால் சொல்ல முடியாது. பேச்சுக்களின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தியாவுடன் விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. ஆரம்அத்தில் அவர்கள் ஆதரவாக காட்டிக்கொண்டாலும் 2008 இல் அனைத்துமே மாற்த்தொடங்கினறாரம்அத்தில் போர் மூலமான தீர்வொன்று சாத்தியமில்லை என்று சொல்லிவந்த இந்திய வெளிவிவகார அமைப்பு, உளவு அமைப்பு மற்று அதிகாரிகள் 2008 இன் பிற்பகுதியில் ராணுவரீதியான தீர்வொன்று சாத்தியம்தான் என்று நம்பத் தொடங்கினார்கள்".

"நான் இந்திய உளவுத்துறையுடன் மிக மிக நெருக்கமாக்ச் செயற்பட்டு வந்தேன். பேச்சுகளின்போது பலமுறை அவர்களைச் சந்தித்தேன். 2008 இறுதிவரை ராணுவத்திர்வொன்று சாத்தியமென்பதை எந்த அதிகாரியும் என்னிடம் நாசுக்காகக் கூடச் சொல்லியிருக்கவில்லை. ஆனால் சிறிது சிறிதாக நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அரசாங்கம் ராணுசவ ரீதியிலான வெற்றியொன்றை அடையமுடியும் என்கிற பலமான நம்பிக்கை வளரத் தொடங்கியது. அதுவரை நாங்களோ, அமெரிக்கவோ, இலங்கையோ ராணுவரீதியான வெற்றியென்பது சாத்தியமில்லை என்றே நம்பியிருந்தோம். ஆனால் எல்லமே மாறதொடங்கியது".

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பா. ஜ. க மற்றும் காங்கிரஸ் அர்சுகள் நடந்துகொண்ட விதம்

சமாதானப் பேச்சுக்களைப் பொறுத்தவரை பாரதீய ஜனதாக் கட்சி எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை. சொல்கெயிமினால் சொல்லப்பட்ட புலிகள் - இந்திய சந்திப்பு பா.ஜ. க காலத்திலேயே நடைபெற்றது.

ஆனால் சோனியா தலமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் இலங்கைக்கு உதவத் தொடங்கியது. அறிக்கையின்படி இந்தியாவின் ராணுவ வெற்றி மூலமான திர்வெனும் போக்கு நோர்வே தலமையிலான சமாதான நடவடிக்கைகளைக் குழப்பமடையச் செய்ததுடன் ஆசியாவின் பிணக்குகளுக்கான தீர்வாக இனக்கொலை மாதிரியை இந்திய காங்கிரஸ் தலமையே முதன் முதலில் வடிவமைத்ததாகச் சுட்டிக் காட்டுகிறது.

2009 இன் ஆரம்பத்தில் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றியுடன் போரின் போக்கு மாறலாம் என்கிற கணிப்புக்கூட இருந்தது. ஆனால் அவை எதுவுமே நடக்கவில்லை. அறிக்கையின்படி, இந்திய அமைச்சர் சிதம்பரம் அவர்களால் ஒரு அறிக்கை தயரிக்கப்பட்டு அதைப் புலிகள் ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டிருக்கிறது. அதில் நிபந்தனைகள் ஏதுமின்றி புலிகள் ஆயுதங்களைக் கிழே வைக்கவேண்டும் என்கிற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கை வெளியே கசிந்து வைக்கோவின் கைகளுக்குக் கிடைத்ததாகவும் , அவரே இதனை உதாசீனம் செய்யும்படி புலிகளைக் கோரியதாகவும், பாரதீய ஜனதா வெற்றி பெற்று புலிகளை மீட்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்று புலிகளிடம் கூறியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையின் பங்கு

மேலும், இந்த அறிக்கை ராஜீவ் கொலையையும், ராணுவ ரீதியான தீர்வையும் இணைத்துப்பார்க்க நினைக்கிறது.

"1987 ஆம் ஆண்டின் கசப்பான அனுபவங்களாலும், அதன் பின்னரான ராஜீவ் கொலையினாலும் புலிகளை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று இந்தியா விரும்பியது. 2004 இல் ஆட்சிக்கு வந்த ராஜீவின் விதவைசோனியா தலமையிலான அரசு தமிழ்நாட்டில் மங்கிப் போகத்தொடங்கியிருந்த ஈழத்தமிழர் ஆதரவைத் தருணமாகப் பாவித்து ராணுவ ரீதியிலான தீர்வை முன்னிறுத்தத் தொடங்கியிருந்தது. தமிழர்களுக்குத் தீர்வொன்று வேண்டுமென்று உதட்டளவில் மட்டுமே சொல்லிக்கொண்டு, இல்ன்கை அரசு செடய்துவந்த ராணுவ நடவடிக்கையையும் அது ஆதரித்தது.

சொல்கெயிமின் கருத்துப்படி, " ரஜீவைக் கொன்றது மிகப்பெரிய தவறு, உங்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆதரவு வேண்டுனமென்றால் அமெரிக்க சனாதிபதியைக் கொல்வீர்களா? யார்தான் அதனை ஏற்றுக்கொள்வார்கள்? இந்தியாவே புலிகளுக்கான ஆதரவுச் சக்தியாக இருந்தபோது அந்த நாட்டின் பிரஅல பிரதமரை ஏன் கொன்றார்கள் ?".

அரசாங்கத்தாலும் கூட கொலைகள் இடம்பெற்றிருக்கும்போது நீங்கள் புலிகளை மட்டுமே குற்றம் காண்பது ஏன் என்று கேட்கப்பட்டதற்கு, அவர், " அரசில்லாத ஒரு அமைப்பு ஒரு அதிபரைக் கொல்வதென்பது மிகவும் அரிதான விடயம், அமெரிக்க அதிபரையோ, சீன அதிபரையோ, அல்லது எந்தவொரு நாட்டு அதிபரையோ ஒரு பயங்கரவாத அமைப்பு கொல்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அது நியாயமற்றது என்பதுடன் அடிமுட்டாள்த்தனமானதும் கூட, இந்தியா புலிகளுக்கு ஆதரவானது என்கிறபோது அதன் தலைவரை அவர்கள் ஏன் கொன்றார்கள்?" என்று மீண்டும் கேட்டார்.

சொல்கெயிம் சொல்வதுபோல ராஜீவின் கொலைதான் இனக்கொலை நடத்தப்பட்டதற்கு முழுக் காரணம் என்றால் அந்த இனக்கொலையின் முக்கிய பொறுப்பாளி இந்தியாதான் என்கிறது வெளிப்படையாகிறது.

கொலை நடந்த சாட்சியங்களே இன்னும் தெளிவில்லாத நிலையிலும், 1987 இல் தமிழரின் ரத்தக்கறையத் தனது கையில் பூசிக்கொண்ட ஒருவரினதும் கொலையினால்த்தான் ஒரு ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் இனக்கொலையை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நடத்தி முடித்தது என்றால் அதை நம்புவது கடிணம்.

சரி, ராஜீவின் கொலைதான் இனக்கொலை நடத்துவதற்கான காரணியாக இந்தியாவுக்கு இருந்திருந்தால், இனக்கொலை முடிந்தபின்னரும், இந்தியா செயற்பட்டுவரும் விதமும், போர்க்குற்றங்களை மறைக்க அது முயன்றுவருவதும் எதனால்?

நன்றி தமிழ்நெட் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.