Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை இன்னும் தீரவில்லை ! – புலம் பெயர் தமிழரின் ஆதங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

north-tamils-140x140.jpg

இலங்கையின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வகிஸ்வர விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை நியாயப்படுத்த முயல்வதாக கனடாவின் இணையத்தளம் ஒன்றில் தமிழர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கே தரப்படுகிறது,

இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் போர்க்குற்றங்களைச் செய்துள்ளதை உயர்ஸ்தானிகர் தனது கருத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இருந்த போதும் ஒரு கிளர்ச்சிக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தினை பொதுமக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கு ஒரு சாட்டாகக் கொள்ளமுடியாது என அந்த இணையத்தளம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

இலங்கை சமூகங்கள் அனைத்தும் ‘சமாதானம் விரும்பிகள்’ என்ற செல்வி வகிஸ்வரவின் கருத்து ஒரு மோசமான கேலியாகும். இலங்கையின் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பாரியளவு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக் காணப்படுகின்றது.

2009 மேயில் விடுதலைப் புலிகளின் சரணடைவிற்குப் பின்னர் இவர்களால் தமிழர்கள் தொந்தரவிற்கு உள்ளாக்கப்படுவதோடு தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டும் வருகின்றன.

இரு தமிழ் மாகாணங்களின் ஆளுநர்களுங் கூட போர்க்குற்றஞ் சாட்டப்பட்ட இராணுவ ஜெனரல்களாக உள்ளனர். தமிழ் அரச அலுவலர்கள் சிங்களவர்களால் மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் தமிழர் காணிகளில் தெற்கிலிருந்து சிங்களவர்களை இராணுவத்தின் உதவியுடன் குடியேற்றம் செய்கின்றது.

300,000 தமிழர்கள் தடுப்பு முகாம்களில் மந்தைகளைப் போல வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இன்னும் சிலர் முகாம்களில் வாடுகின்றனர்.

நாட்டைவிட்டுச் சென்ற ஒரு மில்லியன் தமிழர்களுக்கு அவர்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு புதிய சட்டமொன்றை அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்படுத்தியிருந்தார்.

உண்மையை மறைப்பதற்காக தமிழ் மாகாணங்களுக்குள் சுதந்திரமாக வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தெரிவுசெய்யப்பட்ட எழுத்தாளர்களே அனுமதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் அனைத்தும் ‘அமைதியாக’ உள்ளதென சர்வதேச சமூத்தினைச் சமாதானப்படுத்த இலங்கை அரசு பாரியளவு பணத்தினைச் செலவழித்து வருகின்றது.

1948 இல் சுதந்திரமடைந்த பின்னர், தமிழர்களின் வாக்குரிமைகளையும் குடியுரிமைகளையும் மொழியுரிமைகளையும் சமமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளையும் மறுக்கும் பல சட்டங்கள் சிங்களப் பெரும்பான்மையினரால் உருவாக்கப்பட்டு வந்தன.

1956, 1958, 1971, 1977 மற்றும் 1983களில் தமிழர்கள் மீது படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் சொத்துச் சூறையாடல்களும் சிங்களவர்கள காவற்றுறை மற்றும் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்பட்டன.

இது சிங்களப் பகுதிகளிலிருந்தும் நாட்டைவிட்டும் தமிழர்களைப் பெருமளவில் வெளியேற வைத்தது. பாதிக்கப்பட்ட தமிழ் இளையோர்கள் தமது கைகளில் ஆயுதமேந்தினர். இத்தகையதொரு குழுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.

போரில் இல்லாத நிலையானது தமிழர்களுக்கு சமாதானமல்ல. இவர்கள் கடத்தப்படுகின்றனர். சித்திரவதை செய்யப்படுகின்றனர். அவமானப்படுத்தப்படுகின்றனர். மூன்றாந்தரப்புப் பிரசைகளாக நடாத்தப்படுகின்றனர்.

ராஜபக்ச அரசினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பரிற்குத் தமிழர்களாகிய நாம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறி முடித்திருந்தார் இதன் ஆசிரியர்.

http://www.vanakkamn...in-sri-lanka-1/

இப்படியான கடிதங்களை ஊடகவியலாலர்கள் /அரசியல்வாதிகள் /மனிதநேய ஆர்வலர்களுக்கு எழுதுங்கள்.

எழுதவேண்டியது, எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டியது எமது தார்மீக கடமை.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.