Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் உள்ள அரச நிறுவனங்களுக்கு தெற்கில் இருந்து அதிகாரிகள் நியமனம்; திரை மறைவில் ஏற்பாடுகளைச் செய்கிறது அரசு

Featured Replies

யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்கள் பலவற்றுக்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் அரச நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

அரச நிறுவனங்களில் உள்ள உயர் பதவிகளுக்கே பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்கள் கூடுதலாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.இதன் மூலம் யாழ். மாவட்ட அரச நிர்வாகத்துக்குள் பெரும்பான்மை இனத்தவரின் அதிகாரத்தை அதிகரிக்கும் பணியை அரசு ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரகசியத் திட்டத்துக்கமைய சிங்களமாவட்டங்களில் உள்ள அரச திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெரும்பான்மை இன அதிகாரிகளை யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டு அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். அலுவலகத்துக்குத் தென் பகுதியில் இருந்து ஏழு பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனுராதபுரம், குருநாகல் ஆகிய பகுதிளைச் சேர்ந்த மூன்று பெண்களும் நான்கு ஆண்களுமாக இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

இவ்வாறு தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்குப் பெரும்பான்மை இன அதிகாரிகளை நியமிப்பதில் அரசு அவசர அவசரமாக மேற்கொண்டு வரும் முயற்சி குறித்துப் பலத்த சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்தியப் பிரதிப் பொது முகாமையாளராகப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு உதவிப் பிரதேச செயலர்களாகச் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்தின் அரச அதிபராகவும் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்களவர்களை இங்கு நியமிக்கும் அதேவேளை இங்குள்ள தமிழர்களைச் சிங்களப் பிரதேசங்களுக்கு நியமிக்கும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு செய்வதன் மூலம் நியமனங்கள் தொடர்பில் எழும் விமர்சனங்களைத் தவிர்க்க முடியும் என அரசு கருதுவதாக இலங்கை நிர்வாகச் சேவையின் மூத்த அதிகாரி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.

இந்த நியமனங்களால் எழப்போகும் மொழிப் பிரச்சினையால் மக்கள் தமது அத்தியாவசிய அவசரத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலையில் இந்தப் பெரும்பான்மை இனத்தவர்களின் நியமனம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழர் பகுதிகளில் இவ்வாறன நியமனங்கள் இன நல்லுறவை வலுப்படுத்த உதவாது எனவும் மேலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கவே வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=84490658522596346

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.