Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கில் நிரந்த இராணுவ முகாம் மற்றும் இராணு குடியிருப்பு உருவாக்கம் -பாராட்டுகிறார் கோத்தாபய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda%20Rajapakse.Brother_CI.jpg

2012 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய வடக்கு கிழக்கில் நிரந்த இராணுவ முகாம் மற்றும் இராணு குடியிருப்பு அமைக்கப்படுவது பாராட்டப்பட வேண்டியதென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் படையினரை நிரந்தரமாக நிலைக்கொள்ளச் செய்வதற்கு இதுபோன்ற தேவைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2012 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிடுகையில், தான் செயலாளரா கடமையாற்றும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி என்பவற்றிற்கு போதியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் அவர்களுக்கான நிதியொதுக்கீடு குறித்து பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் தான் திருப்தி கொள்வதாகவும், மகிழச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நிரந்த இராணுவ முகாம்கள் இருக்கவில்லை எனவும், படையினர் அங்கு தற்காலிகமான இடங்களிலேயே இருந்ததாகவும் குறபிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் காடுகளிலேயே கடந்த 30 வருடங்களாக படையினர் தங்கியிருந்து இந்த நாட்டிற்கு சமாதானத்தை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

எனவே யுத்தம் நிறைவடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் படையினரை அங்கு நிலையாக ஓரிடப்படுத்துவது, மிகவும் முக்கியமானதெ குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ இதற்காக இராணுவ முகாம் மற்றும் இராணுவ குடியிருப்பு அமைத்துக் கொடுப்பது தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளமையானது வரவேற்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பகுதியில் முப்படைகளின் தலைமையகம் ஒன்றை நிறுவுவது குறித்தும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்பச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்ன, இந்த பட்ஜெடில பெரிய பீசை முழுங்கபோறது கொத்திபாயா தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.