Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் இலங்கை மீதான பார்வை – பிரித்தானிய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் இலங்கை மீதான பார்வை – பிரித்தானிய ஊடகம்

ina%20alippu136.gifஇலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் இலங்கை மீதான பிரித்தானியாவின் நிலைப்பாடுகள் பற்றி பிரித்தானிய ஊடகம் ஒன்றில் வெளிவந்த கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கே தரப்படுகிறது.

இலங்கை என்பது வரலாற்று அடையாளங்களுடனும் ஒரு போர் இடம்பெற்ற கறையுடனும் உள்ள ஒரு நாடாகும். 2009 இல் போர் முடிவிற்கு வந்தபோது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பாரிய பகுதி அரசினால் கையகப்படுத்தப்பட்டது.

போரிற்குப் பின்னான இலங்கை சர்வதேச அரங்கிலிருந்து நழுவிவிட்டது. இதன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பற்றி எதுவும் தெரியாத நிலையிருந்தது.

இதுவொரு அரசியல் அக்கறையின்மை என்று கூறமுடியாது. இது அவரது சர்வாதிகாரத்தினைப் பாதுகாக்கும் அச்சம் என்றே கூறவேண்டும். ஆளப்படுபவர்களின் விருப்பத்தினால்தான் ஓர் அரசின் அதிகாரம் வரவேண்டுமே தவிர அச்சத்தினால் ஏற்படும் விருப்பத்தினால் அல்ல.

இந்த விருப்பம் ஓர் அடக்கப்பட்ட மக்களிடமிருந்து வந்தால் அந்த அரசினை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

இலங்கையில் நம்பத்தகுந்த எதிர்த்தரப்பு கிடையாது. போரை வென்றுகொடுத்த இராணுவ ஜெனரலான அதன் எதிர்த்தரப்புத் தலைவர் சரத் பொன்சேகா 2010 பெப்ரவரியிலிருந்து சிறையிலுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியின் சகோதரர்மீது குற்றஞ்சாட்டியதற்காக அவருக்குத் தற்போது 3 வருடச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்களால் நிரம்பியுள்ளது. ஒரு சகோதரர் (சரத் பொன்சேகாவால் குற்றஞ்சாட்டப்பட்டவர்) பாதுகாப்பமைச்சின் செயலாளர். இன்னொரு சகோதரர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், மற்றவர் பாராளுமன்றத்தின் பேச்சாளர்.

அவரது மூத்த மகனும் அவருக்குப் பின்னர் பதவியைத் தொடரக்கூடியவரென்றும் நம்பப்படும் நாமல் ராஜபக்ச 2010இல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் அவரது மருமகன் ஒருவர் ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக உள்ளார் எனவும் அக் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இங்கு அரசியல் முறை ஒழுங்கின்றிக் காணப்படுகின்றது. பாராளுமன்றத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினர் பற்றிய விபரங்களடங்கிய கோப்பு ஒன்று ஜனாதிபதியிடம் உள்ளது.

அவர்கள் யாராவது குற்றச்சாட்டுக்கள் பற்றியோ ஊழல்பற்றியோ கதைத்தால் அவர்களது பதவிகள் பறிபோய்விடும். முன்னாள் துணை அமைச்சர் மேர்வின் சில்வா ஒருபோதுமே அவர்களுக்கெதிரான கருத்தினைக் கதைத்ததேயில்லை.

அண்மையிற்கூட அரசின் கண்காணிப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதே கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி ஆலோசகர் ஒருவரைச் சுட்டுக்கொன்றிருந்தார்.

பெரும்பான்மையினத்தின் அப்பாவித்தனத்தை பத்திரிக்கைத் தணிக்கைகள் உறுதிப்படுத்திவிடுகின்றன. மறைமுகப் பெயர்களில் எழுதிவரும் பத்திரிகைக்காரர்கள் அடிக்கடி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதுடன் அவர்களது வாழ்க்கையும் செய்தியாக்கப்பட்டுவிடுமென்றும் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

எதிர்ப்புகள் இராணுவத் தலையீட்டினால் தடுக்கப்படுகின்றன. தற்போது அரசாங்கள் பல்கலைக்கழக மாணவர்களையும் இராணுவத்தின் சமூகத் திட்டத்தினைப் பழக்குகின்றது. ‘சிரமதானச் செயற்பாடுகள்’ என்ற கருத்தில் இவை நடாத்தப்படுகின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் அண்மையில் இந்த இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் முன்னாள் இராணுவத்தினரைப் பல்கலைக்கழக அதிகாரிகளாக நியமிப்பதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தது.

சுனாமி உதவிப்பணத்தினை மகிந்த ராஜபக்ச தனது அரசியல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தியதும் சர்வதேச அமைப்புகளால் போர்க்காலத்தில் ஏதிலிகளைச் சந்திக்கமுடியாத நிலை ஏற்பட்டிருந்ததும் அனைவருக்கும் தெரிந்ததே.

உண்மையில் ஒரு குறிப்பிட்ட முகாமில் 30,000 பேர் பட்டினியால் வாடியிருக்கையில் 6000 தமிழ் மக்கள் மட்டுமே இருந்ததாகக் கூறக்கூடியதாயிருந்த நிலையையும் இது ஏற்படுத்தியிருந்தது.

தற்போது இடம்பெற்றுவரும் புனர்வாழ்வுத் திட்டங்கள் நாடெங்கிலும் தமிழர்களைப் பரவலாக்குவதாகவே உள்ளன.

இதனால் பாரியளவில் தமிழ்க்குழுக்கள் இல்லாமல் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை அவர்களால் தெரிவுசெய்யமுடியாத நிலையும் அரசியல் துயரங்களுக்கெதிராகக் குரல்கொடுக்கமுடியாத நிலையும் ஏற்படுத்தப்படும்.

பிரித்தானியாவில் கடந்த டிசம்பரில் ஒக்ஸ்போட் ஒன்றியம் ஜனாதிபதி ராஜபக்சவினை மாணவர்களுடன் பேசுமாறு அழைத்திருந்தது. பிரித்தானிய வெளியுறவுத் துறைச் செயலகம் போரின்போது சித்திரவதை செய்த இரு தமிழ்ப் பெண்களை நாட்டிற்குத் திருப்பியனுப்பியிருந்தது.

இவர்கள் தமிழ் அரசியல் அமைப்பான புளொட்டினால் உறுதிப்படுத்தும்படி அனுப்பப்பட்டிருந்தனர். இதுபோல ஆம்ஸ்ரடாமின் தூதுவரும் தமது புதிய வர்த்தக நண்பனின்மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்த மறுத்திருந்தார்.

இதுபோலவே சீனாவும் இந்து சமுத்திரத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இலங்கையின் துறைமுகங்களிலும் இயற்கை வளங்களிலும் முதலீடு செய்துவருகின்றது.

இவ்வாரத்தின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய சமஸ்டி சட்டவாளர் றொபேட் மக்கிளெலான்ட், மெல்போணைச் சேர்ந்த ஒருவரால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் வன்முறைகளுக்கு எதிராக போடப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்திருந்தார்.

கொழும்பில் ஒரு எதிர்ப்புக் கிளம்பவேண்டிய தேவையுள்ளது. ஆனால் அது சர்வதேச சமூகம் ராஜபக்ஷவினை ஒரு சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுத்துச்சென்று, பொருளாதாரத் தொடர்புகளை நிறுத்தி, மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தாலே அன்றி சாத்தியமாக இருக்காது என்பது திண்ணம் என்று அந்த இணையத்தள கட்டுரை தெரிவிக்கிறது.

நன்றி -ஈழ தேசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.