Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவட்டத்திற்கு மாவட்ட குறைகாண்பதை விடுத்து, கூட்டமைப்பில் இருக்கும் குறைகள் திருத்தப்படுமா?

Featured Replies

கடந்த 2009 ஆம் ஆண்டிருந்து இன்றுவரைக்கும் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தவறு இழைத்துத்தான் வருகின்றது. முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா மேற்கொண்ட இனப்படுகொலைக்கு பின்னர் தமிழ் மக்கள் தலைமையின்றி அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். என்ற எண்ணத்திலிருந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீளவேண்டும்.

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உபதவிசாளர் படைத்துணைக்குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாகவும், அது தமிழர்க்கு இழைத்த தவறு என்று கூறினால், நேற்று (22-11-2011) நாடாளுமன்றத்தில் மஹிந்தாவும், அவரின் கூட்டங்களுடன் நாடாளுமன்றத் தொகுதியில் தேனீர் அருந்துவதை எவ்வாறு சொல்வது? கொழும்பில் கூட்டமைப்பு தலைமைகள் தேனீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டால் அது அரசியல் ராஜதந்திரம்?.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் கட்டம் திறந்து வைப்புக்கு வருகை தந்த தொலைத்தொடர்பு அமைச்சரின் வைபவத்தில் கலந்து கொள்ள சென்றர். அங்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தமிழீழ விடுதலைபுலிகளின் பெரும் முயற்சில் உருவாக்கப்பட்ட அமைப்பு "தமிழ் தேசிய கூட்டமைப்பு" இன்று கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தை மறந்து, தமிழர் போராட்டத்திற்கு எதிரானவர்களுடன் கூட்டிணைந்து கொண்டு, தமிழர் போராட்டத்தையே இழிவுபடுத்தும் பேச்சுக்களையும், தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை அவமதிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றர்.

அதேவேளை இக்குற்றச் சாட்டுகளை அம்பாரை மாவட்ட கிளை எனும் பெயரில் தமிழ் வின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது எமது ஊடகப்பிரிவு அம்பாரை மாவட்ட தமிழ் கூட்டமைப்பின் இரு கிளைகளையும் தொடர்பு கொண்ட போது இவ்வாறான எவ்வித அறிக்கைகளையும் தாம் வெளியிடவில்லை என அவர்கள் மறுத்து விட்டனர் , இது இவ்வாறு இருக்க ஆதரமற்ற இடங்களில் இருந்து வரும் செய்திகளை தாம் வெளியிட வேண்டாம் என தமிழ் கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட கிளை ஊடகங்களை கோரியுள்ளது.

போராட்டத்தில் வெற்றி, தோல்வி ஏற்படுவது வழக்கம். ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட்டத்தை முடக்க உலக வல்லரசுகளின் உதவிகள் மூலம் பெறப்படும் வெற்றி ஒரு தற்காலியமானது.

சிறீலங்கா அரசாங்கம், தமிழர் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் அன்றி பயங்கரவாத செயற்பாடுகள் என்றே உலக நாடுகளில் திரையிட்டுள்ளனர். அதன் உண்மையை, இன்று அனைத்துலகம் நன்கு புரிந்து கொண்டு சிறீலங்காவின் முகத்திரையை கிழித்துவருகின்றது.

இவ்வாறான நிலையில், கூட்டமைப்புக்குள் ஒன்றுமை காணப்பட வேண்டும். எதிரி எங்களை விழித்துப் நோக்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழர் போராட்டத்தை சிதைக்கவும், குலைக்கவும் உளவாளிகளையும், துரோகிகளையும் உருவாக்கி தமிழர்க்குள் அனுப்பியுள்ளது சிறீலங்கா அரசாங்கம். தமிழரின் விடுதலையை நசுக்குவதற்காக அனைத்துலக நாடுகளின் வலையமைப்புடன இணைந்து முறியடிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளையில், தமது பலத்தை ஒன்றிணைப்பது அவசியம்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பும் பாவம். அவர்களும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழே தான் செயல்பட நிர்ப்பந்தம் போல..

இதில்.... இந்தியா என்ன நிகழ்ச்சி நிரல் வைத்திருக்குது எண்டு இந்தியாவுக்கே... இன்னும் தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பும் பாவம். அவர்களும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழே தான் செயல்பட நிர்ப்பந்தம் போல..

இதில்.... இந்தியா என்ன நிகழ்ச்சி நிரல் வைத்திருக்குது எண்டு இந்தியாவுக்கே... இன்னும் தெரியாது.

இந்தியாவிற்கு தெரிஞ்சால் ஏன் அது இப்படி ஒரு வலுவிழந்த கிழட்டு யானையாக படுத்து தூங்கபோகிறது.

இரானிய கொங்கிரஸ் குடும்பம் இந்தியாவை வளரவிடாது. முக்கியமாக தென்னிந்தியாவை.

அவர்களுக்கு குஜாராத் தான் இந்தியா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.